Skip to main content

Posts

காற்றலை வழியாக வீடு நிறைத்தவர்

கொஞ்சம் உங்கள் பழைய நினைவுகளை அசைபோடுங்களேன். அதாவது ஏகதேசம் தொலைக்காட்சி பெட்டிகள் நமது வீட்டின் அந்தஸ்தினை கூட்டிய காலங்கள். வானொலி என்னும் ஊடகம் விவிதபாரதி, ரூபவாஹிணி என்று மாயம் காட்டிய காலங்கள். குடும்பம் குடும்பமாக அதிகாலை வந்தே மாதரம் என்னும் வானொலியில் விழித்த காலங்கள். "பிரேக்கிங் நியூஸ்", பிளாஷ் நியூஸ்" என்று சொல்லி சொல்லியே எந்த செய்தியும் நம்மை சலனப்படுத்தாமல் மனம் மரக்கட்டையாக்கிய அநியாய செய்தி தொலைக்காட்சி சேனல்கள் இல்லாமல், செய்திகள் வாசிப்பது சிவராமன் என்று ஒரு குரல் செய்தியின் தன்மையை நம்மை உணர செய்திட்ட அந்த நல்ல காலம். எல்லா நாட்களிலும், எல்லா வீடுகளிலும் அநேகமாக காலை 7:25 மணிக்கு சமையலறையில் இருக்கும் அம்மாவிற்கும், பத்திரிகையில் முகம் பார்த்திருக்கும் அப்பாவிற்கும், நேற்றைய வீட்டு பாடத்தை அவசர அவசரமாக செய்யும் குழந்தைகளுக்கும், தாத்தா, பாட்டி என அனைவரின் காதுகளையும், சிந்தையையும் ஒருசேர சேர்த்த வானொலியின் "இன்று ஒரு தகவல்" சொன்ன முகம் தெரியாத அந்த குரல் ஒலித்த காலம். அந்தக் குரல் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுடையது. "அதாவது",...

உறங்குவது போலும் சாக்காடு.............................

அஞ்சலி: கு அசோகன் கோவையிலிருந்து தான் அந்த முதல் தகவல் எனக்கு வந்தது. அது ஆகஸ்டு 21ம் தேதி. இன்றைக்குச் சரியாக 12 நாள் முன்பாக. அது வேறு செய்தி. இன்ப அதிர்ச்சியான தகவல் அது. தோழன் அசோகனுக்குத் திருமணம் என்பது. 45 வயதைக் கடந்த நிலையில், எத்தனையோ பேரை ஈர்க்கும் இனிய தோழமை நெஞ்சம் படைத்த அந்த அற்புத மனிதன் குடும்பச் சூழலின்மீது பழி போட்டு பல்லாண்டுகளாக மறுத்து வந்த இல்லற வாழ்விற்கு உடன்பட்டார் என்பதே மகிழ்ச்சியாயிருந்தது. இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளரான அவரது பணியிடமும், வாழிடமும் என்னருகே சென்னை தலைமை அலுவலகத்தில்தான் என்றாலும், அவரது திருமணத் தகவல் அயலூரிலிருந்துதான் வந்தது. மெதுவாக அவரிடம் அணுகி ஏதாவது செய்தி உண்டா என்றால் ஒன்றுமில்லையே என்பதாக இருந்தது பதில். மறுநாள், 22ம் தேதி, பொறுக்க மாட்டாது, "ஏய் ஆகஸ்ட் 30ம் தேதி எனக்கு ஏதும் வேலை வைக்காதே, நான் வேறிடம் போக வேண்டியிருக்கும்..." என்று சொன்னபோது, திடுக்கிட்டவராய், "தோழர் உங்களுக்குத் தகவல் வந்திருச்சாம்........நானே சொல்லணும்னு காத்திருக்கேன். இன்னும் பத்திரிகை கூட அடிக...

அரசு ஊழியர்களின் ஒழுங்கு ...

நேற்று அந்த செய்தி பிரதானமாக தொலைக்காட்சிகளில், குறிப்பாகத் தனியார் தொலைக்காட்சிகளில் திரும்ப திரும்ப காண்பிக்கப்பட்டது. இன்று காலை (02.09.09) செய்திதாள்களிலும் (ஆங்கிலம்) முதல் பக்கத்தில் அதே செய்தி. என்ன அது? நமது நாட்டின் உள்துறை அமைச்சர் திரு. பங்குசந்தை சிதம்பரம் அவர்கள் டெல்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் BIO-METRIC வருகை பதிவேட்டினை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் உட்பட இனி ஒருவரும் தப்பிக்க முடியாது. கண்டிப்பாக இனி அவரது துறை அலுவலகத்திலுள்ள அனைவரும் 8 மணி நேரம் வேலை செய்யாமல் வீடு திரும்ப முடியாது. "புரட்சி", சிதம்பர சாகசம்" என்று ஊடகங்கள் புகழாரம் செய்கின்றன. இதை இந்தியா முழுமையும் அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள், வங்கிகள் பயன்படுத்தினால் அந்நியன் திரைப்படத்தில் ஒரு தாத்தா வெளிநாட்டிலுள்ள தன் மகனிடம் பேசுவது போல "உங்க ஊர் என்னடா பெரிய ஊரு, இந்தியாவைப் பாரு, சொர்க்கம்டா" என்கிற நிலை வரும் என்பது போல் ஊடகங்கள் அலறுகின்றன. சரி, மேற்சொன்ன செய்தியை எவ்வாறு பலரும் பார்ப்பார்கள்? வெகுவாரியாக தனியார் துறையில், முறை சாரா துறையில் பணி செய்பவர்கள் இந்த செய்தி உண்மையா...

முதல் ஆசிரியர்களை உருவாக்கிய முகாம்

நடுங்கும் குளிர், கான்கிரீட் கட்டடத்தின் அனைத்து ஜன்னல்களும் மூடப்பட்டிருக்கிறது. நேரம், இரவு 10.00 மணியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உள்ளே சகல குளிர்கால உடைகளோடு 18 ஆசிரியர்கள் வட்டமாக அமர்ந்து தீவிர ஆய்வு நோக்கில், தத்தமது கருத்துகளை, ஒருவர் பின் ஒருவராக, முன்வைத்து வருகின்றனர். ஒருவர், அமைதியாக நகர்ந்து என் அருகில் வந்தார். “சார், கூட்டம் முடியும் போது உறுதிமொழி ஒன்று எடுத்துக்கொள்ள விரும்புகிறோம்’’ என்றார். உறுதிமொழியின் சாரம், “புத்தக வாசிப்பு முகாம் முடிந்து, பள்ளிக்கு திரும்பியதும் என் பள்ளியில், முதல் ஆசிரியனாக முன்மாதிரி ஆசிரியனாக, ‘முதல் ஆசிரியர்’ நாவலில் வரும் துய்சேனைப் போன்ற ஆசிரியனாக விளங்குவேன் என இன்றைய நாளில் சபதமேற்கிறேன்.’’ என்பதே. 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 12, 13 தேதிகளில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்டக்கிளை ஏற்பாடு செய்திருந்த புத்தக வாசிப்பு முகாமில்தான் மேற்படி உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. முகாமின் நோக்கம், கல்வி சார்ந்த நூல்களை ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்வதும், மாற்றுக்கல்வி குறித்த சிந்தனையைத் தூண்டுவதுமே. முதல் நாள் இரவே எங்கள் எண்ணம் ஈடேறிய...

ஆசிரியர் என்கிற ஆளுமை

"ராஜு, என்னப்பா பார்த்து ரொம்ப நாளாச்சு, எங்கே போனே?" "அது ஒண்ணும் இல்லப்பா, நம்ம ஜேம்ஸ் வாத்தியார் இல்லே, அவருக்கு மேலுக்கு முடியாம இருக்காரா, ஒரு எட்டு பார்த்துட்டு வர்ற ஈரோடு போயிருந்தேன்". "ஏன்ப்பா உனக்கு இந்த வேண்டா த வேலை. அந்தாளு உன்னை எத்தனை தடவை அடிபின்னியிருப்பாரு. அவர் சிரிச்சு ஒரு நாளாவது பார்த்திருப்போமா?" "அது ஒண்ணும் இல்ல சங்கர், அவர் என்னை அடிச்சு துவைச்சது என்னவோ உண்மதான். ஆனா, நான் இப்படி இருக்கேனா அதுக்கு அவரும் ஒரு காரணம் தெரியுமா". ===================================== "மச்சி, உனக்கு விஷயம் தெரியுமா?, நம்ம கணக்கு சுந்தரம் வாத்தியாரை நேத்து எவனோ வண்டியிலே இடிச்சுட்டு போயிட்டானாம், நல்ல அடியாம்" "அட பாவமே" "டேய் என்னடா, பாவமேன்னு சொல்றே. அவரெல்லாம் ஒரு வாத்தியார்ன்னு சொல்றதுக்கே அவமானமாயிருக்கு. ஒரு நாளாச்சும் ஒழுங்கா பாடம் நடத்தியிருக்காரா. எப்பப் பாரு வட்டி, பிஸினஸ்ன்னுட்டு. அவருக்கு நல்லா வேணும்டா" மேற்சொன்ன உரையாடல்களை நம்மில் அநேகரும் பேசியிருக்கக் கூடும். பள்ளி/கல்லூரி முடிந்து ஆண்டுகள் உருண்...

தொடர்ந்து தோற்கும் என் அம்மாவிற்கு....

அன்பு அம்மாவிற்கு, என்ன நல்லா இருக்கீங்களா? வீட்டில எல்லாரும் சௌக்கியமா? தங்கச்சி வந்துச்சா? கொஞ்ச நாளா உங்ககிட்டேயிருந்து வருகிற தொலைபேசி அழைப்புகளையும், உங்களை நேரில் சந்திப்பதையும் தவிர்த்து விடுகிறேன் என்பது உண்மைதான். என்ன செய்றது? எனக்கு வேற வழியில்ல, அதான். அம்மா, எனக்கு இந்த கடிதத்தைத் தவிர வேறு வழி தெரியலே, என்னோட வேதனையை சொல்றதுக்கு. யார் கிட்ட சொல்ல முடியும்? அம்மா, எனக்கு ஆச்சரியமா இருக்கு. ஒரு தாய் எப்படி தன் மகன் தோல்வி அடையணும் என்று எதிர்பார்க்கிறாள்? நினைக்கவே பயமாயிருக்கு. ஆமாம்மா, எனக்கு தோல்விதான் தொடர்ச்சியாக. என் மனைவி, மக்கள் என்ற ஒரு கட்டத்திற்கு வந்தபின்னும் அவர்கள் சம்பந்தமான முடிவினை எடுக்க முயலும்போதெல்லாம் எனக்கு தோல்விதான் ஏற்படுகிறது. முதலில் மனைவி, இப்போது நீங்கள். அம்மா, நீங்களே எங்கிட்ட அடிக்கடி சொல்லியிருக்கீங்க‌, உங்களுக்கு என்னைத்தான் ரொம்ப பிடிக்கும். நான் நல்லா வருவேன்னு முன்கூட்டியே ஜோசியம் சொன்னவங்க நீங்கதான். அப்படியே நான் இப்ப எல் ஐ சியில ஒரு நல்ல வேலையில இருக்கேன். ...

மனிதம் மறைந்த பொழுதில்..............

மனித குல நாகரிக வளர்ச்சியில் நாம் நெடுந்தூரம் பயணித்துவிட்டோம் என்று நினைக்கும் போதெல்லாம் இது நிகழ்ந்துவிடுகிறது. மனித இனத்தின் பண்பாட்டு கலாச்சார வளர்ச்சியில் இது போன்ற நிகழ்வுகள் நம்மை பின்னுக்கு இழுக்கிறது. 30 வருட பெருமைமிகு வளர்ச்சி என்பதை குலைப்பதற்காக மேற்கு வங்கத்தில் மனித வடிவில் விலங்குகளினும் கீழானவர்கள் நடத்தும் வெறியாட்டம் ஜூன் 10ல்தான் தொடங்கியது. மேற்கு வங்க "லால்கர்" பகுதியில் அம்மாநில முதல்வர் தோழர் புத்ததேவ் மீது கடந்த ஆண்டு மாவோயிஸ்டுகளால் நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதல் தோல்வியில் முடிந்தது. அப்போது அம்மாநிலத்தின் வீரமங்கை மம்தா பானர்ஜி அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை, மார்க்சிஸ்ட் கட்சி பொய் சொல்கிறது என்று ஒரு முழு பரங்கிக்காயை சோற்றுக்குள் மறைக்க முயன்றார். இதுபோன்ற பல உளறல்களுக்கும், விசித்திரமான செய்கைகளுக்கும் அவரது பெயர் பிரசித்தி பெற்றது. இப்போது அந்த பொய் பிகாஷ் என்ற மாவோயிஸ் ட் தலைவனின் விஷ நாக் கி ல் வழிந்து வெளிறி வி ட் டது. சென்ற திங்கட்கிழமை (15।06.09) அன்று இரவு 9 மணி அளவில் ndtv யில் தான் அந்தக் காட்சி முதன் முதலில் காண்பிக்கப்பட்டது....