தாழிடப்பட்ட கதவுகள் , தமிழ் சிறுகதை நூல் வரிசைகளில் நல்லதொரு வரவு . 25 ஆண்டு கால கோவை கலவரங்களின் பின்னணியில் எழுந்து வரும் அடுத்த படைப்பு . ஒவ்வொரு கலவரம் எனப்படுவையும் அந்த நிலத்தின் ஒடுக்கப்பட்ட அல்லது சிறுபான்மை சமூகத்தின் மீதான தாக்குதலாகவே இருக்கிறது. கோவை கலவரமும் அப்படியே . இந்துத்துவ தீய சக்திகள் பொருளாதார மேலாதிக்கத்திற்கான போட்டியில் பெரும்பான்மையான இந்துக்களை அதுநாள் வரை இணக்கம், சகோதரத்துவம் பாராட்டியிருந்தவர்களை சிதைத்து எதிரிகளாக மாற்றுவது கோவை, குஜராத், மும்பை என நெடுக நடந்திருக்கிறது. தாழிடப்பட்ட கதவுகள். கதவுகள் என்றிருந்தாலும் அவை திறந்திருக்கும்போதுதான் அங்கே மகிழ்ச்சி, இயல்புத்தன்மை இருப்பதாக தமிழ்ச்சமூகம் நம்புகிறது என நினைக்கிறேன். ஒரு வீடு தாழிட்டு இருந்தால் அங்கே ஏதோ சரியில்லையோ என சந்தேகிக்க வைப்பதும் உண்டு. இன்று அந்த நிலையில்லை. ஆனால், ஒரு 20 வருடங்கள் முன்பெல்லாம் வீடுகளின் கதவுகள் பகல் முழுவதும் திறந்தே இருக்கும். அவ்வகையில் தாழிடப்பட்ட கதவுகள் என பெயர்க்காரணமும் சிறப்பே. மரணங்கள் எல்லாக் கதைகளிலும். மரணங்கள் கலைத்