எப்போதும் போலத்தான் அன்றும் அபிகுட்டி ஒரு கேள்வி கேட்டது. ஒரு போக்குவரத்து சிக்னலில் வண்டியுடன் காத்திருந்த அந்த அரும்பொழுது. “ஏம்ப்பா, அவர் யாரு? ”, “ அவரா பிச்சைக்காரர்ம்மா ”. உடனே அடுத்த கேள்வி, “அவர் ஏன் இப்படி இருக்காரு ”, “ அவர் அப்படித்தான்ம்மா, அவருக்கு வேலை செய்ய முடியாது அதனாலதான் மற்றவங்ககிட்ட காசு வாங்கி அந்தக் காசுல சாப்பாடு வாங்கி சாப்பிடுவார்ம்மா ”. இப்படித்தான் குழந்தைகள் ஒரு கேள்விக்கு அவர்கள் திருப்தியடைகிற பதிலை நாம் சொல்லிவிட்டால் கேள்விகளை சரம்சரமாக தொடுப்பார்கள். அப்படி தொடரும் கேள்விகள் நம்மால் விடை காண இயலாவிட்டாலோ அல்லது அவர்களுக்கு புரியும்படி சொல்லத் தெரியாவிட்டாலோ பட்டென்று அறும். “அவர் எப்பப்பா வேலை முடிப்பாரு, அவர் வீடு எங்கிருக்கு, எனத் தொடங்கி அவர் பசங்கள் எல்லாம் எந்த ஸ்கூல்ல படிப்பாங்க? என்ற கேள்விக்கு என்ன சொல்வது என விளங்காமல் நான் விழி பிதுங்கி நிற்க அபிக்குட்டி ” ச்சே, போப்பா“ என்ற ஒற்றை முனகலுடன் கேள்விகளை அப்போதைக்கு முடித்துக்கொண்டது. எனக்குத்தான் மிகப் பாவமாக போய்விட்டது. ஆமாங்க, அவருக்கு குடும்பம் என்ற ஒன்று இருக்கிறதா? அப்படி இருந்த