இதோ இன்றும் ஒரு செய்தி மதிய உணவு இடைவேளையில் நம் தொண்டையை அடைத்து உணவு இறங்க மறைத்தது. அது திருச்சி மாவட்டம் துறையூரில் ஒரு குழந்தை பள்ளி வாகனத்தில் இருந்து விழுந்து இறந்துவிட்டது. கடந்த சில மாதங்களில் இது எத்தனையாவது முறை என்ற எண்ணிக்கை ஆராய்ச்சியில் இறங்கிவிட்டு ஒரு உச் கொட்டுதலோடு மீண்டும் நம் வேலை பார்ப்போம். தமிழக ஊடகங்களுக்கு ஆகா, இன்றொரு செய்தி கிடைத்துவிட்டது என்ற நிம்மதி உணர்வு. இந்திய ஊடகங்களுக்கு அமிதாப்புக்கு தலைவலி வந்தால் மட்டுமே தலைப்பு செய்தி. எங்கோ ஒரு மூலையில் நேரும் குழந்தை இறப்பென்பது செய்தியல்ல. ஏன் இப்படி? நம் வீட்டு குழந்தை லேசாக மூக்கு உறிஞ்சினாலே பிரபல டாக்டரை பார்த்து ஒரு 200 ரூபாயை அழுதுவிட்டுதானே மறுவேலை பார்க்கிறபோது, ஒரு குழந்தை இறப்பு என்பதை, இதில் நம் இனம், நம் நாடு என்ற அடையாளங்களுக்குக் கூட விலக்கில்லாமல் நம்மால் யதார்த்தமாய் ஒரு குற்ற உணர்வு கூட வேண்டாம், குறைந்தபட்ச அனுதாப உணர்வு கூட இல்லாமல் கடக்க முடிகிறது? உணர்வுகள் மறத்த ஊனமான யந்திரன்களாக ஏன் நாம் இருக்கிறோம்? நம் தேசத்தில் ஒர