நியாய விலைக் கடைகளில் பொருட்களுக்கு பதிலாக பணமாக கொடுக்கப்படும் என்பது... நியாய விலைக்கடைகளை அரசு நடத்துவது என்பதே பொருட்கள் வெளிச்சந்தையில் நியாய விலைக்கு கிடைப்பதில்லை என்கிறபோது அரசு பொருட்களுக்கு பதிலாக பணம் கொடுப்பது என்பது வெளிச்சந்தையில் பொருட்களை அதிக விலைக்கு கொடுத்து வாங்கும் மோசமான நிலைக்கு மக்களை தள்ளும். வெளிச்சந்தையில் பொருட்கள் பதுக்கப்படுவதை குறைக்கவுமே அரசு தொடர்ந்து நியாய விலைக்கடைகளை நடத்தி வருகிறது என்ற நிலையில் தற்போது அரசு பொருட்களுக்கு பதிலாக பணம் தருவதென்பது மேலும் வெளிச்சந்தையில் பொருட்கள் பதுக்கப்படுவதை அரசே ஊக்குவிப்பதாக இருக்கும். புதுவையில் தானே புயல் தாக்கப்பட்டபோது புதுவை அரசின் பான்லே பால் அதன் பார்லர்களில் மட்டுமே அதன் உரிய விலையில் கிடைக்க, வெளிச்சந்தையில் ஈவு இரக்கமில்லாமல் ரூ. 40க்கும் ரூ. 50க்கும் விற்றதே இதற்கு சாட்சி. நியாய விலைக்கடை என்பது வெளிச்சந்தையில் பொருட்களின் விலைவாசி ஏறும்போதும், சாதாரண மக்களுக்கு அதன் பாதிப்பினை தவிர்த்து மக்களை காக்கும் அருமருந்தாக இருக்கும்போது, பொருட்களுக்கு பணம் என்ற நிலை வந்தால் நாளும் ஏ