
தமிழ்நாட்டு அறிஞர், எழுத்தாளர் பலர், மற்ற துறைகலில் ஆர்வம் காட்டுமளவுக்கு விலங்கியல் மற்றும் இயற்கை வரலாறு குறித்து ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில், அவையே மனித நல்வாழ்வின் பொதுத் தேவை என் இன்னும் அவர்களால் உணர்ந்து கொள்ளப்படவில்லை போலும். குறிப்பாக 'டிஸ்கவரி, அனிமல் பிணானட், நேஷனல் ஜியாகரஃபிக், போகோ போன்ற சானல்கள் தமிழக வீடுகளுக்குள் வந்துவிட்ட பிறகும்கூட, நமது சிந்தனைகளின், செயல்பாடுகளின் நிலை மிகவும் வருந்ததக்கதே. நம்மில் உணர்வு கொண்டோரை கேள்விக்குள்ளாக்கி, புரட்டிப் போடும் மேற்கண்ட காட்சிப்படிம சானல்கள் குழந்தைகளுக்கானது என்று நமது 'பெரியவர்கள்' சொல்வதும் மிகுந்த வேதனைக்குரியது. ........................
ஒரு 40 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்த வனப்பகுதி ஒன்று மனிதத் தலையீட்டால் அழியும் போது 1500 வகை பூக்கும் செடி, கொடிகளும், 700 வகை மரங்களும், 150 வகைப் பூச்சி, புழுக்களும், 100 வகை ஊர்வனவும், 60 வகை நீர் நில வாழ்விகளும் அழிந்து போகின்றன என்றும், ஒரு மழைக்கானக மரம் 400 வகைப் பூச்சிகளுக்க்கு வாழிடமாக இருக்கிறது என்றும் ஐ.நாவின் சுற்றுச் சூழல் அறிவிக்கை ஒன்று சுட்டிக் காட்டுகிறது. இதையெல்லாம் சமன் செய்திட மேற்கண்டொர் மனிதரை நம்புகிறார்களா? அல்லது கடவுளையா?
காலங்காலமாக ஆங்கிலம் தெரிந்தவர், ஆங்கிலம் தெரியாதவரை ஏய்த்து வருவது அல்லது ஆளுமை செலுத்துவது இன்னும் மேலோங்கியே இருக்கிறது. இது இயற்கையியல் துறையிலும் உச்சத்திலிருப்பது, உண்மையைத் தேட விரும்பும் சாதாரண மக்களுக்கு ஒரு பெரும் தடைகல்லாகும். ஆகவே மக்களின் இயர்கையான வேகத்தைக் கட்டுப்படுத்த அதிகார வர்க்கம் எப்போதும் ஒரு அந்நிய மொழியையே அறிவியலிலும் பின்பற்றுவது கூரிய உள்நோக்கம் உடையதே. ..................
............... இயற்கை நேயம் என்பது மேட்டுகுடி மக்களின் பொழுதுபோக்கு அல்ல, பொது மக்களின் புறச்சூழலறிவு என்பதை புரியவைக்க வேண்டும். அதற்கேற்றவாறு புழங்க கலைச்சொற்களை மீட்க வேண்டும், உயிரினங்களின்றி நாமில்லை என்ற கணக்கீட்டை மக்களும் உணர்த்த வேண்டும், முறையாக அவை நுகரப்பட வேண்டும், இவற்றுக்காக பாடுபட நாம் அணியமாக வேண்டும் என்பனவே இந்நூலின் அடித்தளம்.
"எழுத்தைக் குறை, பட்த்தை அதிகரி' என்ற பழைய ஐரோப்பியக் கருத்தியலை தமிழில் நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் இந்நூல், அரிய நூலல்ல என்றாலும் தமிழ்ச் சூழலில் ஒரு அரிய முயற்சியாகும். 16 தலைப்புகளில் அன்றைய, இன்றைய சூழல்களின் பன்முகப் பார்வையோடு, யானைகள் பற்றிய ஒரு கருத்தமைப்பாக, எல்லோரும் உயிரினங்கள் மீது ஒரு மறுபார்வை பெற வேண்டும் என்ற நோக்கில் இதை உருவாக்கியிருக்கிறோம். பறவையையோ, யானையையோ, மற்ற எந்த ஒரு உயிரினத்தையோ, நினைத்தவுடன், புதிய படிமங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் இந்நூல் வழியே மக்களை வேண்டுகிறோம். ஏனெனில் வரலாற்றுக் காலம் முதல் இன்று வரை, மிகப் பலமுறை யானை, புலிகளை மனிதர்களே கொண்று வருகின்றனர். மாறாக சில முறைகளே யானையும், புலியும் மனிதரைக் கொன்றிருக்கின்றன. ..............
யானைகள் அழியும் பேருயிர்
இயற்கை வரலாற்றுச் செவ்வியல்
ச.முகமது அலி க. யோகானந்த்
மலைப்படுகடாம் பதிப்பகம், 65, வேளாங்கண்ணி காரமடை சாலை, மேட்டுப்பாளையம் - 641 301.விலை : 100.00
Comments