கம்யூனிஸ புரட்சி நடைபெற்று விடுதலை அடைந்த நாடுகள் எல்லாவற்றிலும் புரட்சி அரசு நடத்திய முதல் அரசியல் நிகழ்வு ”அனைவருக்கும் கல்வி”. ரஷ்யா தொடங்கி கியூபா வரையிலும் அதுவே முக்கிய முதல் நிகழ்வு. அதிலும் கியூபாவின் அனைவருக்கும் எழுத்தறிவு திட்டமும் செயலாக்கமும் வியப்பளிப்பவை, அனைவருக்கும் உதாரணமாக விளங்க கூடியவை. விடுதலை கிடைக்கின்ற போது வெறும் 40 சதம் மட்டுமே இருந்த அந்நாட்டின் எழுத்தறிவு புரட்சி நடைபெற்ற ஓராண்டில் – ஒன்றரையாண்டில் 100 சதமாக ஐக்கிய நாடுகள் சபையால் ஆய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. தன் நாட்டு குடிகள் அனைவரும் எழுத்தறிவு பெற்றவர்களாக மாற்றிய உலகின் முதல் நாடு கம்யூனிச கியூபா. இது எப்படி சாத்தியம் ஆனது என்பது மிக சுவாரசியமான உண்மைக் கதை. வாருங்கள் நம் நாட்டில் எழுத்தறிவின்மையை இல்லாமல் ஆக்குவோம் என அழைத்த தோழர் பிடலின் குரலுக்கு அந்நாட்டின் இளைஞர்கள், மாணவ மாணவியர் என எல்லாரும் தயாராயினர். WE SHALL PREVAIL என கோஷம் முன்வைக்கப்பட கியூப தலைநகராம் ஹவானாவில் 50000 பேர் கையில் புத்தகத்தோடும், 10 அடி உயர மாடல் பென்சிலோடும், ஆம் நாங்கள் வெல்வோம் என பாடிய...