Nine Rupees An Hour – disappearing livelihoods of Tamil Nadu. இந்நூலின் ஆசிரியர் அபர்ணா கார்த்திகேயன் . இவர் பி . சாய்நாத் அவர்களின் மாணவி . இப்போதே ஊகித்திருப்பீர்கள் தானே ! ஆமா , இந்த நாட்டின் எளிய மனிதர்களும் அவர்களது வாழ்வும் , தொழிலும் அவர்கள் கலையும் தான் பேசுபொருள் . நூலின் அடிசரடாக இருக்கும் விஷயங்கள் எளிய மனிதர்களின் அயராத உழைப்பும் அந்த உழைப்பை உழைப்பாகவே அங்கீகரிக்காத பாங்கும் , அதை appropriate செய்யாத பொருளாதார பயன்களும் - பரம்பரை பரம்பரையாக பார்த்து வரும் தொழிலை தனக்குப் பின்னே கடத்த விரும்பயும் கடத்த துணியாத வாழ்வு நிச்சயமற்ற சூழல் - தனித்திறன் கொண்ட தொழில்கள் , அவைகளால் கிடைக்கும் அங்கீகாரம் ஆனால் வாழ்வு ஏற்றம் பெறாத பொருளாதாரம் என்பவனவே . அதே போல , ஏழை எளியர்களின் நாட்டுப்புறக் கலைகள் எனப்படும் அவர்களின் கலைஞானமும் , அக்கலைஞர்களின் அன்றாட வாழ்வும் அக்கலைகளுக்கும் அக்கலைஞர்களுக்குமான சமூக placing என்பனவும் இந்நூலில் பேசுபடு பொருளாக இருக்கிறது . இந்தியாவெங்கும் போலவே தமிழகத்திலும் விவசாயம் தொடர்து நட்டம் தரும் தொழிலாக மாறி அத்தொழிலின் பங்குதாரர்கள்...