Skip to main content

Posts

Showing posts with the label வாசிப்ப

கதிரேசன் செட்டியாரின் காதல்

ரொம்ப நாளாயிடுச்சு… இல்ல இல்ல ரொம்ப வருஷமாயிடுச்சு.. ஒரு துப்பறியும் நாவல் படிச்சு.. வாசிக்க துவங்கிய காலத்தில், சுஜாதா, அசோகன் பாக்கெட் நாவல் என எத்தனை எத்தனை படிச்சிருப்போம். ஹூம்ம். இப்ப போய் அதையெல்லாம் நினைச்சுப் பார்க்கிறதா என கூட சில சமயம் நினைச்சிருக்கேன். அதெல்லாம் ஒரு பெருமையா என.,., ஆனாலும் ஒரு துப்பறியும் நவீனம் ஒரு பத்து வருடம் முன்பு வந்திருக்கு என்றவுடனே பழைய நினைவின் எள்ளல்கள் எல்லாம் போய் உடனே ஆர்டர் செய்து வாங்கி படித்தும் முடித்துவிட்டேன்.   நான் வாசித்த துப்பறியும் நாவல்களில் இது வேறு ரகம். அதாவது துப்பறியும் ஹீரோ இல்லை, அந்த துப்பறியும் ஹீரோ காமெடியாக பேசுகிறேன் என பெண்களை இழிவாக கேலி செய்வதில்லை, ஆஹா இந்த ஹீரோ நல்லவர் அவரிடம் ராகவன் instinct என்ற ஒன்று உள்ளதே என வியக்கவும் இடமில்லை. அவ்வாறான வியப்பின் மூலம் வாசகராகிய நாம் துப்பறிவாளனாக மாறாமல் அங்கும் ஹீரோவிற்காக காத்திருக்கிறோம். சத்யஜித் ரேயின் பெலூடா நூல்கள் எல்லாம் துப்பறியும் மர்ம நாவல்கள் தான். ஆனால் அவை எல்லாம் நம்முள் ஒரு scandalous thing என்பது போல ஒரு எண்ணத்தை உருவாக்காது, வாசிக்கும் வாசகருக்கு எல்லா...