Skip to main content

Posts

Showing posts with the label உடல்நலம்

(காலைக்) கடன் பட்டார் நெஞ்சம் போல்..........

பொதுத்துறை நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் அந்தப் பெண்மணிக்கு திங்கட்கிழமை தொடங்கி சனி வரையிலும் அலுவலகத்தில் வேலை. ஞாயிறு தவறாமல் மருத்துவமனையில் போய் நிற்க வேண்டும். அவரது நான்கு வயதுக் குழந்தைக்காக. குழந்தைக்கு ஒரு நோயும் இல்லை. எந்தச் சிகிச்சையும் இல்லை. பின் எதற்காக....? வாரம் முழுவதும் வேறு எந்தக் குழந்தையைப் போன்றே சாதாரணமாக உணவு எடுத்துக் கொண்டாலும், விளையாடினாலும், படித்தாலும் ஒரு முக்கியமான செய்கையை மட்டும் அந்தக் குழந்தையால் செய்து கொள்ள முடியவில்லை. Bowels Clearance என்று சொல்கிறோமே அது. அதாவது குடலிலிருந்து கழிவுகளை அகற்ற முடிவதில்லை. அதற்காக வாராவாரம் 'இனிமா' கொடுத்து வேலையை முடித்துக் கொண்டிருந்தனர். அப்புறம் நண்பர் ஒருவரது ஆலோசனைப்படி மருத்துவர் ஒருவரை அணுகியிருக்கின்றனர். அவர் சொன்னாராம்: "தினமும் காலையில் எழுந்ததும் டாய்லெட்டில் உட்கார வையுங்கள் பார்க்கலாம்". அது வீண் வேலை என்றிருக்கிறார் குழந்தையின் தாய். "பரவாயில்லை. தினம் ஒரு பத்து நிமிடம் வீணாகவே போகட்டும். உட்கார்ந்து பார்த்துவிட்டு வரட்டும்...அது அவனது அன்றாடப் பழக்கம...

என் "இனிய" தமிழ் மக்களுக்கு..........

நவம்பர் 14: உலக டயாபடீஸ் தினம் என் "இனிய" தமிழ் மக்களுக்கு.......... எஸ் வி வேணுகோபாலன் நவம்பர் 14, குழந்தைகள் தினம் மட்டுமல்ல, உலக 'டயாபடீஸ் தினமும் கூட. டயாபடீஸ் என்ற சொல்லுக்கு சர்க்கரை நோய் என்று எழுதுவதற்குக் கைவர மறுக்கிறது. ஏனென்றால், சர்க்கரை நோய் என்பது முழுதும் சர்க்கரை தொடர்பானதுமல்ல, அந்தப் பிரச்சனை நோயும் அல்ல. நீரிழிவு பிரச்சனை என்று சொல்வது பரவாயில்லை போல் தோன்றுகிறது. பெயர் பொருத்தம் ஒருபுறம் இருக்கட்டும். விஷயத்திற்கு வருவோம். டயாபடீஸ் பிரச்சனை உள்ளவர்கள் பற்றிய பேச்சு ஊடகங்களில் எப்போதும் இருப்பது தான். இந்தப் பொருள் மீது ஒரு லட்சம் நகைச்சுவை துணுக்குகளாவது எழுதப்பட்டிருக்கக் கூடும். ஆனால், உலக தினமாக அது அனுசரிக்கப்படும் வேளையில், இதன் மீதான கவன ஈர்ப்பு அதிகமாக எழுகிறது. அப்படி பேசப்படுவதில் நல்ல அம்சங்களும் உண்டு. மிரட்டல் வேலைகளும் உண்டு. இப்படியான ஒரு உலக டயாபடீஸ் தினத்தன்று, தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் வந்தது. காட்சியின் துவக்கத்தில், ஒரு தேக்கரண்டியிலிருந்து சர்க்கரை கொட்டப்படுகிறது. அது கொட்டக் கொட்ட மலையாகக் கீழே நிறைகிறது. ...