Skip to main content

Posts

Showing posts from 2009

சமச்சீர் கல்வி அல்ல சமச்சீர் பாடதிட்டமே (பாகம் - 2)

சென்ற பதிவின் தொடர்ச்சி 6. வட இந்திய தலித் தலைவர்கள் பலரது பேச்சுக்களிலும், கட்டுரைகளிலும் தலித் மக்கள் முன்னேற்றத்திற்கு ஹிந்தி வேண்டாம்; ஆங்கிலம் தான் வேண்டும் என் கின்றனர். சமீபகாலமாக பல்வேறு அபத்த தீர்ப்புகளை சொல்லி வரும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கர்னாடக மா நிலத்தில் தாய்மொழி வழி கல்வி அமல்படுத்த முயன்றதை குறை சொல்லியிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, வசந்தி தேவி தொடங்கிய கல்வியாளர்களும், ஜன நாயக சக்திகளும் காலம் காலமாக தாய்மொழி வழி கல்விதான் சிறந்தது என்று வாதிட்டு வருகின்றனர். அரசு அறிவித்துள்ள சமச்சீர்கல்வி இது குறித்து என்ன சொல்கிறது? தாய், தவ்தை அல்லது குடும்பத்திலிருந்து குழந்தையின் பிறப்பு முதல் கற்றுக் கொள்ளும் மொழியே தாய் மொழி. இந்தத் தாய் மொழியே சிந்தனை மொழி. இதுவே படைப்பாற்றலுக்கு ஆணிவேர். உயிரைக் கொடுத்து ஆங்கிலம் மட்டும் படிக்க வைத்தால் அவர் நல்ல வேலைக்குக்கூட செல்லலாம். நல்ல வருவாய் ஈட்டலாம். ஆனால் நல்ல மனிதனாக, குடிமகனாக இருக்க முடியாது. நல்ல "ரோபோ"வாக இயங்க முடியும். சாதியத்தால் வதைபட்டு சீரழிந்து போயுள்ள தலித் மக்கள் ரோபோக்களாக மாறினாலும

சமச்சீர் கல்வி அல்ல சமச்சீர் பாடத்திட்டமே

அன்பு நண்பர்களே, வணக்கம். தமிழகம் முழுவதும் இப்போது சமச்சீர்க்கல்வி என்பது பரவலாகவும், விரிவாகவும் பேசப்படுகிறது. இருந்தாலும் சில சாதாரண கேள்விகளும் அதற்குரிய விடைகளும் காணப்படாமலேயே இருக்கிறது. ஒரு சிறு முயற்சியாக என்னுடைய சில சாதாரண கேள்விகளுக்கு தமிழ் நாடு அறிவியல் இயக்க ஈரோடு மாவட்ட செயலாளரும், பொருளாதார வல்லுனருமாகிய தோழர் ந.மணி அவர்கள் விடை சொல்லியிருக்கிறார். அவை : 1. தமிழக அரசால் மிக ஆர்பாட்டத்துடன் கொண்டு வந்திருக்கும் இந்த "சமச்சீர்கல்வி" உண்மையிலெயே சமச்சீர்கல்விதானா?" சமச்சீரான கல்வி (சமமான தரத்தில்) என்னும்போது, உயர்தரமான அவரவர்க்கு ஏற்ற அல்லது தேவையான கல்வியைக் குறிக்கப்பெறும். சமமான தரம் உருவாக்குவதும் செயற்படுத்துவதும் பாடத்திட்டம் மட்டுமல்லாது பள்ளி வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, அவர்தம் திறமை, பாட நூல்கள், தேர்வுமுறைகள், பள்ளி நிர்வாகம், ஆகிய பள்ளிக் கல்வியின் அங்கங்கள் அவற்றின் தொடர்பான யாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பெரும் திட்டம் என்பதில் ஐயமில்லை. கலைத்திட்டம், நன்கு பயிற்சி ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் மாணவர் விகிதம் இவற்றுள் ஏ

என் "இனிய" தமிழ் மக்களுக்கு..........

நவம்பர் 14: உலக டயாபடீஸ் தினம் என் "இனிய" தமிழ் மக்களுக்கு.......... எஸ் வி வேணுகோபாலன் நவம்பர் 14, குழந்தைகள் தினம் மட்டுமல்ல, உலக 'டயாபடீஸ் தினமும் கூட. டயாபடீஸ் என்ற சொல்லுக்கு சர்க்கரை நோய் என்று எழுதுவதற்குக் கைவர மறுக்கிறது. ஏனென்றால், சர்க்கரை நோய் என்பது முழுதும் சர்க்கரை தொடர்பானதுமல்ல, அந்தப் பிரச்சனை நோயும் அல்ல. நீரிழிவு பிரச்சனை என்று சொல்வது பரவாயில்லை போல் தோன்றுகிறது. பெயர் பொருத்தம் ஒருபுறம் இருக்கட்டும். விஷயத்திற்கு வருவோம். டயாபடீஸ் பிரச்சனை உள்ளவர்கள் பற்றிய பேச்சு ஊடகங்களில் எப்போதும் இருப்பது தான். இந்தப் பொருள் மீது ஒரு லட்சம் நகைச்சுவை துணுக்குகளாவது எழுதப்பட்டிருக்கக் கூடும். ஆனால், உலக தினமாக அது அனுசரிக்கப்படும் வேளையில், இதன் மீதான கவன ஈர்ப்பு அதிகமாக எழுகிறது. அப்படி பேசப்படுவதில் நல்ல அம்சங்களும் உண்டு. மிரட்டல் வேலைகளும் உண்டு. இப்படியான ஒரு உலக டயாபடீஸ் தினத்தன்று, தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் வந்தது. காட்சியின் துவக்கத்தில், ஒரு தேக்கரண்டியிலிருந்து சர்க்கரை கொட்டப்படுகிறது. அது கொட்டக் கொட்ட மலையாகக் கீழே நிறைகிறது.

மரணத்தை நோக்கி பேரணியாய் சென்ற மனிதன் (பாகம் ‍ 2)

இந்தப் பதிவு தாமதமாகி போனதற்கு மன்னிக்கவும். இனி தொடரவும். ......... ஜானுஸ் கோர்சாக்கின் பிறப்பு வளர்ப்பினை குறித்த வரலாற்றினை நான் சொல்லப் போவதில்லை. அவர் வாழ்க்கையை வடிவமைத்ததை மட்டுமே சொல்லப் போகிறேன். அதுதான் தேவையானது என்றே நான் மிகவும் நம்புவதால். ஐக்கிய நாடுகள் சபை 1979 ஆம் வருடத்தினை "உலக குழந்தைகள் வருடம்" என்று சொன்ன அதே நேரத்தில் " இது ஜானுஸ் கோர்சாக்கின் வருடம்" என்றும் கூறும் அளவிற்கு அவரது வாழ்க்கை இருந்தது. "நான் என்னை யாரும் அன்பு செய்யவோ, ஆதரிக்கவோ ஆசைப்படவில்லை, மாறாக நான் பலரையும் நேசிக்க அன்பு செலுத்தவே ஆசைப்படுகிறேன். எனக்கு எந்த உதவியும் யாரும் செய்யவேண்டியதில்லை. ஆனால் நான் இந்த பரந்துபட்ட உலகில் பலருக்கும் உதவுவதை கடமையாக நம்புகிறேன்" ‍ இவ்வரிகளின் மூலம்தான் நமக்கு கோர்சாக் அறிமுகமாகிறார். 1878ல் போலந்து நாட்டில் ஹென்ரிக் கோல்ட்ஸ்மித் என்ற மனிதனாக பிறக்கிறார் நம் கோர்சாக். 18 வயதில் தன் தந்தையை இழந்து கஷ்டப்படுகிற சமயத்திலும், படிப்போடு இரவு பொழுதுகளில் கதை, கவிதை, பாடல்கள் படைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இவரது 20வது வயதில்

மரணத்தை நோக்கி பேரணியாய் சென்ற மனிதன்

ஆகஸ்ட் 6, 1942. மனித குல வரலாற்றில் இதுவும் ஒரு மறக்க முடியாத(கூடாத) நாள். இடம். போலந்து நாட்டு வார்சா மாநகரம். நேரம்: காலை 7 மணி. சுமார் 192 குழந்தைகள் மற்றும் 10 மூத்தவர்கள். இதில் குழந்தைகள் நால்வர் நால்வராய் பிரிக்கப்பட்டு, குறிப்பிட்ட தூரத்தில் 10 மூத்தவர்கள் இடைவெளிவிட்டு பேரணியாய் நின்றிருந்தார்கள். நின்றிருந்த ஏவர் முகத்திலும் கவலையின் ரேகைகள் காணப்படவில்லை. பேரணி கிளம்பிற்று. முதலாய் ஒரு முதியவர் இரு கையிலும் இரு குழந்தைகள் ஏந்தி வழிகாட்டி சென்றார். வழி நெடுகிலும் மனித வெள்ளம், பெருங்கவலையுடனும் வியப்புடனும். பேரணி சுமார் ஒரு மைல் தூரம் கடந்தபோது மேலும் பல குழந்தைகள் நூற்றுக்கணக்கானவர் சேர்ந்தனர். சுமார் 4000 குழந்தைகள், மரணத்தை நோக்கி. ஆம், இங்கே இந்தியாவின் மோடி, சாவர்க்கர் கூட்டத்தின் போற்றுதலுக்குரிய ஜெர்மனியின் ஹிட்லரின் விஷவாயு மரணக்குகை நோக்கி. ட்ரெப்லின்கா என்கிற விஷவாயு குகை நோக்கிய ரயில் அடுத்த நரபலிக்கு கிளம்ப தயாராயிற்று. குழந்தைகள், பெரியவர்கள் என பெரும்பாலானோரும் பெருங்குரலெடுத்து அலறினர், கதறினர். ஆனால் அம்முதியவரும் அவரைச் சேர்ந்தவர்களும்

காற்றலை வழியாக வீடு நிறைத்தவர்

கொஞ்சம் உங்கள் பழைய நினைவுகளை அசைபோடுங்களேன். அதாவது ஏகதேசம் தொலைக்காட்சி பெட்டிகள் நமது வீட்டின் அந்தஸ்தினை கூட்டிய காலங்கள். வானொலி என்னும் ஊடகம் விவிதபாரதி, ரூபவாஹிணி என்று மாயம் காட்டிய காலங்கள். குடும்பம் குடும்பமாக அதிகாலை வந்தே மாதரம் என்னும் வானொலியில் விழித்த காலங்கள். "பிரேக்கிங் நியூஸ்", பிளாஷ் நியூஸ்" என்று சொல்லி சொல்லியே எந்த செய்தியும் நம்மை சலனப்படுத்தாமல் மனம் மரக்கட்டையாக்கிய அநியாய செய்தி தொலைக்காட்சி சேனல்கள் இல்லாமல், செய்திகள் வாசிப்பது சிவராமன் என்று ஒரு குரல் செய்தியின் தன்மையை நம்மை உணர செய்திட்ட அந்த நல்ல காலம். எல்லா நாட்களிலும், எல்லா வீடுகளிலும் அநேகமாக காலை 7:25 மணிக்கு சமையலறையில் இருக்கும் அம்மாவிற்கும், பத்திரிகையில் முகம் பார்த்திருக்கும் அப்பாவிற்கும், நேற்றைய வீட்டு பாடத்தை அவசர அவசரமாக செய்யும் குழந்தைகளுக்கும், தாத்தா, பாட்டி என அனைவரின் காதுகளையும், சிந்தையையும் ஒருசேர சேர்த்த வானொலியின் "இன்று ஒரு தகவல்" சொன்ன முகம் தெரியாத அந்த குரல் ஒலித்த காலம். அந்தக் குரல் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுடையது. "அதாவது",

உறங்குவது போலும் சாக்காடு.............................

அஞ்சலி: கு அசோகன் கோவையிலிருந்து தான் அந்த முதல் தகவல் எனக்கு வந்தது. அது ஆகஸ்டு 21ம் தேதி. இன்றைக்குச் சரியாக 12 நாள் முன்பாக. அது வேறு செய்தி. இன்ப அதிர்ச்சியான தகவல் அது. தோழன் அசோகனுக்குத் திருமணம் என்பது. 45 வயதைக் கடந்த நிலையில், எத்தனையோ பேரை ஈர்க்கும் இனிய தோழமை நெஞ்சம் படைத்த அந்த அற்புத மனிதன் குடும்பச் சூழலின்மீது பழி போட்டு பல்லாண்டுகளாக மறுத்து வந்த இல்லற வாழ்விற்கு உடன்பட்டார் என்பதே மகிழ்ச்சியாயிருந்தது. இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளரான அவரது பணியிடமும், வாழிடமும் என்னருகே சென்னை தலைமை அலுவலகத்தில்தான் என்றாலும், அவரது திருமணத் தகவல் அயலூரிலிருந்துதான் வந்தது. மெதுவாக அவரிடம் அணுகி ஏதாவது செய்தி உண்டா என்றால் ஒன்றுமில்லையே என்பதாக இருந்தது பதில். மறுநாள், 22ம் தேதி, பொறுக்க மாட்டாது, "ஏய் ஆகஸ்ட் 30ம் தேதி எனக்கு ஏதும் வேலை வைக்காதே, நான் வேறிடம் போக வேண்டியிருக்கும்..." என்று சொன்னபோது, திடுக்கிட்டவராய், "தோழர் உங்களுக்குத் தகவல் வந்திருச்சாம்........நானே சொல்லணும்னு காத்திருக்கேன். இன்னும் பத்திரிகை கூட அடிக

அரசு ஊழியர்களின் ஒழுங்கு ...

நேற்று அந்த செய்தி பிரதானமாக தொலைக்காட்சிகளில், குறிப்பாகத் தனியார் தொலைக்காட்சிகளில் திரும்ப திரும்ப காண்பிக்கப்பட்டது. இன்று காலை (02.09.09) செய்திதாள்களிலும் (ஆங்கிலம்) முதல் பக்கத்தில் அதே செய்தி. என்ன அது? நமது நாட்டின் உள்துறை அமைச்சர் திரு. பங்குசந்தை சிதம்பரம் அவர்கள் டெல்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் BIO-METRIC வருகை பதிவேட்டினை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் உட்பட இனி ஒருவரும் தப்பிக்க முடியாது. கண்டிப்பாக இனி அவரது துறை அலுவலகத்திலுள்ள அனைவரும் 8 மணி நேரம் வேலை செய்யாமல் வீடு திரும்ப முடியாது. "புரட்சி", சிதம்பர சாகசம்" என்று ஊடகங்கள் புகழாரம் செய்கின்றன. இதை இந்தியா முழுமையும் அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள், வங்கிகள் பயன்படுத்தினால் அந்நியன் திரைப்படத்தில் ஒரு தாத்தா வெளிநாட்டிலுள்ள தன் மகனிடம் பேசுவது போல "உங்க ஊர் என்னடா பெரிய ஊரு, இந்தியாவைப் பாரு, சொர்க்கம்டா" என்கிற நிலை வரும் என்பது போல் ஊடகங்கள் அலறுகின்றன. சரி, மேற்சொன்ன செய்தியை எவ்வாறு பலரும் பார்ப்பார்கள்? வெகுவாரியாக தனியார் துறையில், முறை சாரா துறையில் பணி செய்பவர்கள் இந்த செய்தி உண்மையா

முதல் ஆசிரியர்களை உருவாக்கிய முகாம்

நடுங்கும் குளிர், கான்கிரீட் கட்டடத்தின் அனைத்து ஜன்னல்களும் மூடப்பட்டிருக்கிறது. நேரம், இரவு 10.00 மணியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உள்ளே சகல குளிர்கால உடைகளோடு 18 ஆசிரியர்கள் வட்டமாக அமர்ந்து தீவிர ஆய்வு நோக்கில், தத்தமது கருத்துகளை, ஒருவர் பின் ஒருவராக, முன்வைத்து வருகின்றனர். ஒருவர், அமைதியாக நகர்ந்து என் அருகில் வந்தார். “சார், கூட்டம் முடியும் போது உறுதிமொழி ஒன்று எடுத்துக்கொள்ள விரும்புகிறோம்’’ என்றார். உறுதிமொழியின் சாரம், “புத்தக வாசிப்பு முகாம் முடிந்து, பள்ளிக்கு திரும்பியதும் என் பள்ளியில், முதல் ஆசிரியனாக முன்மாதிரி ஆசிரியனாக, ‘முதல் ஆசிரியர்’ நாவலில் வரும் துய்சேனைப் போன்ற ஆசிரியனாக விளங்குவேன் என இன்றைய நாளில் சபதமேற்கிறேன்.’’ என்பதே. 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 12, 13 தேதிகளில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்டக்கிளை ஏற்பாடு செய்திருந்த புத்தக வாசிப்பு முகாமில்தான் மேற்படி உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. முகாமின் நோக்கம், கல்வி சார்ந்த நூல்களை ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்வதும், மாற்றுக்கல்வி குறித்த சிந்தனையைத் தூண்டுவதுமே. முதல் நாள் இரவே எங்கள் எண்ணம் ஈடேறிய

ஆசிரியர் என்கிற ஆளுமை

"ராஜு, என்னப்பா பார்த்து ரொம்ப நாளாச்சு, எங்கே போனே?" "அது ஒண்ணும் இல்லப்பா, நம்ம ஜேம்ஸ் வாத்தியார் இல்லே, அவருக்கு மேலுக்கு முடியாம இருக்காரா, ஒரு எட்டு பார்த்துட்டு வர்ற ஈரோடு போயிருந்தேன்". "ஏன்ப்பா உனக்கு இந்த வேண்டா த வேலை. அந்தாளு உன்னை எத்தனை தடவை அடிபின்னியிருப்பாரு. அவர் சிரிச்சு ஒரு நாளாவது பார்த்திருப்போமா?" "அது ஒண்ணும் இல்ல சங்கர், அவர் என்னை அடிச்சு துவைச்சது என்னவோ உண்மதான். ஆனா, நான் இப்படி இருக்கேனா அதுக்கு அவரும் ஒரு காரணம் தெரியுமா". ===================================== "மச்சி, உனக்கு விஷயம் தெரியுமா?, நம்ம கணக்கு சுந்தரம் வாத்தியாரை நேத்து எவனோ வண்டியிலே இடிச்சுட்டு போயிட்டானாம், நல்ல அடியாம்" "அட பாவமே" "டேய் என்னடா, பாவமேன்னு சொல்றே. அவரெல்லாம் ஒரு வாத்தியார்ன்னு சொல்றதுக்கே அவமானமாயிருக்கு. ஒரு நாளாச்சும் ஒழுங்கா பாடம் நடத்தியிருக்காரா. எப்பப் பாரு வட்டி, பிஸினஸ்ன்னுட்டு. அவருக்கு நல்லா வேணும்டா" மேற்சொன்ன உரையாடல்களை நம்மில் அநேகரும் பேசியிருக்கக் கூடும். பள்ளி/கல்லூரி முடிந்து ஆண்டுகள் உருண்

தொடர்ந்து தோற்கும் என் அம்மாவிற்கு....

அன்பு அம்மாவிற்கு, என்ன நல்லா இருக்கீங்களா? வீட்டில எல்லாரும் சௌக்கியமா? தங்கச்சி வந்துச்சா? கொஞ்ச நாளா உங்ககிட்டேயிருந்து வருகிற தொலைபேசி அழைப்புகளையும், உங்களை நேரில் சந்திப்பதையும் தவிர்த்து விடுகிறேன் என்பது உண்மைதான். என்ன செய்றது? எனக்கு வேற வழியில்ல, அதான். அம்மா, எனக்கு இந்த கடிதத்தைத் தவிர வேறு வழி தெரியலே, என்னோட வேதனையை சொல்றதுக்கு. யார் கிட்ட சொல்ல முடியும்? அம்மா, எனக்கு ஆச்சரியமா இருக்கு. ஒரு தாய் எப்படி தன் மகன் தோல்வி அடையணும் என்று எதிர்பார்க்கிறாள்? நினைக்கவே பயமாயிருக்கு. ஆமாம்மா, எனக்கு தோல்விதான் தொடர்ச்சியாக. என் மனைவி, மக்கள் என்ற ஒரு கட்டத்திற்கு வந்தபின்னும் அவர்கள் சம்பந்தமான முடிவினை எடுக்க முயலும்போதெல்லாம் எனக்கு தோல்விதான் ஏற்படுகிறது. முதலில் மனைவி, இப்போது நீங்கள். அம்மா, நீங்களே எங்கிட்ட அடிக்கடி சொல்லியிருக்கீங்க‌, உங்களுக்கு என்னைத்தான் ரொம்ப பிடிக்கும். நான் நல்லா வருவேன்னு முன்கூட்டியே ஜோசியம் சொன்னவங்க நீங்கதான். அப்படியே நான் இப்ப எல் ஐ சியில ஒரு நல்ல வேலையில இருக்கேன்.

மனிதம் மறைந்த பொழுதில்..............

மனித குல நாகரிக வளர்ச்சியில் நாம் நெடுந்தூரம் பயணித்துவிட்டோம் என்று நினைக்கும் போதெல்லாம் இது நிகழ்ந்துவிடுகிறது. மனித இனத்தின் பண்பாட்டு கலாச்சார வளர்ச்சியில் இது போன்ற நிகழ்வுகள் நம்மை பின்னுக்கு இழுக்கிறது. 30 வருட பெருமைமிகு வளர்ச்சி என்பதை குலைப்பதற்காக மேற்கு வங்கத்தில் மனித வடிவில் விலங்குகளினும் கீழானவர்கள் நடத்தும் வெறியாட்டம் ஜூன் 10ல்தான் தொடங்கியது. மேற்கு வங்க "லால்கர்" பகுதியில் அம்மாநில முதல்வர் தோழர் புத்ததேவ் மீது கடந்த ஆண்டு மாவோயிஸ்டுகளால் நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதல் தோல்வியில் முடிந்தது. அப்போது அம்மாநிலத்தின் வீரமங்கை மம்தா பானர்ஜி அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை, மார்க்சிஸ்ட் கட்சி பொய் சொல்கிறது என்று ஒரு முழு பரங்கிக்காயை சோற்றுக்குள் மறைக்க முயன்றார். இதுபோன்ற பல உளறல்களுக்கும், விசித்திரமான செய்கைகளுக்கும் அவரது பெயர் பிரசித்தி பெற்றது. இப்போது அந்த பொய் பிகாஷ் என்ற மாவோயிஸ் ட் தலைவனின் விஷ நாக் கி ல் வழிந்து வெளிறி வி ட் டது. சென்ற திங்கட்கிழமை (15।06.09) அன்று இரவு 9 மணி அளவில் ndtv யில் தான் அந்தக் காட்சி முதன் முதலில் காண்பிக்கப்பட்டது.

ஆங்கில செய்தி சேனல்கள்

நேற்று முன் தினம் ஏதேச்சையாய் TIMES NOW சேனலை ரிமோட்டில்திருப்பியபோது (அப்பாடா, அர்னாப் கோஸ்வாமி இல்லை), வழக்கம்போல ஒரு "breaking news" ஓடிக்கொண்டிருந்தது. "Democracy at low" என்ற தலைப்பிட்டு ஒருபெண்மணி கையில் மைக்கோடு கத்திக் கொண்டிருந்தார். விஷயம் இதுதான். கேரள மாநில மேதகு(!) ஆளுநர் அவர்களுக்கு சௌதி யில் இருந்து ஒருகொலை மிரட்டல் வந்ததாம். 24 மணி நேரத்திற்குள் அவர் கொலைசெய்யப்படலாம் என்று. சி.பி.எம் கேரள மாநில செயலர் தோழர் பினராயி விஜயன்மீது CBI விசாரணை நடத்த உத்தரவிட்ட அந்த அதிநியாய செயலுக்குத்தான் இந்தமிரட்டலாம். ஒரு ஆளுநர் மீது கொலை மிரட்டல் என்பது உயர்ந்த இந்தியஜனநாயகத்திற்கு எத்தனை பெரிய அவமானம் என்று திரும்ப திரும்ப அந்தபெண்மணி கிட்டதட்ட அலறிக்கொண்டிருந்தார். ஆங்கில செய்தி சேனல்கள் இப்படிப்பட்டவர்களைத்தான் தேர்வு செய்கிறார்கள். மைக்கை கையில் வைத்துக்கொண்டு ஏன் கத்துகிறார்கள் என்பது என் சிற்றறிவுக்கு மட்டும் ஏனோ எட்டமாட்டேன் என்கிறது. என்னங்க, என்ன சொல்ல வர்றீங்க? "ஆயிலா" புயலில் வங்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் சிக்கித் தவிக்கையில் அந்த மாநில முத

முதல் நாள்

அலுவலகம் வந்ததிலிருந்தே ஒரே படபடப்பாய் இருந்தது। செய்வதற்கு வேலைகள் பல இருந்த போதிலும் ஒன்றும் செய்ய மனமில்லாமல் இருந்தது। மேனேஜர் ஏதாவது சொல்லபோகிறார் என்று ஒன்று இரண்டு ஃபைல்களை மேஜை மேல் பிரித்து வைத்து விட்டேன்। அபிக்குட்டி ஞாபகமாகவே இருக்கிறது। அபிக்குட்டி இன்றுதான் பள்ளிக்கு முதல்நாள் சென்றிருக்கிறாள்। பயங்கர வாயாடி। பார்க்கிறதையெல்லாம் அப்படியே அபிநயம் பிடித்து காட்டும் சமர்த்துகுட்டி। பேச பேச வாய் ஓயாது அவளுக்கு। நானும் உம்கொட்டிக் கொண்டே இருக்கணும்। அவங்க அப்பாதான் சொல்லுவார், பேசியே பேசியே என்னமா வளர்ந்துட்டுது இந்தக் குட்டி என்று. அவ கைகளை விரித்து, காக்கா வடை கதை சொல்றதை பார்க்கணுமே, அழகு, அழகு. இன்றைக்கு ஸ்கூலுக்கு அவர்தான் கொண்டுபோய் விட்டு வந்தார்। "நீ வந்தா அவ ரொம்ப நடிப்பா" என்று என்னை அலுவலகத்திற்கு போக சொல்லிவிட்டார்। அவருக்கு இன்றைக்கு இரவு ஷிப்ட்। எப்படி இருக்கிறதோ குழந்தை?!. பெரிய ஸ்கூல், ரொம்ப கேர் எடுத்துப்பாங்க, ஒன்றும் பயப்பட வேண்டாம், நிம்மதியாக இருக்கலாம், +2 வரைக்கும் கவலையில்லை என்று என்னென்னமோ சமாதானம்