Skip to main content

Posts

Showing posts from February, 2017

சஞ்சீவி மாமா - சிறார் நாவல் குறித்து

சஞ்சீவி மாமா ( இந்தியாவுக்கு நேரு மாமா … இந்த தெருவுக்கு யாரு மாமா ? ) – இப்படியான ஒரு தலைப்பு புத்தகத்திற்கு . பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் பார் சில்ரன் வெளியீடு . கொ . மா . கோ இளங்கோ என்றவுடன் தயக்கமின்றி உடனே அந்த புத்தகத்தை எடுத்தேன் . அன்று இரவே வாசிக்கத் துவங்கினேன் . சில புத்தகங்கள் மட்டுமே எடுத்தவுடன் வாசித்து முடித்தே மூடிவிட வேண்டும் என தோன்றும் . அப்படியான ஒரு புத்தகம் இது .   தொடரும் சாதி ஆணவக் கொலைகள் , சாதிய படுகொலைகள் பின்னணியில் இந்த புத்தகம் ஆகச் சிறந்த வரவு . பள்ளிகளிலும் மாணவர்கள் (புதுச்சேரியில்) கையில் அவர்கள் சாதி படிநிலையை சொல்லும் கயிறினை கையில் கட்டி வரும் அவலம் இப்போதெல்லாம் தொடர் நிகழ்வாகிறது..   இந்நாவலின் காலம் அவ்வளவாக கக்கூஸ்கள் இல்லாத காலம் . தோட்டி என்பவர்களே மலம் அள்ளும் வாளிகளை தூக்கிக் கொண்டு திரிந்த காலம் . அப்படியான தோட்டியான சஞ்சீவி என்பவருக்கும் அக்கிராமத்தின் சிறிய ஹீரோ பேச்சிராசு என்பவனுக்கும் இடையேயான உறவே இந்நாவல் தோட்டி என்றவுடன் தோட்டியின் மகன் என்ற தகழ

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

பிறிதொரு பொழுதில் - ஒரு போராளியின் அனுபவங்கள்

நாள்தோறும் நான் காணும் மனிதர்கள், சூழல்கள் இவற்றில் நாம் எவ்வாறு “வினை” புரிகிறோம் என்பது ஒரு முக்கியமான அரசியல். அந்த அரசியலை முன் வைக்கிறது பரிந்துரைக்கிறது இந்த நூல் என்றே நினைக்கிறேன். ரமேஷ் பாபுவின் எழுத்துக்கள் எனக்குப் புதிதல்ல. ஆனாலும் ஒன்றாக தொகுப்பாக பார்க்கையில் இன்னும் பிரமிப்பாக இருக்கிறது. இந்த நூலில் சமூகத்தின் இருண்ட வெளி மக்கள் மீதான கனிவும், அவர்களின் தேவை குறித்த புரிதலும், அவர்களோடு உறவாட, இணைந்து செயல்பட நினைக்கும் பரிவும், வரலாற்றை மறுவாசிப்பு செய்தலும் என எல்லாம் இருக்கிறது. ”மனிதர்களை உற்றுப் பார்ப்போம்”- இந்த நூலில் ஆக சிறந்தது என நிச்சயமாய் சொல்லலாம். மேம்பாலத்தில் வாழ்க்கை நடத்தும் முதியவர் ஒருவரோடு ரமேஷ் பாபு நிகழ்த்திய உரையாடல். நான் அன்றாடம் சந்திக்கும்(கண்ணுறுகிறோமா?!) சாதாரணர்கள் பின்னான வாழ்க்கை குறித்த ரமேஷ் பாபுவின் பார்வை நிச்சயமாய் நாமும் கை கொள்ள வேண்டியது. கணப்பொழுதுவில் இம்முதியவர்களை நாமும் கடந்து வருகிறோம், பல சமயங்களில் நம் சிந்தனையில் அவர்கள் பதிவதுமில்லை. மேம்பால கைப்பிடிச் சுவர்களும் இவர்களும் ஒன்றாகவே காலப்போக்கில் நமக்கு படுகிறது. அ