Skip to main content

Posts

Showing posts with the label உடல் நலம்

கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்களேன்....

ஆனந்தமாய் ஒரு குளியல் போட்டுவிட்டு டவலால் தலையைத் துவட்டிக் கொண்டே ஹாலுக்கு வருகிறார் ஒருவர் என்று வைத்துக் கொள்ளுங்களேன்। மின் விசிறியைச் சுழலவிட்டு அதன் கீழே தலைமுடியை “ஆற’ வைக்கத் துவங்குகிற போது அந்த டவலுக்கு அடுத்த வேலை ஆரம்பிக்கிறது। யாரிடமாவது பேசிக்கொண்டே அந்த மெல்லிய வெள்ளை துவாலையின் நுனியை இலேசாக உருட்டித் திரட்டி காதுக்குள் அதைச் செலுத்திக் குடைந்து பார்ப்பதும், வெளியே அதை எடுத்து சூடான நீரின் வெதுமையோடு அதில் அழுக்கு படிந்திருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்வதும் முக்கியமான கட்டங்கள். “அப்பாடா, இப்பதான் எல்லாம் கிளியரா கேக்குது” என்று திருப்தியோடு அந்தக் காட்சி முடிகிறது. சிலர் சாவிக்கொத்தில் ஞாபகமாக ஒரு காதுக்குரும்பியும் வைத்திருப்பார்கள்। பயணத்தில், பூங்காவில் ஓய்வு கொள்ளும் பொழுதுகளில் குருப்மிக்கு வேலை நிறைய இருக்கும்। போட்டுக் குடைந்தெடுத்து விடுவார்கள். போதாதற்கு, சாலைகளில் “காது சுத்தம் செய்கிறேன்” என்று விதவிதமான வளைவுகளும், கொக்கிகளும் கொண்ட இரும்பு ஆயுதங்களோடு அலைகிற நடைபாதை ENT ஸ்பெஷலிஸ்டுகள் வேறு. இவையல்லாமல்...