Skip to main content

Posts

Showing posts with the label சவுத் விஷன்

சமூக நீதிக்கான அறப்போர்- நலிந்தோர் நலனுக்காக ஓர் வாழ்வின் அர்ப்பணம் - நூல் அறிமுகம்

" மனிதக் கழிவு அகற்றுவோரைப் பெருமளவில் ரயில்வேத் துறை பணியமர்த்துகிறது . அதற்கு பாவ விமோசனமாக , ரயில்வேயில் சமையலுக்கும் உணவு பரிமாறும் வேலைகளுக்கும் அவர்களைப் பணியமர்த்த வேண்டும் . அதற்கான பயிற்சிகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும் . இந்த வேலைகள் ஒப்பந்ததாரர்களிடம் விடப்பட்டிருந்தால் இவர்களைத்தான் அந்த வேலைகளுக்கு எடுக்க வேண்டுமென்ற நிபந்தனையை ஒப்பந்தத்திலேயே சேர்க்க வேண்டும்” . --- ஒரு நிமிஷம் இவ்வாசகங்களை கண் மூடி அசை போட்டு பாருங்கள் . கழிவு அகற்றுவோரை உணவுப் பரிமாறும் வேலைகளை செய்ய சொல்வது என்பதென்பது எவ்வளவு புரட்சிகரமானது . தகழி சிவசங்கரன் பிள்ளை தோட்டியின் மகன் நாவலில் புறவாயில் வெளியே நின்று சாப்பாட்டை எட்டி கேட்ச் பிடிக்கும் ஒரு தோட்டி ( நாவலுக்காக இந்த பெயரை பயன்படுத்துகிறேன் ) வீட்டினுள் வந்து சமைத்து அந்த உணவினை அந்த வீட்டு மக்களுக்கு உணவு பரிமாறுகிறார் என்றால் ... இதுதான் affirmative action. ஒரு வேளை இவ்வாசகங்கள் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அரசு ஏற்றுக் கொண்டால் ...? ஆனால் , நடந்தது என்ன ...? இவ்வாசகங்கள் பரிந்துரைகள் ஆகின , சட்ட முன்வடிவில் இடம் பெ...