Skip to main content

Posts

Showing posts with the label உலக புத்தக தினம்

ஏப்ரல் 23 : உலக புத்தக தினம்

வாசிக்கும் ஒவ்வொரு தினமும் வாழ்கின்ற தினம் எஸ் வி வேணுகோபாலன் அறிவின் காட்டாறு ஓடுகிறது சுழித்துக் கொண்டு.. அருள் ஒளியின் தகதகப்பில் மின்னிக்கொண்டிருக்கிறது அன்பி ன் ஓடை வாழ்வியலின் சாரம் குளமாக நிற்கிறது ஒரு ஞானியின் புன்னகையோடு - அடிமனத்தின் ஈரத்தைப் புதுப்பி க்கப் பெருகுகின்றது புத்தக நதி புவியெங்கும்... ஊன்றப்பட்ட எழுத்துவிதைகளை பார்வை பிய்த்தெடுத்தாலும் நகலெடுத்துக் கொடுத்துவிட்டு நகராதிருக்கும் எழுத்துக்கள் புத்தகத்தின் மேற்பரப்பில்.. உள்ளிருந்தொரு குரல் வாசித்துக் கொண்டிருக்க தவத்தின் மெருகை முகத்திற்கு ஏற்றும் மவுன வாசிப்பு.. மெல்லிய வருடுதலில் நூலின் இதம் பருகி வேட்கை ஆறும் காலங்கள்... புத்தக தினம் வாசிப்போர் யாவருக்கும் 'இன்று புதிதாய்ப்' பிறந்த தினம் வாசிக்கும் ஒவ்வொரு தினமும் மனிதர்கள் வாழ்கின்ற தினம்.

வாழ்வின் உயிர்த்துளி ஏந்தியிருக்கும் குவளைகள்........

சைப்ரஸ் மரத்தால் நீண்ட நாட்களுக்குப் பாதுகாப்பான வகையில் ஒரு பெட்டி செய்தேன், எதற்காக? அதில் பை லெடியன் என்ற எனது பெயர் குறிக்கப் பட்டிருந்தது என் வாழ்நாள் முழுவதும் ஓர் எழுத்தாளனாகவே இருந்துவிட்டேன்.. என் மூவாயிரம் கவிதைகளையும், உரைநடையையும் எழுபது பாகங்களாக நான் சேகரித்து வைத்தேன் கடைசியில் அவை அழிந்தும் தொலைந்தும் போய்விடும் என்று எனக்குத் தெரியும் இருந்தும் அவை வீசி எறியப் படக் கூடாது என்றே விரும்பினேன் எனவே அவற்றைப் பூட்டி எ ன் கவனத்திலேயே வைத்திருப்பேன். எனக்கு மகன்களோ என் எழுத்தின் மீது கவனம் கொண்டவர்களோ இல்லை என்னால் செய்ய முடிந்ததெல்லாம் அவற்றை என் மகளிடம் கொடுத்து என் பேரனிடம் ஒப்படைக்க விடுவதுதான்... - சீனக் கவிஞன் பை ஜூயி (கி பி 772 - 846) தமிழில்: சுந்தர்ஜி பா ங்க் ஒர்க்கர்ஸ் யுனிட்டி பத்திரிகையின் ஏப்ரல் இதழின் முகப்பு அட்டை என்னை பாதித்தபடி இருக்கிறது. மாநகரத்தின் மழை நீர் பெருகிய தெருவின் குறுக்கே, தான் நடக்கவே தள்ளாடும் மனிதர் ஒருவர் மெனக்கெட்டு புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு கடக்கும் அந்தக் காட்சி (புகைப்படம்: சி சி விஜயகுமார்) எத்தனையோ சிந்த...

காதலிக்கு ரோஜா, காதலனுக்குப் புத்தகம்...

முந்தைய இரண்டு வாரங்களில் புதிய புத்தகங்கள் படிக்காதவருடைய உரையாடலில் எந்த நறுமணமும் கமழ்வதில்லை. - சீனப் பழமொழி. புத்தகத்தைப் பெறுவதற்குச் சில உபாயங்கள் இருக்கின்றன என்று தமது நூலுக்கான முன்னுரை ஒன்றில் இப்படி எழுதுகிறார் எழுத்தாளர் கல்கி; “முதலாவது இரவல் வாங்குவது. இரண்டாவது யாரிடமிருந்தாவது திருடி எடுத்து வருவது. மூன்றாவது காசு கொடுத்து வாங்குவ்து. ஆனால், பெரும்பாலானோர்க்கு இந்த கடைசி உபாயம் சித்திப்பதில்லை”. கல்கியின் நையாண்டியை ரசிப்போம். ஆனால், எப்படியாவது ஒரு வழியில் படிக்கிற ஏற்பாட்டைச் செய்து கொள்ளுங்கள் என்பதுதான் வாசிப்பு இயக்கத்துகாரர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. புத்தக வாசிப்பு உள்ளபடியே ஓர் இனிமையான அனுபவம் என்றும், நமக்குள்ளேயே நாம் துவக்கும் ஒரு ரசமான பயணம் என்றும் கண்டுபிடித்து விடுபவர்கள் வாசிப்பை விடவேமாட்டார்கள். எழுத்துக்களை முதன்முதலாகச் சமைத்தவர்களை வணங்கத் தோன்றுகிறது. தற்செயலாகத் தனது கருவிகள் மண்ணிலோ, பாறையிலோ பட்டுக் கீறியதிலிருந்து சித்திரங்களை உருவாக்கியவர்கள் உழைப்பாளி மனிதர்களே. சித்திர வடிவங்கள் ஏதோ ஒரு இறுக்கம் கலைந்த நாளில், ‘ஜெம்’ கிளிப்பைப் பிரித்து...