
வாசிக்கும்
ஒவ்வொரு தினமும்வாழ்கின்ற தினம்
எஸ் வி வேணுகோபாலன்
அறிவின் காட்டாறு ஓடுகிறதுசுழித்துக் கொண்டு..அருள் ஒளியின் தகதகப்பில்மின்னிக்கொண்டிருக்கிறது அன்பின் ஓடை வாழ்வியலின் சாரம் குளமாக நிற்கிறதுஒரு ஞானியின் புன்னகையோடு -அடிமனத்தின் ஈரத்தைப் புதுப்பிக்கப் பெருகுகின்றது புத்தக நதி புவியெங்கும்...ஊன்றப்பட்ட எழுத்துவிதைகளைபார்வை பிய்த்தெடுத்தாலும்நகலெடுத்துக் கொடுத்துவிட்டுநகராதிருக்கும் எழுத்துக்கள் புத்தகத்தின் மேற்பரப்பில்..உள்ளிருந்தொரு குரல் வாசித்துக் கொண்டிருக்கதவத்தின் மெருகைமுகத்திற்கு ஏற்றும் மவுன வாசிப்பு..மெல்லிய வருடுதலில் நூலின் இதம் பருகிவேட்கை ஆறும் காலங்கள்...புத்தக தினம்வாசிப்போர் யாவருக்கும்'இன்று புதிதாய்ப்' பிறந்த தினம்வாசிக்கும் ஒவ்வொரு தினமும்மனிதர்கள் வாழ்கின்ற தினம்.