புக்ஸ் பார் சில்ரன் மற்றும் சித்திரச் செவ்வானம் இலக்கியம்(?) வெளியீடு. இந்த ஆண்டில் நான் வாசித்த இறுதி புத்தகம். 350 ரூபாய்க்கு 399 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம், அதுவும் சிறார் கதைகள் என்னும்போதே ஒரு பயம் மற்றும் தயக்கம் இருந்தது. என்ன பயம், ஏன் தயக்கம் என கேட்டது புத்தக அட்டையில் இருந்த யூமா வாசுகியின் பெயர். மனுசன் சூப்பருங்க. யூமா வாசுகி, நீதிமணி, விஷ்ணுபுரம் சரவணன் என இன்னும் சில பெயர்கள் சிறார் இலக்கியம் எடுக்கையில் எனக்கு எந்த தயக்கமும் கொடுக்காதவர்களாக இருக்கிறார்கள்.
அப்படியே புத்தகத்தை திறந்தா பூனை, நாய், எலி, கிளி, மாடு, குரங்கு என எல்லாமும் என்னவெல்லாம் கதைகள் சொல்லுது.. அப்படியே கட கடவென பக்கங்கள் வெகு வேகமாக நகர, அட இன்னும் என்னவெல்லாம் இருக்குன்னு மனசுக்குள்ள குறுகுறுப்பு.
தொடர்ந்து கடந்தா அடுத்தாற்போல சிவப்பு மிளகாய் மூக்கன், இட்லி கண்ணன், தோசை நாக்கன் என பூதங்கள், அப்ப மரம், புலி, சிங்கம், முள்ளம்பன்றி என அட போங்க அமர்க்களம்.. அப்படியே இட்லி கண்ணன், தோசை நாக்கன் கதையை அபி கீர்த்தனா குட்டிகளிடம் நம்ம கற்பனையையும் மிக்ஸ் பண்ணி சொன்ன என்னா சிரிப்பு, அப்பா அடுத்த கதை அடுத்த கதைன்னு நச்சரிப்பு. அப்புறம் என்ன அடுத்த ஆப்ப மரம் கதையையும், அந்த தங்க பாம்பு கதையையும் சொல்லியாச்சு. இன்று இரவு முருகேசனும் புலியும், குண்டப்பா குண்டம்மா கதைகளை சொல்லனும்.
பசங்க கிட்ட இந்த கதைகளை சொல்லாம விட்டுறக் கூடாது என நமக்கே ஒரு குறுகுறுப்பு வந்தால் அந்த கதைகள் சூப்பரு என்பது என் கருத்து. ஆமாங்க, அந்த வகையில பேரன்பின் பூக்கள் புத்தகம் புக்ஸ் பார் சில்ரனின் முக்கிய படைப்பு. ஆசிரியர் சுமங்களாவிற்கு வணக்கங்கள். யூமா வாசுகி சார், கலக்குறீங்க போங்க
Comments