Skip to main content

Posts

Showing posts with the label வட ஆற்காடு

திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம் - நூல் அறிமுகம்

திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம் - கருப்பு பிரதிகள் வெளியீடு. 2010. அழகிய பெரியவன் அவர்களின் குறுநாவல்கள் கொண்ட அழகிய படைப்பு. 2010 வெளியீடு. எளிய மனிதர்களின் வாழ்வு அப்படியே அச்சு அசலாய் எழுத்தில் பதிந்துள்ளது. எங்கும் சினிமாத்தனம் இல்லை. ஒரு சிறு விபத்தும் அப்படியே முற்றாக கலைத்து விடுகிறது வாழ்க்கையை. ஆனாலும் வாழ்வதற்கான வேட்கையை விடுவதில்லை அவர்கள். எத்தனை அவலத்துக்குரிய பொழுதிலும் அன்புக்குரிய ஆதரவு ஒன்று அகப்பட்டுவிட்டால் அதன் நிமித்தம் வாழ்வை எப்படியாவது கடத்திவிட ந ினைக்கும் மனங்கள். இயல்பான பேச்சு நடை கொண்ட கதை என்றாலும் அழகிய பெரியவன் தன்னுடைய எழுத்து வலிமையை ஆங்காங்கே விவரிக்க பயன்படும் சிறு தருணங்களில் தவற விடுவதில்லை. 2010ல் எழுதப்பட்ட கதை களங்கள் அப்படியொன்றும் இப்பொழுது மாறிவிட்டதாக நான் நினைக்கவில்லை. உலகமயம் எளிய மனிதர்களின் வாழ்வில் நிகழ்த்தியுள்ள கோர யுத்தம் இன்னும் ஆயிரம் ஆயிரம் கதைக் களங்களை விட்டுச் சென்றுள்ளதாகவே நினைக்கிறேன். கருப்பு பிரதிகள் அப்பொழுதே புத்தக வடிவமைப்பில் சில முயற்சிகள் செய்திருக்கிறார்கள். எழுத்துப் பிழையே இல்லை எனலாம். அழகிய அட...