ராஜ வனம் இத்தோடு அநேகமாக நான்கு அல்லது ஐந்து வனம் குறித்த நூல்களை வாசித்திருக்கிறேன். லஷ்மி சரவணக்குமாரின்{?} ஒரு புலி பற்றிய நூல், அருமைத் தமிழின் சொந்தக்காரர் என் பிரியத்துக்குரிய நக்கீரன் அவர்கள் எழுதிய காடோடி என்னும் classic, சமீபத்தில் என்னை மிகவும் ஈர்த்த பிரசாந்த் வே அவர்களின் சிறுகதை தொகுப்பான காடர் என்பதைத் தொடர்ந்து ஒரு வனம் குறித்த சிறுகுறுநாவல். வறீதையா கானஸ்தந்தின் அவர்களின் மொழியை படித்தவர்களுக்கு அதுவும் அவரது சமீபத்திய குமரி நிலப்பகுதி எழுத்தாளர்களின் (மீனவ சமூகத்தின்?) சிறுகதைகளை வாசித்ததன் மூலம் ஓரளவு நாஞ்சில் நாட்டு dialect எந்த பிரச்சனையும் இல்லாம சமாளிச்சுருலாம் என நினைத்தே ராஜவனம் எடுத்தேன். ஆனா அப்படி எல்லாம் இல்ல. இது கொஞ்சம் இன்னமும் மெனக்கட வேண்டி இருந்தது. ஆனாலும் சுகமான அனுபவம். மலையாளம் தமிழும் கலந்து திரிந்து ஒருவித இசைக்கோர்வையாக வரும் நாஞ்சில் நாட்டு வட்டார மொழி வழக்கு பிரமாதம், மயக்குகிறது. அநேகமாக காடுகளை களமாக கொண்டு எழுதுபவர்களால் வனங்களின் அந்த தாவர வளம், வகைகள், விலங்கு வகையினம், மண் வளம் என்பனவற்றின் மீது ஒரு மையல் கொள்ளாமல் எழ...