Skip to main content

Posts

Showing posts from 2021

கலிலியோ - எஸ்.சிவதாஸ் -- நூல் அறிமுகம்

  20 வருடங்கள் கழிந்த பின்னும் அந்த வாசிப்பு இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது . மேட்டுப்பாளையத்திலிருந்து ஈரோடு நோக்கிய பேருந்து பயணத்தில் முழுக்க நின்றுகொண்டே வாசித்த அந்த புத்தகமும் அந்த வாசிப்பு அனுபவமும் பசுமையாக இருக்கிறது . அப்போது தான் நான் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்திருந்தேன் . என் தலைவன் தோழர் பேராசிரியர் நா . மணி அவர்கள் தான் இந்தப் புத்தகத்தை வாசித்து பாருங்க என கொடுத்தார் . அந்தப் புத்தகம் தான் அறிவியல் வெளியீட்டில் வந்திருந்த “ வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் ”. பேரா . எஸ் . சிவதாஸ் என்ற மலையாள எழுத்தாளரின் எழுத்து தமிழில் அழகிய மொழிபெயர்ப்பாக வந்திருந்தது . முதன்முதலில் அவர்கள் வெளியிட்ட அந்த வடிவம் (landscape) மிக சிறப்பானது . தமிழில் வழவழ தாளில் அப்படி ஒரு லேஅவுட்டில் நான் இதுவரையிலும் கூட எந்த ஒரு புத்தகத்தை யும் வாசித்ததே இல்லை . புத்தக வடிவமைப்பை விடவும் அந்த எழுத்து நடை வெகு சுவாரசியம் . கதைகளின் வழியே அறிவியல் சொல்லல் என சொல்லலாமா ? தெரியவில்

மந்திரக்குடை - சிறார் நாவல்

  சிறார் நாவல் அல்லது குழந்தைகளுக்கானது என்று வெளியாகும் பலதையும் படித்திடும் பழக்கம் எனக்கு உண்டு. அதில் இரண்டு பலனுண்டு. ஒன்று, என் குழந்தைகளுக்கு புதிதாக கதை கிடைப்பது. மற்றொன்று 44 வயதை கடந்த பின்னும் இன்னும் இனித்திடும் அந்த fantasy part.   ஆக, என்னுடைய அடுத்த வாசிப்பாக இருந்தது   ஞா. கலையரசி அவர்களின் மந்திரக்குடை. குடையை வைத்து என்ன மந்திரம் செய்துவிட முடியும், குடையை பிடித்து கொண்டு பறக்கலாம் என்பதே முதலில் வரும் கற்பனை. சரி, பறக்கிறார்கள் அல்லது பறக்கிறாள்(ன்) .. அப்புறம்? பறந்து எங்கே செல்கிறார்கள்? என்ன ஆனது? ஒருவர் மட்டுமே பறந்தனரா அல்லது பழங்கதை ஒன்றில் வருவது போல இந்திரனின் ஆனையை தொடர் சங்கிலியாக பிடித்து பின் கீழே விழுந்த கதை போலவா? பறப்பதல்லாமல் குடை மழையிலிருந்து வெயிலிலிருந்து காத்திட்ட போதும் வேறு ஏதும் பொத்துகிட்டு வர வழிவகை செய்கிறதா? கடலில் படகாக மாறி ஒரு புதிஅய் உலகை காட்டியதா குடை? …………. படித்துப் பாருங்கள். விலை குறைவுதானே! சுவாரசியமாகத்தான் இருக்கிறது. நிச்சயமாய் புக்ஸ் பார் சில்ரனின் படைப்பில் வரவேற்க்கத்க்க ஒன்று என எனக்குத் தோன்றுகிறது. என் தேர்விலா

THE MURDERER, THE MONARCH AND THE FAKIR - நூல் அறிமுகம்

  யாவரும் அறிந்த உண்மைகளிலும் ஒரு உண்மை ஒளிந்துக் கொண்டே தான் உள்ளது போலும். அது போலவே பலரும் அறிந்த உண்மையையும் மீண்டும் பல காலம் கழித்து அதன் உண்மைத்தன்மையை எவரேனும் காரியமாக அசைத்திட முற்படுகையில் அந்த உண்மையை மீண்டும் மீண்டும் அறுதி செய்ய வேண்டி உள்ளது காலத்தின் தேவையாகிறது. அவ்வாறான சில உண்மைகளை திரும்பவும் உறுதியாக சொல்வதும் ஒளிந்திருந்த அல்லது அவ்வளவாக கவனம் பெறாத சில உண்மைகளுக்கு வெளிச்சம் பாய்ச்சும் ஒரு முக்கியமான புத்தகம் தான் இது.   THE MURDERER, THE MONARCH AND THE FAKIR.   காந்தியடிகளின் கொலை என்பது ஒன்றும் மர்மமான ஒன்றல்ல. எவர் சுட்டார் எதற்காக சுட்டார் என்பதெல்லாம் தெரிந்த உண்மைகள். உண்மையில் சுட்டவன் தன்னை யார் என்று ஒளித்து வைக்கவில்லை , அவனுடைய நோக்கமும் தெளிவானதே. இதிலென்ன சுவாரசியம் மீண்டும் மீண்டும் வருகிறது ? கோட்சே ஆம் நாந்தான் சுட்டேன் என நீதிமன்றத்தில் சொன்னானே பிறகென்ன ? ஆனால் , இவ்வளவுதானா உண்மைகள்… ? கோட்சேவின் தனிப்பட்ட கோபத்தினால் மட்டுமே விளைந்ததா இக்கொலை ? நாந்தான் சுட்டேன் என்று சொன்னதின் பின்னே ஏதேனும் உண்மை மறைக்கப்பட்டதா ? இவையெல்லாம் இப்புத்தகம்

கயிறு - விஷ்ணுபுரம் சரவணன்

  பாரதி புத்தகாலயத்தின் வாத்து ராஜா விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கிளாசிக். ஏற்கெனவே வாசித்து விட்ட போதிலும் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும் மற்றொரு புத்தகம். அதைத் தொடர்ந்து அவரது சிறார்களுக்கான கதைகளை தேடி தேடி வாசித்து வருகிறேன் கடந்த செவ்வாய் அன்று (30.11.21) அன்று இரவு தமிழ்மார்க்ஸ் டிவிட்டர் ஸ்பேசில் தோழர் இ.பா.சிந்தன் சமூக சிந்தனையை தூண்டும் சிறார் புத்தகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். சமூக வலைத்தளங்களில் வெட்டி அரட்டையை விட்டொழித்து உருப்படியாக செயலாற்றுவது என தமிழ்மார்க்ஸ் டிவிட்டர் மக்களைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். அவ்வுரையில் இ.பா. சிந்தன் சில புத்தகங்களைப் பட்டியலிட்டார். அவை கொ.மா.கோ இளங்கோவின் சஞ்சீவி மாமா, பச்சை வைரம், உதயசங்கர் தோழரின் மாயக்கண்ணாடி, சோசோவின் விசித்திர கதை முதலியன. இதில் சஞ்சீவி மாமா பச்சை வைரம் மாயக்கண்ணாடி ஆகியவை ஏற்கெனவே நான் வாசித்துவிட்டேன் என்பதும் அவை உண்மையிலேயே மிக தரமானவை என்பதற்கும் அவை பெற்ற விருதுகளே சாட்சி. இதுவரை படிக்காதவர்கள் அவசியம் படித்திட கோருகிறேன். இந்தப் பரிந்துரையில் அவர் சொன்ன மற்றொரு புத்தகம் தான் விஷ்ணுபுரம் சரவ