Skip to main content

Posts

Showing posts from January, 2020

சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை - நூல் அறிமுகம்

2018ஆம்த ஆண்டின் சிறப்பு கவனம் பெற்ற சிறுகதை தொகுப்பினை கொண்டு வந்த தோழரது அடுத்த தொகுப்பு அவ்வளவாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் வந்திருக்கிறது. கடந்த தொகுப்பு ஒரு கலவர சூழலில் முளைத்திடும் கதைக் களங்களாகவே இருந்தன. மூடுண்ட சமூகமான சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தின் அவலங்களை, அதிர வைக்கும் உண்மைகளை எளிய வார்த்தைகளில் இவரது கதைகள் வாசகருக்கு கடத்தி நின்றன. தாழிடப்பட்ட கதவுகள் தொகுப்பினை பட ித்த எவருடைய மனநிலையும் கொதித்தே போயிருக்கும். அந்த தொகுப்பினை தொடர்ந்து இந்த தொகுப்பு. முன்னுரையில் ராஜூ முருகன் சொல்வதைப் போல இவரது கதை மாந்தர்கள் அனைவருமே எளியவர்கள். எளிய மனிதர்களின் வாழ்வியல் துன்பங்கள், அவஸ்தைகள், சாதிய முரண்கள், முகம் அறியா நேச கரங்கள் என எல்லாமும் கதை களமாக்கியுள்ளார் கரீம் இயல்பாக. ”சிதார் மரங்களில்..” முத்தாய்ப்பான ஒன்று. காஷ்மீரத்து சோபியன் பகுதியில் 8 வயது ஆசீபாவின் படுபாதகமான படுகொலை அவளது குதிரையின் வாய்மொழியாக. அடுத்து ”பூ மயில்” ஒரு திரைப்படம் போல அழகாய் விரிகிறது, அதிர்ச்சியில் முடிகிறது. ஒரு கணம் உடல் சில்லிட்டு நிற்கிறது. என்ன நடந்தது என்ற விவரணை இல

நீ கரடி என யார் சொன்னது? - நூல் அறிமுகம்

ஒரு கரடி குளிர்கால உறைபனிக்கு பாதுகாப்பாய் கொஞ்ச காலம் தூங்கி எழுந்து பார்த்தா... காட்டைக் காணோம்... அங்கே ஒரு தொழிற்சாலை இருக்கு... என்ன இடம் இதுன்னு தயங்கி தயங்கி கரடி உள்நுழைய... கரடியை கண்டு பயப்படாம வாப்பா என்ன வேஷம் போட்டுட்டு வந்தா விட்டுறவமா என வேலை செய் என தொழிற்சாலை அதிகாரி நிர்பந்தம் செய்ய... இல்லங்க, நான் கரடிதான் மனுஷன் இல்ல என கரடி கெஞ்ச.... இல்லவே இல்ல, நீ கரடி வேஷத்துல மனுசன் என எல்லா அதிகாரிகளும் கடைசியாய் முதலாளியும் சொல்ல.. குழப்பமடைந்த கரடி வேறு வழியின்றி  வேலை செய்ய.. மீண்டும் பனிக்காலம் வந்து தொழிற்சாலையை தற்காலிகமாக மூட.. கரடிக்கு என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீங்க?... அட போங்க... சிந்திக்க வைக்கிற நிறைய விவாதம் நடத்தப்பட எல்லா வாய்ப்புகளும் உள்ள நூல் புக்ஸ் பார் சில்ரன் வெளியீடாக தோழர் ஆதி வள்ளியப்பன் மொழிபெயர்ப்பில் "நீ கரடி என யார் சொன்னது" என்னும் ஃபிராங்க் தாஷ்லின் நூல் அழகிய வடிவமைப்பில்(உண்மையாகவே) எனக்கு தெரிய எழுத்துப் பிழை இல்லாமல் வந்திருக்கிறது. அவசியம் வாங்குங்க. ஆசிரியர்களாக இருப்பவர்கள் தங்களது பள்ளியில் இக்கதையை படிக்க செய

எங்கள இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க - நூல் அறிமுகம்

செல்வா இந்த பெயர் எப்போதும் நான் ஒற்றையாய் அறிந்ததில்லை.. அடைமொழி போலவும் இனிஷியல் போலவும் எப்போதும் SFI செல்வாதான். 90களின் இறுதியில் என நான் நினைக்கிறேன். ஒரு படம். மாணவர்கள் போராட்டம் செய்தார்கள் என போலீஸ் லத்தியால் விளையாடி அவர்களை வேனில் தூக்கி போடும் ஒரு போட்டோ. வேறெங்கு தீக்கதிரில் தான். அப்படித்தான் எனக்கு செல்வா அறிமுகம். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பின் பணமதிப்பிழப்பு விவகாரத்தில் போராடி மண்டை ஒடைக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் செல்வா என்ற செய்தி. மீண்டும் தீக்கதிரில்தான ். இப்படியாக எப்போதும் களத்தில் நிற்கும் ஒரு தோழர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார் என்றால், எப்படி இருக்கும் என்ற திரில் ஒரு பக்கம், ரமேஷ்பாபு என்னும் மூத்த SFI தோழரின் "பிறிதொரு பொழுதில்" என புத்தகம் வாசித்த பரவசம் ஒரு பக்கம் என உடனே சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கினேன், “எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க" புத்தகம். வாசகசாலை வெளியீடு. மெரினா எழுச்சி என்னும் சிறு பிரசுரத்திற்குப் பின் இப்புத்தகம். நிச்சயமாக சொல்வேன், களத்தில் நிற்பது மட்டுமல்லாது தீராத வாசிப்பும் ஒரு போராளிக்கு தேவை

திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம் - நூல் அறிமுகம்

திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம் - கருப்பு பிரதிகள் வெளியீடு. 2010. அழகிய பெரியவன் அவர்களின் குறுநாவல்கள் கொண்ட அழகிய படைப்பு. 2010 வெளியீடு. எளிய மனிதர்களின் வாழ்வு அப்படியே அச்சு அசலாய் எழுத்தில் பதிந்துள்ளது. எங்கும் சினிமாத்தனம் இல்லை. ஒரு சிறு விபத்தும் அப்படியே முற்றாக கலைத்து விடுகிறது வாழ்க்கையை. ஆனாலும் வாழ்வதற்கான வேட்கையை விடுவதில்லை அவர்கள். எத்தனை அவலத்துக்குரிய பொழுதிலும் அன்புக்குரிய ஆதரவு ஒன்று அகப்பட்டுவிட்டால் அதன் நிமித்தம் வாழ்வை எப்படியாவது கடத்திவிட ந ினைக்கும் மனங்கள். இயல்பான பேச்சு நடை கொண்ட கதை என்றாலும் அழகிய பெரியவன் தன்னுடைய எழுத்து வலிமையை ஆங்காங்கே விவரிக்க பயன்படும் சிறு தருணங்களில் தவற விடுவதில்லை. 2010ல் எழுதப்பட்ட கதை களங்கள் அப்படியொன்றும் இப்பொழுது மாறிவிட்டதாக நான் நினைக்கவில்லை. உலகமயம் எளிய மனிதர்களின் வாழ்வில் நிகழ்த்தியுள்ள கோர யுத்தம் இன்னும் ஆயிரம் ஆயிரம் கதைக் களங்களை விட்டுச் சென்றுள்ளதாகவே நினைக்கிறேன். கருப்பு பிரதிகள் அப்பொழுதே புத்தக வடிவமைப்பில் சில முயற்சிகள் செய்திருக்கிறார்கள். எழுத்துப் பிழையே இல்லை எனலாம். அழகிய அட

My Brigadista Girl - நூல் அறிமுகம்

கம்யூனிஸ புரட்சி நடைபெற்று விடுதலை அடைந்த நாடுகள் எல்லாவற்றிலும் புரட்சி அரசு நடத்திய முதல் அரசியல் நிகழ்வு ”அனைவருக்கும் கல்வி”. ரஷ்யா தொடங்கி கியூபா வரையிலும் அதுவே முக்கிய முதல் நிகழ்வு. அதிலும் கியூபாவின் அனைவருக்கும் எழுத்தறிவு திட்டமும் செயலாக்கமும் வியப்பளிப்பவை, அனைவருக்கும் உதாரணமாக விளங்க கூடியவை. விடுதலை கிடைக்கின்ற போது வெறும் 40 சதம் மட்டுமே இருந்த அந்நாட்டின் எழுத்தறிவு புரட்சி நடைபெற்ற ஓராண்டில் – ஒன்றரையாண்டில் 100 சதமாக ஐக்கிய நாடுகள் சபையால் ஆய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. தன் நாட்டு குடிகள் அனைவரும் எழுத்தறிவு பெற்றவர்களாக மாற்றிய உலகின் முதல் நாடு கம்யூனிச கியூபா. இது எப்படி சாத்தியம் ஆனது என்பது மிக சுவாரசியமான உண்மைக் கதை. வாருங்கள் நம் நாட்டில் எழுத்தறிவின்மையை இல்லாமல் ஆக்குவோம் என அழைத்த தோழர் பிடலின் குரலுக்கு அந்நாட்டின் இளைஞர்கள், மாணவ மாணவியர் என எல்லாரும் தயாராயினர். WE SHALL PREVAIL என கோஷம் முன்வைக்கப்பட கியூப தலைநகராம் ஹவானாவில் 50000 பேர் கையில் புத்தகத்தோடும், 10 அடி உயர மாடல் பென்சிலோடும், ஆம் நாங்கள் வெல்வோம் என பாடிய

பணிக்கரின் பேத்தி - ஷர்மிளா சய்யித் --- நூல் அறிமுகம்

வாழ்வாங்கு வாழ்தல் என்று சொல்வார்கள். அது சிலருக்குத் தான் அமையும் என்பார்கள். வாழ்வாங்கு வாழ்தல் என்பது குறித்து பலருக்கும் பல புரிதல் இருக்கும். அவை அப்படியே இருக்கட்டும். நான் அப்படி வாழ்வாங்கு வாழ்ந்த (என் புரிதலில்) ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் படித்து ரசித்தேன். ஷர்மிளா சய்யித் அவர்களின் "பணிக்கரின் பேத்தி" படித்ததை தான் சொல்கிறேன். பெரு தனக்காரரின் பரம்பரையில் பிறந்து பின் எல்லாம் இழந்து இளம் வயதிலேயே வறுமை பற்ற, பின் தன் அயராது உழைப்பினால் ஓரளவிற்கு ஒரு நிலைக்கு வந்த ஒரு இஸ்லாமிய பெண் ஒருத்தியின் வாழ்வே பணிக்கரின் பேத்தி. விடாத உழைப்பு, அதற்கான ஒரு பெரு முயற்சி அவை நல்கும் தளராத நம்பிக்கை என இனிதாய் கடக்கிறது வாழ்க்கை. உழைப்பது என்பது நேர்ந்து விட்ட ஒன்றாக முதலில் அமைந்து பின் அது ரசிக்கத்தக்க ஒன்றாக மாறி ஒரு கட்டத்தில் போதையாகவே மாறி போகிறது போல பலருக்கு. எனக்குத் தெரிந்த ஒரு பாட்டி அவர்கள் மகன்கள் வாழ்வில் செட்டில் ஆகி விட்ட பிறகும் இன்னும் வீட்டுக்கு வீடு பால் ஊற்றும் தொழிலை விடவில்லை. கேட்டால், இது தொழிலப்பா என்பார். இது தொழிலா, ஒரு போதையா

சினிமா கொட்டகை - நூல் அறிமுகம்

சில நூல்களுக்கு அதன் ஆசிரியர் பெயர் ஒன்றே போதும், அந்நூலினை கையில் எடுப்பதற்கு. என்னை பொறுத்தவரையில் அப்படியான பெயர் தியடோர் பாஸ்கரன் என்பது. அதிலும் அவர் சினிமாவைப் பற்றி எழுதுகிறார் என்றால் எனக்கு ஏதும் தயக்கம் இருப்பதில்லை. அப்படியான ஒரு நூல் தான் நான் சமீபத்தில் வாசித்த சினிமா கொட்டகை. சினிமா என்னும் கலை தமிழகத்தில் வந்த புதிதில் அக்கலை பெற்ற வரவேற்பு வியக்கத்தக்கது. மௌன மொழியில் குறும்படங்களாகவே நிறைய வந்துள்ளதாகவும், அவைகளுள் சிலவை பற்றி மட்டுமே குறிப்புகள் கிடைத்துள் ளதாகவும் என்பதான பல புதிய செய்திகள். வெறும் மௌனப் படங்களை பற்றி மட்டும் பேசாமல், திரைக்கலை நமது சமூகத்தின் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும், தேவதாசியரை விடுவித்த செய்தி குறித்தும் நிறைய நிறைய தகவல்கள். யமுனா ராஜேந்திரன் அவர்களோடு தியடோர் பாஸ்கரன் நடத்தும் உரையாடல் பகுதி மிக நன்றாக வந்திருக்கிறது. சினிமா என்னும் கலை வரவு குறித்த அரசியல் வாதிகள் நிலைபாட்டில், காந்தி மற்றும் ராஜாஜி அவர்கள் எதிர்நிலைப்பாட்டை எடுக்க, மாமேதை லெனின் அவர்களோ இக்கலை மிக முக்கியமானது, இதை வலுப்படுத்த வேண்டும் என

The East was Read - நூல் அறிமுகம்

மிஷா, சோவியத்லைப், ராதுகா பதிப்பகம், சிவப்பு நிற கெட்டி அட்டையில் மாமேதை லெனின் முகம் கொண்ட புத்தகங்கள், அந்த பச்சை நிறம் கொண்ட ஒரு தனி ரக வழவழப்பான அதே சமயம் சற்றே கெட்டியான அட்டையோடு அமைந்த "குடும்பம், தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" என இவையெல்லாம் அதிகபட்சம் ஒரு 25 ரூபாய்க்குள் கிடைத்திட்ட பொழுதில் நானும் இருந்தேன் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை. கோவையின் உக்கடம் பகுதியின் பஸ் ஸ்டாண்டை ஒட்டிய பழைய கடைகளில் 2003ல் கூட நான் வெறும் 10 ரூபாய்க்கு மார்க்ஸிம் கார்க்கியின் தாய் புத்தகம் வாங்கியுள்ளேன். சோவியத் என்ற அந்த சொல்லே ஒரு பாதுகாப்பு உணர்வு மற்றும் ஏதோ நம்மோடது போல ஒரு நினைப்பு. இனி இந்த புத்தகத்திற்கு வருவோம். Leftwordபதிப்பகத்தின் மார்ச் 2019 வெளியீடு EAST WAS READ. ஒரு புத்தகத்தின் அட்டை உள்ளிட்டு மிக கவனத்துடன் வடிவமைப்பதில் தொடர்ந்து இந்த பதிப்பகம் சிறக்கிறது. தவறவே விட கூடாததாகவும், இந்தப் புத்தகத்தை வாங்கியே ஆக வேண்டும் என்ற உணர்வினை தோழர் விஜய் பிரசாத் அவர்களின் முன்னுரை நமக்கு கடத்துகிறது. 1896-97 காலத்தில் ஏற்பட்ட கடும் பஞ்ச பொழுதில் ஒரு பக்கம் 4

தினங்களின் குழந்தைகள் - நூல் அறிமுகம்

அதிகாரத்திற்கு எதிரான குரல்கள் காலந்தொட்டே அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்து வருகின்றன. அவ்வாறான குரல்கள் ஏதோ ஒரு வகையில் கொடூர ஒடுக்குதலை சந்திக்கின்றன. கொடூரமான உயிர் பலியாகவுமே பல சமயங்களில் இருக்கின்றன. லாபம் என்னும் வார்த்தை கொண்டு மக்களின் இயல்பான அடிப்படை தேர்வுகளான உடை உடுத்துதல், உணவு உள்ளிட்ட பலவற்றை நாகரிகம் என்ற வேறொரு சொல்லில் வீழ்த்தி அவர்களை அதே தேர்வுகளில் இருந்து விடுவிப்பதாக சொல்லி பிறிதொன்றில் அடிமை செய்வது என்பது தொடர்கதையாகிறது. அதோடு மட்டுமல்ல, நிலங்களின ் இயற்கையான வளத்தை பாழாக்கி அந்நிலத்தை தனது லாப வேட்கைக்கு அடிமை செய்வதும் இயல்பாகிறது. எல்லாம் உங்கள் நலத்திற்காகவே, வளமான வாழ்விற்காகவே என தேன் வார்த்தைகள் தூவி மாய அடிமை சங்கிலியை வீசி அவர்களை கவ்வுகிறது, முதலாளித்துவம். இவ்வாறான கதைகளும், அதிகாரத்திற்கு எதிராக மிக சன்னமாகவேனும் குரல்கள் எழுப்பிய மாவீரர்களின் கதை தொகுப்புமே இந்நூல். இன்றைக்கு அந்த நாள், நாளை அந்த நாள் என்பதான நாட்களின் கொண்டாட்டம் பின்னே உள்ள உண்மைகளையும், அந்த நாள், இந்த நாள் என்றில்லாது வருடம் முழுக்கே உலகின் ஏதோ ஒரு பகு

The River of Kaveri – Tulika Publishers.

The River of Kaveri – Tulika Publishers. சமீபத்தில் வாங்கிய புத்தகம். புத்தகத்தின் பக்கங்களில் ஒரு புறம் வரிகளில் வார்த்தைகள் தைத்து நிற்க, மறு புறம் வெறும் வரிகளாக படங்கள் வண்ணங்கள் சேர்க்கவென்று உள்ளன. குழந்தைகளை சுவாரசியப்படுத்த இப்படி ஒரு ஏற்பாடு. அபிகுட்டி ஒரே மூச்சில் படித்து அப்பா நம்ம காவேரியோட ஆரிஜின் (origin) மற்றும் endplace இரண்டுக்கும் போயிருக்கிறோம் என சந்தோஷப்பட, கீர்த்தனா குட்டியோ, சீரங்கம், காரைக்கால் பேரெல்லாம் வருது, தலைகாவிரி கூட வருதுப்பா என அவள் பார்த்த ிருந்த ஊர்கள் என அவளும் ஹாப்பி அண்ணாச்சி. கொஞ்சம் அச்சத்தோடேதான் வாங்கினேன், காவிரியின் கதை என்று சொல்கிறார்களே, வெறும் புவி சார்ந்து தகவல்களாக பாடப்புத்தகம் போல் இருக்குமோ என்று. அப்படியெல்லாம் இல்லை, காவிரியின் சார் உள்ள கதைகள் அநேகமும் அதன் இயல்பில் இருக்கு. அப்படியே நைசாக புவிசார் தகவல்களும் இருக்கிறது. ஒரு ஆறு அதன் கதை என்ற வகையில் இந்தப் புத்தகம் சிறப்பு. ரொம்ப அழகா, சிம்பிளா காவிரியின் பிறப்பிலிருந்து அவள் கடல் சென்று சேரும் வரை MAP இருப்பதும் அது எளிமையாக இருப்பதும் சிறப்பு.