Skip to main content

Posts

Showing posts with the label கடலாடிகள்

கஜாப் புயலும் காவிரி டெல்டாவும் - வறீதையா கான்ஸ்தந்தின் == நூல் அறிமுகம்

கடல்புற வாழ்வியல் குறித்து சமீப காலங்களில் எழுத்துக்கள் மூலம் கவனம் ஈர்க்க செய்தவர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்கள் . இதோ பாரதி புத்தகாலயமும் வறீதையா அவர்களின் படைப்போடு , படைப்பு என சொல்லலாமா , ஆய்வு என சொல்லலாம் . கஜாப் புயல் பின்னணியில் டெல்டா மாவட்டங்களின் கடல்புறத்தில் நிகழ்ந்த அழிவை , விவசாயிகளின் வாழ்வை அப்படியே இருபது ஆண்டு காலத்திற்கு சூறையாடிய கொடும் தன்மையை , இயற்கை அறிவு ( அல்லது தொழில் சார் அடிப்படை அறிவு ), அரசின் மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கை மெத்தனங்கள் மட்டுமல்லாது , எளிய மக்களை " லாபம் " என்னும் ஒற்றை இலக்கில் அழித்தொழிக்கும் கார்ப்பரேட் நல கொள்கைகளையும் , அதிகாரிகளின் ஈவு இரக்கமற்ற ஊழல்களையும் , இறுதியாய் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குறித்தும் பதிவிட்டிருக்கிறார் . MNREGA திட்டத்தால் கிராமங்களில் மக்கள் ( இந்த நூலில் பெண்கள் ) வயல் வேலைக்கு வருவதில்லை என்னும் ஒரு குற்றச்சாட்டு பலநாட்களாய் பலரும் சொல்லும் ஒன்று . இந்நூலிலும் ஒரு இடத்தில் ஒரு விவசாயி அப்படி சொல்வதாக வருகிறது . இது குறித்து " என்ன தோழர் , இப்படி சொல்றாரு , அதுமட்டுமில்ல , ...