Skip to main content

Posts

Showing posts from May, 2009

கடலோடு விளையாடி... (ஒரு நிகழ்வு அல்லது கதை)

அபிக்குட்டி ரொம்ப அழுது கொண்டிருந்தாள் என்று கடலோடு விளையாட கூட்டிச் சென்றேன். அலைகள் வந்து கால் நனைத்து மீண்டும் திரும்பி செல்வது என்பது பயமாக இருந்தாலும் கொண்டாட்டமாகவும் இருந்தது, அவளுக்கு. எவ்வளவு நேரம் தான் அலைகள் வந்து கால் நனைக்கும் விளையாட்டை விளையாடுவது. போரடிக்குமே என்று மற்றொரு அரதப் பழசான விளையாட்டை தொடங்கினேன். விளையாட்டு பழசாக இருந்தாலும், அபிக்குட்டி புதியவள்தானே. அலைகள் தீண்டும் மணல் வெளியில் அவள் பெயர் எழுதினேன். அலைகள் வந்து அழித்துவிட்டு போயிற்று. ஹொய் என்றொரு பூரிப்பு. மீண்டும் எழுதினேன், மீண்டும் அலை வந்து அழித்தது. இம்முறை அபிக்குட்டி ஏக சந்தோஷம். இதையே சில தடவைகள் தொடர்ந்தேன். இம்முறை அலை வந்து அழிக்க அவள் அழுதாள். அழுகைக்கு காரணம் புரியாமல் சரியென்று அலைகள் நனைக்கும் பகுதியிலிருந்து சற்று தள்ளி பெயரெழுதினேன். அலை எப்படி இதை அழிக்குது பார்க்கலாம் என்று அபிக்குட்டியிடம் சொன்னேன். அவளிடம் அழுகையும் நின்றது. அப்பாடா என்று நினைக்கும் முன்னர் ஒரு பெரிய அலை வந்து பெயர் அழித்துவிட்டுப் போயிற்று. அவள் அழத்தொடங்கிவிட்டாள். அழாதேடா கண்

சாதனை தொடர்கிறது.. .

பட்டுக்கோட்டை பக்கத்தில் குறிச்சி என்றொரு கிராமம்। அங்கேதான் இந்த அதிசயம் நிகழ்கிறது. ஒரு அசலான பள்ளி. அசலான என்றால் குழந்தைகளை குழந்தைகளாக பாவித்து அவர்கள் அறிவூட்டி (படிப்பு புகட்டியல்ல), அவர்களை சமூகத்தோடு இணக்கமானவர்களாக, அதன் மேன்மைக்காக உழைப்பவர்களாக மாற்றுகின்ற வேலையை செய்கிறது அப்பள்ளி. இந்த வருடம் நாடெங்கும் தனியார் பள்ளிகளில் பள்ளிக் கட்டணம் அசாதாரணமாய் உயர்ந்துள்ளதை எடுத்து போராட்டம் நடந்து வருகிறது. இப்பள்ளியில் கட்டணமும் குறைவு. மேலும் கட்டணத்தை தவணைகளிலும் கட்டலாம், கட்ட முடியாதவர்களுக்கு நல்ல உள்ளங்களின் மூலமும் அவர்களின் படிப்பை தொடரவும் பள்ளியே உதவி செய்கிறது. பொருளாதாரத்தில் தாழ்ந்து இருந்த காலத்தும், தங்கள் திறமைகளால் அனைவரது கவனத்தையும் இப்பள்ளி குழந்தைகள் வெகுவாக கவர்ந்து வருகின்றனர்.மாணவ மணிகள் தங்கள் ஆசிரியரிடம் சிரித்து பேசி இயல்பாக உரையாடுவதை அதிசயத்துடனும் சற்று பொறாமையோடும் நான் கவனித்தேன். இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனம் நடத்துகிற பள்ளி அது. வகுப்பறைகள் யுக மௌனம் கலைத்து, மிக்க உயிர்ப்போடு இருக்கும் அந்த அதிசயத்தினை என்னவென்று சொல்வது. வகுப்ப

கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்களேன்....

ஆனந்தமாய் ஒரு குளியல் போட்டுவிட்டு டவலால் தலையைத் துவட்டிக் கொண்டே ஹாலுக்கு வருகிறார் ஒருவர் என்று வைத்துக் கொள்ளுங்களேன்। மின் விசிறியைச் சுழலவிட்டு அதன் கீழே தலைமுடியை “ஆற’ வைக்கத் துவங்குகிற போது அந்த டவலுக்கு அடுத்த வேலை ஆரம்பிக்கிறது। யாரிடமாவது பேசிக்கொண்டே அந்த மெல்லிய வெள்ளை துவாலையின் நுனியை இலேசாக உருட்டித் திரட்டி காதுக்குள் அதைச் செலுத்திக் குடைந்து பார்ப்பதும், வெளியே அதை எடுத்து சூடான நீரின் வெதுமையோடு அதில் அழுக்கு படிந்திருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்வதும் முக்கியமான கட்டங்கள். “அப்பாடா, இப்பதான் எல்லாம் கிளியரா கேக்குது” என்று திருப்தியோடு அந்தக் காட்சி முடிகிறது. சிலர் சாவிக்கொத்தில் ஞாபகமாக ஒரு காதுக்குரும்பியும் வைத்திருப்பார்கள்। பயணத்தில், பூங்காவில் ஓய்வு கொள்ளும் பொழுதுகளில் குருப்மிக்கு வேலை நிறைய இருக்கும்। போட்டுக் குடைந்தெடுத்து விடுவார்கள். போதாதற்கு, சாலைகளில் “காது சுத்தம் செய்கிறேன்” என்று விதவிதமான வளைவுகளும், கொக்கிகளும் கொண்ட இரும்பு ஆயுதங்களோடு அலைகிற நடைபாதை ENT ஸ்பெஷலிஸ்டுகள் வேறு. இவையல்லாமல்

ஏன் அவர்கள் அப்படி செய்தார்கள்?

இப்போது டிசம்பர் மாதம், 1993ஆம் ஆண்டு. இடம்: பேருந்து நிலையம், அயோத்தியா நகரம். காட்சி : 8 வயது சிறுமி கிழிந்த துணி, கலைந்த தலை, கண்ணில் வெறுமை, தொலைத்த நம்பிக்கை என‌ பிச்சைக் கோலத்துடன் கையில் தட்டும், இடுப்பில் ஒரு குழந்தையோடும். சேகர் குப்தா, இந்தியா டுடே பத்திரிகையின் நிருபர் இந்தக் காட்சியை காண்கிறார். என்னவோ தோன்றி சிறுமியின் அருகில் செல்கிறார். குனிந்து சிறுமியிடம் கேட்கிறார், "உன் பேர் என்ன?". சிறுமி,ஒரு வெறுப்புடன் "ஷமீம் பானு" என்கிறாள். குப்தா: "ஏன் பிச்சை எடுக்கிறாய்?, பள்ளிக்கு செல்லலாமே". சிறுமி, "வேறு வழியில்லை, பசிக்குதே" என்கிறாள். அவளே தொடர்ந்து "நானும் பள்ளிக்கு சென்றிருந்தேனே" என்றாள். சொல்லுகையில் அவள் கண்ணில் தோன்றிய ஒளி என்னவென்று விவரிக்க இயலாததாய் இருந்தது. ஒரு கணம் நற்காலத்தின் நினைவுகள் மின்னியதாக இருக்கலாம். "அப்போதெல்லாம், என் வாப்பா என்னை அவரது பளபளவென துடைத்த சைக்கிளில் என்னை முன் வைத்தும், என் அண்ணனை பின்னாடி வைத்தும் பள்ளிக்கு கூட்டி செல்வார். வழியில் எப்படியோ என்னை தேடி வந்து என்னை முத்தமிடும் பட்