Skip to main content

Posts

Showing posts from April, 2009

எக்காள‌ம்

மீண்டும் அதே சத்தம் சத்தம் இம்முறை அதிகமாய் நான் எழுத உட்காரும்போதுதான் இந்த சத்தம் ரொம்ப நாளாய் இது தொடர்கிறது நானும் மீண்டும் மீண்டும் எழுதுகிறேன் மீண்டும் மீண்டும் எக்காள‌ ச‌த்த‌ம் க‌ளுக்கு, க‌ளுக்கு என்ற‌ ஏள‌ன‌ ச‌த்த‌ம் கொஞ்ச‌ம் எழுதி கொஞ்ச‌ம் எழுதி க‌ச‌க்கி போட்ட‌வ‌ற்றையெல்லாம் தின்னு கொழுத்து, வ‌யிறு புடைத்து என்னைப் பார்த்தே எக்காள‌ முழ‌க்க‌ம் செய்கிற‌து குப்பைத்தொட்டி இதோ நான் மீண்டும் அத‌ன் வ‌யிற்றை நிர‌ப்புகிறேன் எக்காள‌ம் எழுப்ப‌ட்டும் அத‌ன் வ‌யிற்றுக்கு நான் இரையிடாத‌ அந்நாள்வ‌ரை...

காதலிக்கு ரோஜா, காதலனுக்குப் புத்தகம்...

முந்தைய இரண்டு வாரங்களில் புதிய புத்தகங்கள் படிக்காதவருடைய உரையாடலில் எந்த நறுமணமும் கமழ்வதில்லை. - சீனப் பழமொழி. புத்தகத்தைப் பெறுவதற்குச் சில உபாயங்கள் இருக்கின்றன என்று தமது நூலுக்கான முன்னுரை ஒன்றில் இப்படி எழுதுகிறார் எழுத்தாளர் கல்கி; “முதலாவது இரவல் வாங்குவது. இரண்டாவது யாரிடமிருந்தாவது திருடி எடுத்து வருவது. மூன்றாவது காசு கொடுத்து வாங்குவ்து. ஆனால், பெரும்பாலானோர்க்கு இந்த கடைசி உபாயம் சித்திப்பதில்லை”. கல்கியின் நையாண்டியை ரசிப்போம். ஆனால், எப்படியாவது ஒரு வழியில் படிக்கிற ஏற்பாட்டைச் செய்து கொள்ளுங்கள் என்பதுதான் வாசிப்பு இயக்கத்துகாரர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. புத்தக வாசிப்பு உள்ளபடியே ஓர் இனிமையான அனுபவம் என்றும், நமக்குள்ளேயே நாம் துவக்கும் ஒரு ரசமான பயணம் என்றும் கண்டுபிடித்து விடுபவர்கள் வாசிப்பை விடவேமாட்டார்கள். எழுத்துக்களை முதன்முதலாகச் சமைத்தவர்களை வணங்கத் தோன்றுகிறது. தற்செயலாகத் தனது கருவிகள் மண்ணிலோ, பாறையிலோ பட்டுக் கீறியதிலிருந்து சித்திரங்களை உருவாக்கியவர்கள் உழைப்பாளி மனிதர்களே. சித்திர வடிவங்கள் ஏதோ ஒரு இறுக்கம் கலைந்த நாளில், ‘ஜெம்’ கிளிப்பைப் பிரித்து

பகத்சிங் கடிதங்கள்

கீழ்கண்ட கடிதம், அவர் தமது சகோதரர் குல்தாருக்கு எழுதிய கடைசிக் கடிதம். மத்திய சிறை, லாகூர்/ 3 மார்ச்சு 1931. அன்புள்ள குல்தாருக்கு, உன்னுடைய கண்களில், இன்று கண்ணீரைக் கண்டதும் நான் பெரிதும் மனத்துய‌ரம் அடைந்தேன். இன்று நீ பேசியதில் வேதனை நிரம்பியிருந்தது. உன் கண்ணீரை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. இளைஞனே! மன உறுதியுடன் படித்து அறிவை வளர்த்துக்கொள். உடல்நலத்திலும் கவனமாக இரு; நான் வேறென்ன சொல்வது? உலகின் நாட்டமெல்லாம் கூட்டிக்கழித்து லாப நஷ்டம் பார்ப்பதிலே செல்லுகையில், எங்கள் நாட்டமெல்லாம் எட்டிடுதல் இன்னல்களின் உச்சகட்டம். உலகைத் தூற்றோம் நாம், விதியைப் பழியோம் நாம் மலைபுரண்டிடினும் நிலைகுலையோம் நாம்; சில கணமே வாழ்ந்திருவேன் உலகீரே! விடியல் தீபம் நான், அணையவே விழைகின்றேன் விட்டுச் செல்கிறேன் எண்ணத்தின் மின்னல்கள் மண்பாண்டமிது மண்ணிலே கலந்திடுமே. நல்லது, விடைபெறுகிறேன்; நாட்டு மக்களே; மகிழ்ச்சியாக இருங்கள்; நான் என் பயணத்தில் செல்கிறேன்; தைரியமாக இருக்கவும், நமஸ்தே! உனது சகோதரன், பகத் சிங் ஆதாரம்: எப்போதாவாது எண்ணிப்பாருங்கள்... (தியாகச் செம்மல்களின் கடிதங்கள் ), மொழியாக்கம் :

யானைகள் அழியும் பேருயிர்

தமிழ்நாட்டு அறிஞர், எழுத்தாளர் பலர், மற்ற துறைகலில் ஆர்வம் காட்டுமளவுக்கு விலங்கியல் மற்றும் இயற்கை வரலாறு குறித்து ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில், அவையே மனித நல்வாழ்வின் பொதுத் தேவை என் இன்னும் அவர்களால் உணர்ந்து கொள்ளப்படவில்லை போலும். குறிப்பாக 'டிஸ்கவரி, அனிமல் பிணானட், நேஷனல் ஜியாகரஃபிக், போகோ போன்ற சானல்கள் தமிழக வீடுகளுக்குள் வந்துவிட்ட பிறகும்கூட, நமது சிந்தனைகளின், செயல்பாடுகளின் நிலை மிகவும் வருந்ததக்கதே. நம்மில் உணர்வு கொண்டோரை கேள்விக்குள்ளாக்கி, புரட்டிப் போடும் மேற்கண்ட காட்சிப்படிம சானல்கள் குழந்தைகளுக்கானது என்று நமது 'பெரியவர்கள்' சொல்வதும் மிகுந்த வேதனைக்குரியது. ........................ ஒரு 40 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்த வனப்பகுதி ஒன்று மனிதத் தலையீட்டால் அழியும் போது 1500 வகை பூக்கும் செடி, கொடிகளும், 700 வகை மரங்களும், 150 வகைப் பூச்சி, புழுக்களும், 100 வகை ஊர்வனவும், 60 வகை நீர் நில வாழ்விகளும் அழிந்து போகின்றன என்றும், ஒரு மழைக்கானக மரம் 400 வகைப் பூச்சிகளுக்க்கு வாழிடமாக இருக்கிறது என்றும் ஐ.நாவின் சுற்றுச் சூழல் அறிவிக்கை ஒன்று சுட்டிக் காட்டுகிறது.

பாலபாரதி என்றொரு கவிஞர்

நீயுமா? வெண்பட்டு உடுத்தி பூக்களால் அலங்கரித்து மின் விளக்குகள் ஜொலிக்க‌ வீதி வீதியாக உலாவரும் மேலத்தெரு பூ மாரியம்மனுக்கு கூடவா தெரியவில்லை....... கிழக்குபுறமாக இருக்கும் எங்கள் காலணித் தெருவுக்குச் செல்லும் வழி? பேத‌ம் சின்னதாக, பெரியதாக, வட்டமாக, நீளமாக, புள்ளியாக, கீற்றாக, ஏதோ ஒரு வடிவத்தில் ஒட்டிக் கொண்டிருக்க‌ வேண்டும் என் நெற்றிப் பொட்டு. உன் இருப்பை தெரிவிப்பதற்காக! வெறும் நெற்றியோடு வலம் வ‌ந்தாலும் உன்னை யார் கேட்டுவிட‌ப் போகிறார்க‌ள்? 'உன் மனைவியை இழ‌ந்துவிட்டாயா?' என்று! மீறல் அப்பா சமையல் செய்தார்! அம்மா பேப்பர் படித்தார்! அண்ண‌ன் வீடு கூட்டினான்! த‌ங்கை கிரிக்கெட் விளையாடினாள்! ஆசிரிய‌ர் காதைத் திருகினார் சில பொய்களும் சில உண்மைகளும் (க‌விதைத் தொகுப்பு)ஆசிரிய‌ர் : பாலபாரதி வெளியீடு : வ‌ம்சி புக்ஸ், 19. d.m.சரோன், திருவ‌ண்ணாம‌லை ‍ 606 601.

ஜோல்னா பை

ஜோல்னா பை,அதை பயன்படுத்தும் எவருக்கும் மூன்றாம் கை. அவர் நிச்சயமாக பத்திரிகையாளர், இல்லை இல்லை கம்யூனிசஸ்ட் என்று அது கொடுக்கும் முகவரிகள். முதன் முதலில் எங்கள் வீட்டில் அதை பயன்படுத்தியது என் அண்ணன்தான். அநேகமாக அவன் தன் முதன் சம்பளத்தில் முதலாய் அதையே வாங்கியிருக்க வேண்டும். அந்த நாள். முதன் முதலாய் அவன் வீட்டிற்கு அதை ஒரு இரவு கொண்டு வருகிறான். அடடே! சத்தியமாக அன்றுதான் அவன் என்னைவிட பெரியவன் என்று நினைத்தேன். கம்பீரமாக, ஒரு தேஜஸுடன் அவன் அன்று இருந்தான் என்றே நினைக்கிறேன். பின் ஒரு நாளில் தெரிந்து கொண்டேன், அவனுக்கு அப்பை கிடைத்ததற்கு காரணம் சிவராமன் தோழர். BEFI சங்கம் அண்ணனுக்கு கொடுத்த அடையாள அட்டை அப்பை என்று தோழர் சிவராமனை (வெகுநாட்க‌ளுக்கு பின்) கண்டபோது தெரிந்து கொண்டேன். பின் வெண்தாடியில் எப்போதும் புன்னகை வழியவிடும் கியூபா போய் விட்டுவந்த தோழர் கிருஷ்ணனும், ஹாஹாஹா என்று அனைத்து அங்கங்களும் அதிர சிரிக்கும் தோழர் வேணுவும் என் அவதானிப்பை அறுதி செய்தனர். இன்னும் இருக்கு ஜோல்னாவோடு என் ஜோர் பயணம்.............