Skip to main content

Posts

Showing posts from August, 2021

மாடுகளின் வேலைநிறுத்தம், துள்ளி, உழைப்பாளி வாத்து

  சிறார்களுக்கான புத்தகம் நம்மை மாதிரி பெரிசுகள் ஏன் படிக்க வேண்டும் என என் நண்பர்கள் சிலர் நினைக்கிறார்கள். எந்தப் புத்தகத்திலும் என்ன புதுசா இருக்கப் போகுது என நினைக்கும் நண்பர்களும் இருக்கிறார்கள். ஆனால் நான் தொடர்ந்து சிறார்களுக்கென வரும் நூல்களையும் ஆர்வத்துடன் படித்து வருகிறேன். என்னமோ அதில் ஒரு சந்தோஷம் கிடைக்கிறது.    அப்படியாக நான் வாசித்த மூன்று நூல்களை மட்டுமே இங்கு பேசப் போகிறேன். மூன்றுமே புக்ஸ் பார் சில்ரன் வெளியீடு. மூன்றுமே அன்பு வாகினி என்பவர் மொழியாகத்தில் வந்துள்ளது. 1. துள்ளி 2. உழைப்பாளி வாத்து 3. மாடுகளின் வேலைநிறுத்தம்.    இப்புத்தகங்கள் ஏற்கெனவே புக்ஸ் பார் சில்ரன் வெளியிட்ட ஆதி வள்ளியப்பன் அவர்களின் மொழியாக்கத்தில் நீ கரடி என யார் சொன்னது, இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் என்பவனவற்றின் வகை சார்ந்தது. இவையெல்லாம் சிறார்களுக்கு என மட்டுமே எழுதப்பட்டதா என தெரியவில்லை. அவ்வாறு இருக்கவும் வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. நேற்றைய இரவு என் குழந்தைகளுடனான நேரத்தில் நான் இவ்வாறு சொன்னேன், “எனக்கென்னவோ, இவை குழந்தைகளுக்காகவென எழுதப்பட்டதாக தெரியவில்லை. ஆலைத் தொழிலா

கதிரேசன் செட்டியாரின் காதல்

ரொம்ப நாளாயிடுச்சு… இல்ல இல்ல ரொம்ப வருஷமாயிடுச்சு.. ஒரு துப்பறியும் நாவல் படிச்சு.. வாசிக்க துவங்கிய காலத்தில், சுஜாதா, அசோகன் பாக்கெட் நாவல் என எத்தனை எத்தனை படிச்சிருப்போம். ஹூம்ம். இப்ப போய் அதையெல்லாம் நினைச்சுப் பார்க்கிறதா என கூட சில சமயம் நினைச்சிருக்கேன். அதெல்லாம் ஒரு பெருமையா என.,., ஆனாலும் ஒரு துப்பறியும் நவீனம் ஒரு பத்து வருடம் முன்பு வந்திருக்கு என்றவுடனே பழைய நினைவின் எள்ளல்கள் எல்லாம் போய் உடனே ஆர்டர் செய்து வாங்கி படித்தும் முடித்துவிட்டேன்.   நான் வாசித்த துப்பறியும் நாவல்களில் இது வேறு ரகம். அதாவது துப்பறியும் ஹீரோ இல்லை, அந்த துப்பறியும் ஹீரோ காமெடியாக பேசுகிறேன் என பெண்களை இழிவாக கேலி செய்வதில்லை, ஆஹா இந்த ஹீரோ நல்லவர் அவரிடம் ராகவன் instinct என்ற ஒன்று உள்ளதே என வியக்கவும் இடமில்லை. அவ்வாறான வியப்பின் மூலம் வாசகராகிய நாம் துப்பறிவாளனாக மாறாமல் அங்கும் ஹீரோவிற்காக காத்திருக்கிறோம். சத்யஜித் ரேயின் பெலூடா நூல்கள் எல்லாம் துப்பறியும் மர்ம நாவல்கள் தான். ஆனால் அவை எல்லாம் நம்முள் ஒரு scandalous thing என்பது போல ஒரு எண்ணத்தை உருவாக்காது, வாசிக்கும் வாசகருக்கு எல்லா துப

யார் கைகளில் இந்து ஆலயங்கள்

கோயில்கள் சூழ் ஊரில் பிறந்தவன் நான் . தடுக்கி விழுந்தால் கோயில்கள் என காஞ்சிபுரத்தில் சைவ , வைணவ , ஜைன காஞ்சிகளில் உள்ள பல கோவில்களுக்கும் சென்றுள்ளேன் . சொல்லப் போனால் 1990 களில் மக்கள் நாளொன்றுக்கு ஒரு கோவில் செல்வது வழக்கம் . செவ்வாய் குமரக்கோட்டம் , புதன் ஒரு கோயில் , வியாழன் குரு கோவில் , வெள்ளி காமாட்சியம்மன் , சனி பெருமாள் கோவில் , ஞாயிறு கோனேரிகுப்பம் அம்மன் என எல்லா நாளும் ஏதோ ஒரு கோவிலுக்கு மக்கள் செல்வர் . எங்கோ ஒரு கோவிலில் ஏதோ ஒரு விசேஷம் என வருடந்தோறும் ஏதோ கொண்டாட்ட மனநிலை . வாரந்தோறும் வெள்ளி தேர் , வருடத்திற்கு ஒரு பெருமாள் தேர் , கருட சேவை என பஞ்சமே இல்லை . அப்படியொன்றும் கடவுள் நம்பிக்கை என்ற ஒன்று எனக்கு இருந்ததாக எப்போதுமே நினைவில் இல்லை . ஆனால் கோயில்கள் செல்வது என்பது காஞ்சி நகர் வாசிகளுக்கே உள்ள பழக்கம் போல . எப்படி ஶ்ரீதர் கபேவில் ரவா தோசை சாப்பிடுவதோ , இந்தியன் காபி ஹவுஸில் சாம்பார் இட்லி சாப்பிடுவதோ , கனக விலாஸில் காபி சாப்பிடுவதோ அதை போல கோயில் செல்வதும் காஞ்சி நக