Skip to main content

Posts

Showing posts from 2010

எரியும் பனிக்காடு படித்த பூக்குட்டி

பொதுவாகவே புத்தகங்கள் நம்முள் ஒரு தாக்கத்தினை அது ஏதாவது வகையிலும் ஏற்படுத்த வல்லவை. ஒரு சில நம்முள் அதிர்வுகள் ஏற்படுத்தலாம், அசைத்தும் போடலாம். சிலவே நம்மை புரட்டி போட, நம்மை முற்றாக குலைத்து விட மிகுந்த சக்தி மிகுந்தவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட புத்தகங்கள் பெரும்பாலானது (அநேகமாக எல்லாமும்), எளிய மக்களின் ஏழ்மையைம், அவமானங்களையும், அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களை முற்றாக சுரண்டுதலையும், சுரண்டலை, அவமானங்களை எதிர்த்து விடுதலை வேண்டி அவர்களின் கூட்டு போராட்ட நிகழ்வையும், உணர்வையுமே சொல்பவனவாக உள்ளன. சில அவ்வாறான எளிய மனிதர்களாக இருந்து பின் பெரும் தலைவர்களாக அவர்கள் மாறிய வாழ்க்கை வரலாற்றினையும், பலகோடி எளிய மனிதர்களுக்காக தங்கள் வாழ்வினை அர்ப்பணித்த பல புரட்சி நாயகர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களாகவும், எளிய மனிதர்களின் வாழ்க்கை முன்னெடுக்க வல்ல தத்துவ நூல்களாகவும் உள்ளன. இவ்வகையான புத்தகங்களில் பலருக்கும் பலவித தேர்வுகள் இருக்கலாம். சிலருக்கு ஏன், பலருக்கும் ” மார்க்ஸிம் கார்க்கியின் அழியா காவியம் தாய் ” , நிரஞ்சனாவின் அற்புத படைப்பு “நினைவுகள் அழிவத

மாற்றுக் கல்விக்கான புத்தக வாசிப்பு முகாம்

மாற்றுக் கல்விக்கான அடுத்த புத்தக வாசிப்பு முகாம் (ஜனவரி 8,9) ”அடடா, நான் விட்டுவிட்டேனே, என்னை கொஞ்சம் “அலர்ட்” பண்ணியிருக்கக் கூடாதா, மிஸ் பண்ணிட்டேனே”, “தோழர், இப்படியிருக்கும் என்று சொல்லியிருக்கக் கூடாதா, நான் கூட வந்திருப்பேனே”, “புதிய ஆசிரியன் அக்டோபர், நவம்பர் மாத இதழ் படித்தேன், ஐயா, அடுத்த முகாம் எப்போது?” “அடுத்த முகாமிற்கு என் பெயரை இப்பொழுதே எழுதிவிடுங்க” என்று கடந்த செப்டம்பர் 4,5 தேதிகளில் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் ஈரோடு அறிவியல் இயக்கம் நடத்திய முதல் புத்தக வாசிப்பு முகாமிற்கு வர இயலாத பலருடைய ஆதங்கத்தினையும், ஏக்கத்தினையும் போக்கும் வகையில் அடுத்த வாசிப்பு முகாம் இதோ வருகின்ற புதிய வருடத்தில் (2011) ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் ஈரோடு நகரிலேயே நடைபெற உள்ளது. சென்ற முகாம் குறித்த பதிவுகள் www.puthiyaaasiriyan.com என்கிற வலைத்தளத்திலும் காணலாம். புதிய ஆசிரியன் இதழின் அக்டோபர், நவம்பர் மாதங்களில் காணலாம். http://www.puthiyaaasiriyan.com/index.php?year=2010&month=10&pageid=6 http://www.puthiyaaasiriyan.com/index.php?year=2010&month=11&pageid

அவர் நிழலில் .......... நானும், பிறரும்

நண்பர்களே, செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி கவிஞர் புதுவை ஞானகுமாரன் என்கிற தோழர் நாகசுந்தரம் அவர்களின் மறைவினையொட்டி அவரது நண்பர்கள், தோழர்கள் பலரும் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். அதில் பேராசிரியரும் என் நண்பருமான ஹேமலதா ( 9488077788 ) அவர்களின் அஞ்சலி … அவர் நிழலில் .......... நானும், பிறரும் அடக்க, அடக்க, அடங்காமல் மேலெழும்பி மேலெழும்பி வரும் துயரம் அது. இனி என்ன்? எப்படி? என்ற பிதற்றலான கேள்விகள் வெடித்தது. அர்த்தமற்ற வெறித்த பார்வையாக மற்றவர்களுக்கு தெரிந்தது என் பார்வை. நினைவுகள் புரட்டி எடுத்தது. அவரின் நடை, பேச்சு, எழுத்துவேகம், அதிராத குரல், மென்மை, வருடும் புன்னகை, இலக்கிய பேராவல், படைப்பு சுகத்தை அனுபவிக்கும் அவரின் உவகை, அவரின் பேனா வேகம், பெரும் நட்பு வட்டம், சுழன்றடித்து சலிப்பில்லாமல் சலசலப்பில்லாமல் இயக்க பணியாற்றும் முனைப்பு, செயல் துடிப்பு, எளிமை, கல்வி பணியில் பிடிப்பு, சுற்றுச்சூழல் காக்க்கும் பொறுப்புணர்வு, தெளிவான அரசியல் ச்மூக பார்வை, மாற்றுக்கருத்தை பல சமயங்களில் வெளிப்படுத்தாமல் விழுங்கும் மௌனம், சில சமயங்களில் தன் கருத்தை மாற்றிக் கொள்

ஒற்றை வைக்கோல் புரட்சி யல்ல ஒற்றை புத்தக வாசிப்பு புரட்சி

நண்பர்களே, இதெல்லாம் இந்தியாவில் நடக்குமா? சாத்தியம் தானா? ஒரேஒரு புத்தகம், அதை வைத்து கொண்டு இரண்டு நாள் விவாத அரங்கம். அந்த அரங்கத்திற்கு நாமே காசு அனுப்பி கலந்து கொள்ள வேண்டும். வெறும் 30 பேர் மட்டுமே அனுமதி. முதல் முயற்சியாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு கிளை இந்த அரிய நிகழ்வை சாத்தியமாக்கவிருக்கிறது. பாவ்லோ பிரயரே என்கிற பிரேசில் நாட்டு கல்வியாளர் எழுதிய "ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை" (Pedagogy of the oppressed) என்கிற மகத்தான புத்தகத்தின் (பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு) மீதான விவாத அரங்கு பவானி சாகர் அணை அருகில் வருகிற செப்டம்பர் மாதம் 4 5 தேதிகளில் நடக்க விருக்கிறது. இந்த நாட்டில் புரட்சி என்கிற வார்த்தை போன்றே கல்வியாளர் என்கிற பதமும் மிகவும் கொச்சைப்படுத்தப்படுகிறது. கல்வி நிறுவனம்(?) வைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் கல்வியாளர்கள் என்கிற மிக மோசமான அர்த்தம் இங்கே நிலவுகிறது. கல்வியாளர் என்றால் என்ன? மாற்றுக் கல்வி என்றால் என்ன? வாருங்களேன் அற்புதமானதொரு சுகானுபவத்தில் நாமும் கலப்போம். .. வாசிப்பு முகாம் அழைப்பு ஒடுக்கப்பட்டோரின் மாற்

(காலைக்) கடன் பட்டார் நெஞ்சம் போல்..........

பொதுத்துறை நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் அந்தப் பெண்மணிக்கு திங்கட்கிழமை தொடங்கி சனி வரையிலும் அலுவலகத்தில் வேலை. ஞாயிறு தவறாமல் மருத்துவமனையில் போய் நிற்க வேண்டும். அவரது நான்கு வயதுக் குழந்தைக்காக. குழந்தைக்கு ஒரு நோயும் இல்லை. எந்தச் சிகிச்சையும் இல்லை. பின் எதற்காக....? வாரம் முழுவதும் வேறு எந்தக் குழந்தையைப் போன்றே சாதாரணமாக உணவு எடுத்துக் கொண்டாலும், விளையாடினாலும், படித்தாலும் ஒரு முக்கியமான செய்கையை மட்டும் அந்தக் குழந்தையால் செய்து கொள்ள முடியவில்லை. Bowels Clearance என்று சொல்கிறோமே அது. அதாவது குடலிலிருந்து கழிவுகளை அகற்ற முடிவதில்லை. அதற்காக வாராவாரம் 'இனிமா' கொடுத்து வேலையை முடித்துக் கொண்டிருந்தனர். அப்புறம் நண்பர் ஒருவரது ஆலோசனைப்படி மருத்துவர் ஒருவரை அணுகியிருக்கின்றனர். அவர் சொன்னாராம்: "தினமும் காலையில் எழுந்ததும் டாய்லெட்டில் உட்கார வையுங்கள் பார்க்கலாம்". அது வீண் வேலை என்றிருக்கிறார் குழந்தையின் தாய். "பரவாயில்லை. தினம் ஒரு பத்து நிமிடம் வீணாகவே போகட்டும். உட்கார்ந்து பார்த்துவிட்டு வரட்டும்...அது அவனது அன்றாடப் பழக்கம

வாழ்வின் உயிர்த்துளி ஏந்தியிருக்கும் குவளைகள்........

சைப்ரஸ் மரத்தால் நீண்ட நாட்களுக்குப் பாதுகாப்பான வகையில் ஒரு பெட்டி செய்தேன், எதற்காக? அதில் பை லெடியன் என்ற எனது பெயர் குறிக்கப் பட்டிருந்தது என் வாழ்நாள் முழுவதும் ஓர் எழுத்தாளனாகவே இருந்துவிட்டேன்.. என் மூவாயிரம் கவிதைகளையும், உரைநடையையும் எழுபது பாகங்களாக நான் சேகரித்து வைத்தேன் கடைசியில் அவை அழிந்தும் தொலைந்தும் போய்விடும் என்று எனக்குத் தெரியும் இருந்தும் அவை வீசி எறியப் படக் கூடாது என்றே விரும்பினேன் எனவே அவற்றைப் பூட்டி எ ன் கவனத்திலேயே வைத்திருப்பேன். எனக்கு மகன்களோ என் எழுத்தின் மீது கவனம் கொண்டவர்களோ இல்லை என்னால் செய்ய முடிந்ததெல்லாம் அவற்றை என் மகளிடம் கொடுத்து என் பேரனிடம் ஒப்படைக்க விடுவதுதான்... - சீனக் கவிஞன் பை ஜூயி (கி பி 772 - 846) தமிழில்: சுந்தர்ஜி பா ங்க் ஒர்க்கர்ஸ் யுனிட்டி பத்திரிகையின் ஏப்ரல் இதழின் முகப்பு அட்டை என்னை பாதித்தபடி இருக்கிறது. மாநகரத்தின் மழை நீர் பெருகிய தெருவின் குறுக்கே, தான் நடக்கவே தள்ளாடும் மனிதர் ஒருவர் மெனக்கெட்டு புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு கடக்கும் அந்தக் காட்சி (புகைப்படம்: சி சி விஜயகுமார்) எத்தனையோ சிந்த

ஏகாதிபத்தியமும் நித்தியானந்தாக்களும்

ஏகாதிபத்தியமும் நித்தியானந்தாக்களும் என்ற தலைப்பைக் கண்டவுடன் பலர் முகத்தைஸ் சுருக்கலாம். இன்னும் சிலர் "ஆரம்பிச்சுட்டாங்கையா, ஆரம்பிச்சுட்டாங்க" எனக் கூறலாம். கட்டுரையைப் படித்து முடித்த பிறகு நித்தியானந்தாக்களுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் தொடர்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை நீங்களே உணர்வீர்கள். 1. நித்தியானந்தா முதல் அனைத்து ஆனந்தாகளும் அல்லது சாமியார்களும் 25 முதல் 35 வயதிற்கு மிகாதவர்களாக இருக்கக் காரணமென்ன? 2. அனைத்து ஆனந்தாகளும் நுனி நாக்கு ஆங்கிலம் எங்கு கற்று வந்தார்கள்? 3.இத்தகைய எல்லா சாமியார்களும் இங்கு மடத்தை துவங்கும் முன்னர் அமெரிக்காவிலோ கனடாவிலோ இரண்டாண்டுகள் வரை தங்கியிருந்து பயிற்சி எடுத்து வருவதாக சொல்லப்படுகிறதே எப்படி? 4.ஒவ்வொரு ஆனந்தாவின் மடமும் துவக்கத்திலேயே பலகோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்படுகிறதே அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? உதாரணமாக, நித்தியானந்தா ஆசிரமம், வேலூர் நாராயிணி அம்மன்(சுமார் 400 கோடி), ஆந்திர மா நில இராஜமுந்திரி இளவட்ட சாமியார் (பெயர் தெரியவில்லை), இத்தனை நூறு கோடிகள் எங்கிருந்து வந்தது? 5.நித்தியானந்தாவிற்கு நிதி மேலாளர் கனடா ந

சுகந்தி டீச்சரும் அண்ணா விருதும்

சுகந்தி டீச்சர், இந்தப் பெயர் சென்ற ஆண்டு (2009) டிசம்பர் மாத துவக்கத்தில் அசாத்திய தைரியத்திற்கும், கடமையுணர்ச்சியின் உச்சத்திற்கும், மிக உயர்ந்த தியாகத்திற்கும் அர்த்தம் கொடுப்பதாக தமிழ் சமூகத்தில் பலராலும் பேசப்பட்டது. அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் இந்தப் பெயர் குறித்து அவர் அவர்களுக்கே உரிய பாணியில் செய்தி வெளியிட்டது. இன்னும் தெரியாதவர்களுக்கு, சுகந்தி டீச்சர் என்பவர் 21 வயதே ஆன பெண் ஆசிரியர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் ஒன்றியம் அருகே கட்டிப்புலம் கிராமத்தின் கலைவாணி பள்ளி என்கிற தனியார் கிராமப் பள்ளியின் ஆசிரியை. இப்போது தெரிந்திருக்குமே. இன்னும் தெரியாதவர்களுக்கு, உங்கள் மேல் தப்பல்ல. உங்கள் மறதியே காரணம். வேறு ஒன்றுமல்ல. மக்களின் மறதியில்தானே பல தவறுகளும், ஊழல்களும், பெரிய குற்றங்களும், ஏன் படுகொலைகளுமே மறைக்கப்படுகின்றன, தீயர்களும், கொடும்பாவிகளும், பொய்யர்களும் தலைவர்கள் ஆகிறார்கள். இப்போதும் தெரியாதவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். ஏனெனில், அது யாதொரு பயனும் தரப்போவதில்லை. நீங்கள் மானாட மயிலாட, டீல் நோ டீல் என் எதையும் பார்க்கலாம். இது எதற்கு? அஜய் செல்வபார

சிவப்பின் உவப்பில் சிந்தை முழுக்க சித்தாந்தம்...........

என்னவோ தெரியவில்லை, அண்மைக்காலமாக மிக நெருக்கமாக பாதிப்பு ஏற்படுத்திய நண்பர்கள், தோழர்களை மிகக் குறைந்த இடைவெளியில் இழக்க நேரிட்டிருக்கிறது. இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் துணைப் பொதுச் செயலாளர் அசோகன் கடந்த செப்டம்பர் 2ம் தேதியன்று மாரடைப்பில் விடைபெற்றிருந்தார். அதற்கு இரண்டே தினங்களுக்குமுன் தான் அவரது திருமணம் நடந்திருந்தது. 47 வயது அவருக்கு என்பது நெருங்கிப் பழகிய பலருக்கு வியப்பளித்தது. அத்தனை இளமையும் துள்ளலுமாகச் செயலாற்றியவர். அடுத்தது, தூங்காமல் தூங்கி (சந்தியா பதிப்பகம்) என்ற அற்புதமான நூலை எழுதிய மயக்க இயல் மருத்துவர் மாணிக்கவாசகம். 60 வயதுவரை அறுவை சிகிச்சை மேசைக்கருகில் நோயாளிகளின் புனர்வாழ்விற்கு வரமளிக்கத் தக்க ஆற்றலோடும், அது மறுக்கப்பட்ட வேளைகளில் உறவினர்களுக்கு ஆறுதல் மொழிகளோடும் வளையவந்த அவரே அறுவை சிகிச்சை மேசை மீது படுக்க நேர்ந்த கணத்தில் உரமழிந்து தவித்தவர். புற்றுநோய் அவரை அதிகம் தவிக்கவிடாது நான்கைந்து மாதங்களுக்குள் விடுதலை கொடுத்துவிட்ட நிகழ்வு சென்ற அக்டோபர் 23ல் நடந்தது. இளம்வயதில் செயலூக்கப் போராளியாக தெருவீதியில் மட்டுமின்றி, இணையவீதிகளிலும் முழங்