Skip to main content

Posts

Showing posts from September, 2009

காற்றலை வழியாக வீடு நிறைத்தவர்

கொஞ்சம் உங்கள் பழைய நினைவுகளை அசைபோடுங்களேன். அதாவது ஏகதேசம் தொலைக்காட்சி பெட்டிகள் நமது வீட்டின் அந்தஸ்தினை கூட்டிய காலங்கள். வானொலி என்னும் ஊடகம் விவிதபாரதி, ரூபவாஹிணி என்று மாயம் காட்டிய காலங்கள். குடும்பம் குடும்பமாக அதிகாலை வந்தே மாதரம் என்னும் வானொலியில் விழித்த காலங்கள். "பிரேக்கிங் நியூஸ்", பிளாஷ் நியூஸ்" என்று சொல்லி சொல்லியே எந்த செய்தியும் நம்மை சலனப்படுத்தாமல் மனம் மரக்கட்டையாக்கிய அநியாய செய்தி தொலைக்காட்சி சேனல்கள் இல்லாமல், செய்திகள் வாசிப்பது சிவராமன் என்று ஒரு குரல் செய்தியின் தன்மையை நம்மை உணர செய்திட்ட அந்த நல்ல காலம். எல்லா நாட்களிலும், எல்லா வீடுகளிலும் அநேகமாக காலை 7:25 மணிக்கு சமையலறையில் இருக்கும் அம்மாவிற்கும், பத்திரிகையில் முகம் பார்த்திருக்கும் அப்பாவிற்கும், நேற்றைய வீட்டு பாடத்தை அவசர அவசரமாக செய்யும் குழந்தைகளுக்கும், தாத்தா, பாட்டி என அனைவரின் காதுகளையும், சிந்தையையும் ஒருசேர சேர்த்த வானொலியின் "இன்று ஒரு தகவல்" சொன்ன முகம் தெரியாத அந்த குரல் ஒலித்த காலம். அந்தக் குரல் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுடையது. "அதாவது",

உறங்குவது போலும் சாக்காடு.............................

அஞ்சலி: கு அசோகன் கோவையிலிருந்து தான் அந்த முதல் தகவல் எனக்கு வந்தது. அது ஆகஸ்டு 21ம் தேதி. இன்றைக்குச் சரியாக 12 நாள் முன்பாக. அது வேறு செய்தி. இன்ப அதிர்ச்சியான தகவல் அது. தோழன் அசோகனுக்குத் திருமணம் என்பது. 45 வயதைக் கடந்த நிலையில், எத்தனையோ பேரை ஈர்க்கும் இனிய தோழமை நெஞ்சம் படைத்த அந்த அற்புத மனிதன் குடும்பச் சூழலின்மீது பழி போட்டு பல்லாண்டுகளாக மறுத்து வந்த இல்லற வாழ்விற்கு உடன்பட்டார் என்பதே மகிழ்ச்சியாயிருந்தது. இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளரான அவரது பணியிடமும், வாழிடமும் என்னருகே சென்னை தலைமை அலுவலகத்தில்தான் என்றாலும், அவரது திருமணத் தகவல் அயலூரிலிருந்துதான் வந்தது. மெதுவாக அவரிடம் அணுகி ஏதாவது செய்தி உண்டா என்றால் ஒன்றுமில்லையே என்பதாக இருந்தது பதில். மறுநாள், 22ம் தேதி, பொறுக்க மாட்டாது, "ஏய் ஆகஸ்ட் 30ம் தேதி எனக்கு ஏதும் வேலை வைக்காதே, நான் வேறிடம் போக வேண்டியிருக்கும்..." என்று சொன்னபோது, திடுக்கிட்டவராய், "தோழர் உங்களுக்குத் தகவல் வந்திருச்சாம்........நானே சொல்லணும்னு காத்திருக்கேன். இன்னும் பத்திரிகை கூட அடிக

அரசு ஊழியர்களின் ஒழுங்கு ...

நேற்று அந்த செய்தி பிரதானமாக தொலைக்காட்சிகளில், குறிப்பாகத் தனியார் தொலைக்காட்சிகளில் திரும்ப திரும்ப காண்பிக்கப்பட்டது. இன்று காலை (02.09.09) செய்திதாள்களிலும் (ஆங்கிலம்) முதல் பக்கத்தில் அதே செய்தி. என்ன அது? நமது நாட்டின் உள்துறை அமைச்சர் திரு. பங்குசந்தை சிதம்பரம் அவர்கள் டெல்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் BIO-METRIC வருகை பதிவேட்டினை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் உட்பட இனி ஒருவரும் தப்பிக்க முடியாது. கண்டிப்பாக இனி அவரது துறை அலுவலகத்திலுள்ள அனைவரும் 8 மணி நேரம் வேலை செய்யாமல் வீடு திரும்ப முடியாது. "புரட்சி", சிதம்பர சாகசம்" என்று ஊடகங்கள் புகழாரம் செய்கின்றன. இதை இந்தியா முழுமையும் அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள், வங்கிகள் பயன்படுத்தினால் அந்நியன் திரைப்படத்தில் ஒரு தாத்தா வெளிநாட்டிலுள்ள தன் மகனிடம் பேசுவது போல "உங்க ஊர் என்னடா பெரிய ஊரு, இந்தியாவைப் பாரு, சொர்க்கம்டா" என்கிற நிலை வரும் என்பது போல் ஊடகங்கள் அலறுகின்றன. சரி, மேற்சொன்ன செய்தியை எவ்வாறு பலரும் பார்ப்பார்கள்? வெகுவாரியாக தனியார் துறையில், முறை சாரா துறையில் பணி செய்பவர்கள் இந்த செய்தி உண்மையா