அதிகாரத்திற்கு எதிரான குரல்கள் காலந்தொட்டே அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்து வருகின்றன. அவ்வாறான குரல்கள் ஏதோ ஒரு வகையில் கொடூர ஒடுக்குதலை சந்திக்கின்றன. கொடூரமான உயிர் பலியாகவுமே பல சமயங்களில் இருக்கின்றன. லாபம் என்னும் வார்த்தை கொண்டு மக்களின் இயல்பான அடிப்படை தேர்வுகளான உடை உடுத்துதல், உணவு உள்ளிட்ட பலவற்றை நாகரிகம் என்ற வேறொரு சொல்லில் வீழ்த்தி அவர்களை அதே தேர்வுகளில் இருந்து விடுவிப்பதாக சொல்லி பிறிதொன்றில் அடிமை செய்வது என்பது தொடர்கதையாகிறது. அதோடு மட்டுமல்ல, நிலங்களின ் இயற்கையான வளத்தை பாழாக்கி அந்நிலத்தை தனது லாப வேட்கைக்கு அடிமை செய்வதும் இயல்பாகிறது. எல்லாம் உங்கள் நலத்திற்காகவே, வளமான வாழ்விற்காகவே என தேன் வார்த்தைகள் தூவி மாய அடிமை சங்கிலியை வீசி அவர்களை கவ்வுகிறது, முதலாளித்துவம். இவ்வாறான கதைகளும், அதிகாரத்திற்கு எதிராக மிக சன்னமாகவேனும் குரல்கள் எழுப்பிய மாவீரர்களின் கதை தொகுப்புமே இந்நூல். இன்றைக்கு அந்த நாள், நாளை அந்த நாள் என்பதான நாட்களின் கொண்டாட்டம் பின்னே உள்ள உண்மைகளையும், அந்த நாள், இந்த நாள் என்றில்லாது வருடம் முழுக்கே உலகின் ஏதோ ஒரு பகு...