Skip to main content

Posts

Showing posts from July, 2009

ஆசிரியர் என்கிற ஆளுமை

"ராஜு, என்னப்பா பார்த்து ரொம்ப நாளாச்சு, எங்கே போனே?" "அது ஒண்ணும் இல்லப்பா, நம்ம ஜேம்ஸ் வாத்தியார் இல்லே, அவருக்கு மேலுக்கு முடியாம இருக்காரா, ஒரு எட்டு பார்த்துட்டு வர்ற ஈரோடு போயிருந்தேன்". "ஏன்ப்பா உனக்கு இந்த வேண்டா த வேலை. அந்தாளு உன்னை எத்தனை தடவை அடிபின்னியிருப்பாரு. அவர் சிரிச்சு ஒரு நாளாவது பார்த்திருப்போமா?" "அது ஒண்ணும் இல்ல சங்கர், அவர் என்னை அடிச்சு துவைச்சது என்னவோ உண்மதான். ஆனா, நான் இப்படி இருக்கேனா அதுக்கு அவரும் ஒரு காரணம் தெரியுமா". ===================================== "மச்சி, உனக்கு விஷயம் தெரியுமா?, நம்ம கணக்கு சுந்தரம் வாத்தியாரை நேத்து எவனோ வண்டியிலே இடிச்சுட்டு போயிட்டானாம், நல்ல அடியாம்" "அட பாவமே" "டேய் என்னடா, பாவமேன்னு சொல்றே. அவரெல்லாம் ஒரு வாத்தியார்ன்னு சொல்றதுக்கே அவமானமாயிருக்கு. ஒரு நாளாச்சும் ஒழுங்கா பாடம் நடத்தியிருக்காரா. எப்பப் பாரு வட்டி, பிஸினஸ்ன்னுட்டு. அவருக்கு நல்லா வேணும்டா" மேற்சொன்ன உரையாடல்களை நம்மில் அநேகரும் பேசியிருக்கக் கூடும். பள்ளி/கல்லூரி முடிந்து ஆண்டுகள் உருண்

தொடர்ந்து தோற்கும் என் அம்மாவிற்கு....

அன்பு அம்மாவிற்கு, என்ன நல்லா இருக்கீங்களா? வீட்டில எல்லாரும் சௌக்கியமா? தங்கச்சி வந்துச்சா? கொஞ்ச நாளா உங்ககிட்டேயிருந்து வருகிற தொலைபேசி அழைப்புகளையும், உங்களை நேரில் சந்திப்பதையும் தவிர்த்து விடுகிறேன் என்பது உண்மைதான். என்ன செய்றது? எனக்கு வேற வழியில்ல, அதான். அம்மா, எனக்கு இந்த கடிதத்தைத் தவிர வேறு வழி தெரியலே, என்னோட வேதனையை சொல்றதுக்கு. யார் கிட்ட சொல்ல முடியும்? அம்மா, எனக்கு ஆச்சரியமா இருக்கு. ஒரு தாய் எப்படி தன் மகன் தோல்வி அடையணும் என்று எதிர்பார்க்கிறாள்? நினைக்கவே பயமாயிருக்கு. ஆமாம்மா, எனக்கு தோல்விதான் தொடர்ச்சியாக. என் மனைவி, மக்கள் என்ற ஒரு கட்டத்திற்கு வந்தபின்னும் அவர்கள் சம்பந்தமான முடிவினை எடுக்க முயலும்போதெல்லாம் எனக்கு தோல்விதான் ஏற்படுகிறது. முதலில் மனைவி, இப்போது நீங்கள். அம்மா, நீங்களே எங்கிட்ட அடிக்கடி சொல்லியிருக்கீங்க‌, உங்களுக்கு என்னைத்தான் ரொம்ப பிடிக்கும். நான் நல்லா வருவேன்னு முன்கூட்டியே ஜோசியம் சொன்னவங்க நீங்கதான். அப்படியே நான் இப்ப எல் ஐ சியில ஒரு நல்ல வேலையில இருக்கேன்.