Skip to main content

Nine Rupees an hour - disappearing livelihoods of Tamilnadu - நூல் விமர்சனம்


Nine Rupees An Hour – disappearing livelihoods of Tamil Nadu. இந்நூலின் ஆசிரியர் அபர்ணா கார்த்திகேயன். இவர் பி.சாய்நாத் அவர்களின் மாணவி. இப்போதே ஊகித்திருப்பீர்கள் தானே! ஆமா, இந்த நாட்டின் எளிய மனிதர்களும் அவர்களது வாழ்வும், தொழிலும் அவர்கள் கலையும் தான் பேசுபொருள்.

நூலின் அடிசரடாக இருக்கும் விஷயங்கள் எளிய மனிதர்களின் அயராத உழைப்பும் அந்த உழைப்பை உழைப்பாகவே அங்கீகரிக்காத பாங்கும், அதை appropriateசெய்யாத பொருளாதார பயன்களும் - பரம்பரை பரம்பரையாக பார்த்து வரும் தொழிலை தனக்குப் பின்னே கடத்த விரும்பயும் கடத்த துணியாத வாழ்வு நிச்சயமற்ற சூழல் - தனித்திறன் கொண்ட தொழில்கள், அவைகளால் கிடைக்கும் அங்கீகாரம் ஆனால் வாழ்வு ஏற்றம் பெறாத பொருளாதாரம் என்பவனவே. அதே போல, ஏழை எளியர்களின் நாட்டுப்புறக் கலைகள் எனப்படும் அவர்களின் கலைஞானமும், அக்கலைஞர்களின் அன்றாட வாழ்வும் அக்கலைகளுக்கும் அக்கலைஞர்களுக்குமான சமூக placing என்பனவும் இந்நூலில் பேசுபடு பொருளாக இருக்கிறது.

இந்தியாவெங்கும் போலவே தமிழகத்திலும் விவசாயம் தொடர்து நட்டம் தரும் தொழிலாக மாறி அத்தொழிலின் பங்குதாரர்கள் (விவசாயிகள், விவசாய கூலிகள் இன்ன பிற) தற்கொலை செய்துகொள்வது, பத்தமடை பாய் - காஞ்சிபுரம் சேலை - திருப்பாச்சி அரிவாள் ஆகிய ஒரு காலத்திய மவுசு மிக்க பொருட்களுக்கு காலப்போக்கில் மவுசு குறைய அந்த தொழிலும் அதன் கண் தொழிலாளர்களும் நலிவு காண்பது என்பனவற்றோடு நாட்டுப்புறக் கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், கட்டைக் கூத்து, பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகிய கலைகளின் தேய்வும், அந்த கலைஞர்களின் நலிவடைந்து வரும் வாழ்வும் ஆகியன ஓரளவு நாம் அறிந்த விஷயங்களே. பின் என்ன இருக்கு, இந்நூலில்?



இவ்வளவு ஆழம் என சொன்னா தெரியாது, அளந்து பார்த்தா ஆபத்து புரியும் என சொல்வார்கள். அது போல ஒவ்வொரு தொழிலின் நசிவும், பொருளாதார பின்னடைவுகளும் அத்தொழிலில் ஈடுபட்டவர்களை கண்டு அவர்களை பேட்டி எடுக்கையில் வரும் உண்மைகள் அதிர்ச்சியளிக்கிறது. வழக்கம் போல் எல்லா தொழில்களிலும் கால நேரம் இன்றி பெண்கள் நாளின் பெரும்பகுதி நேரங்கள் உழைப்பிலே செலவிடுகின்றனர். கணவன் அதிகாலை எழுந்து பனையேறி கள் இறக்க அவரோடு எழுந்து பனைவெல்லம் தயாரிக்கும் பெண்களில் ஒருவர் பிரசவம் முடிந்து ஒரு மாதத்திலேயே அந்த கொதிகலன் உட்கார்ந்து நாள்முழுக்க வேலை செய்ததை சொல்லுகையில் நம்முள் ஏறும் அதிர்வு சொல்லி முடியாது.

என்ன செய்ய, எங்களுக்கு வேறு வழி என வாக்கியமே புத்தகம் நெடுக வருகிறது. வழி சொல்ல வேண்டிய அரசும் சமூகமும் வாய் மூடி இருப்பதும் புரிகிறது. உலகமயம் எல்லா எளிய மக்களின் வாழ்வையும் தூக்கி எறிந்திருக்கிறது. நூல் முழுவதும் புலம்பல்கள், துயரங்கள், கண்ணீர் கதைகள் மட்டுமே இல்லை. மாறாக, துறை சேர்ந்த வல்லுநர்களிடத்து இப்பிரச்சனைகளின் தன்மையையும், பிரச்சனைகளுக்கான அசல் காரணிகள், தீர்வுகள் எனவும் விவாதிக்கப்படுகின்றன. அதுவே இந்நூலின் சிறப்பு.

விவசாயிகள்/சிறுகுறு தொழில்கள்-வங்கிகள் ஆதரவு குறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் தோழர் தாமஸ் பிரான்கோ அவர்களின் பேட்டி மிக முக்கியமானது. விவசாய சங்கங்கள் உண்மையில் அவரை தாராளமாக உதவ கோரலாம். விவசாய கடன் அப்படியே தள்ளுபடி செய்ய விவசாயிகள் நினைப்பதில்லை, மாறாக அவர்கள் உண்மையில் திருப்பி கட்டவே விரும்புகிறார்கள், பட்டினியாய் கிடந்தாலும். திடீரென்று எதிர்பாராத நடக்கும் பேரழிவுகளில் மட்டுமே அவர்கள் தள்ளுபடியினை கோருகிறார்கள் என்பதிலிருந்து வங்கிகள் உலகமயத்திற்குப் பின்னான காலங்களில் விவசாயம் மற்றும் சிறுகுறு தொழில்கள் ஆகிய இந்நாட்டின் அடிப்படை தொழில்களுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ள கட்டாயப்படுத்தபட்டன என்பதையும் நன்றாகவே சொல்லுகிறார் தோழர் பிராங்கோ.

இந்நூலின் அடுத்த இரு பிரமாதமான பேட்டிகள், ஒன்று பி.சாய்நாத் அவர்களுடையது மற்றொன்று இசைமேதை டி.எம்.கிருஷ்ணா அவர்களுடையது. பரம்பரை தொழில்களின் பின்னே பரம்பரை அறிவு திறன் என்பன "சாதி" யாக உள்ளதால் அத்திறன்களும் அத்திறன்கள் கொண்டு செய்யப்படும் தொழில்களும் நசிவுறுகின்றன, காலப்போக்கில் காணாமல் போகின்றனவே, இதற்கு என்ன செய்வது எனக் கேட்க, பி. சாய்நாத் முதல் வாக்கியமாக சொல்வது, எது எப்படி இருந்தாலும், சாதி என்பது ஒழிக்கப்பட வேண்டியது என்பதைத்தான். பின்பு வர்க்க வேறுபாடுகளும் சாதி அடுக்குகளும் எவ்வாறு ஒன்றோடு ஓன்று பிண்ணி இணைந்து வேலைசெய்கிறது என்பதையும் விளக்குகிறார். இதோடு ஏழை எளியவர்களின் எளிய தொழிலாக அதிக பொருளாதார பயன் இன்றி இருந்தது எவ்வாறு இன்று elite மக்களுக்கான தொழிலாக மாறி பணம் பண்ணப்பட்டு வருகிறது என்பதையும் சொல்கிறார். அதோடு அத்தொழிலை பாரம்பரிய பாரம்பரியமாக செய்து வந்த போது அவர்கள் மீது சுமத்தப்பட்ட சாதி முத்திரை eliteமக்கள் அதே தொழிலை செய்கையில் காணாமல் போய் உள்ளதையும் அவர் காட்டுகிறார். கூடவே, எல்லா தொழிலும் அவ்வாறு மாறவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்ட தவறவில்லை.

இசை வித்வான் டி.எம்.கிருஷ்ணா தோழரின் பேட்டி சிறப்பாக இருக்கிறது. நாட்டுப்புறக் கலைகளுக்கு கொடுக்கப்படும் கவனமும் பரதம் போன்ற கலைகளுக்கு கொடுக்கப்பட்டும் கவனமும் மிகவும் ஆழமாக பேசப்படுகிறது பேட்டியில். நாட்டுப்புறக் கலைகளுக்கு தமிழகம் உரிய விதத்தில் உதவுகிறது என்பதை ஏற்க இயலாது. வெறும் கலைமாமணி பட்டங்களும்,இசை கல்லூரிகள் மட்டுமே போறாது. உண்மையில் கலை அமைப்புகளை கல்வியில், சமூக கலாச்சார செயல்பாடுகளில், கலைகளை பயிற்றுவித்து பயிற்சி அளிப்பதும் அத்தியாய தேவை. மற்றொரு இடத்தில் தலித் மக்களிடையே சென்று அவர்களின் சமையல், அவர்களின் நடனம், இசை என்பவை மிக சிறப்பு மிக்கவை, இந்த நாட்டின் கலாச்சாரத்திற்கு அடிப்படையானவை என்று எப்போதாவாது நாம் சொல்லியிருக்கிறோமா என தோழர் டி.எம்.கிருஷ்ணா கேள்வி எழுப்புகிறார்.

நூலாசிரியர் பி.சாய்நாத்தின் மாணவி என்பது அவர் பி.சாய்நாத் அவர்களின் pari networkஇல் பணிபுரிந்திருக்கிறார் என புரிந்திட வேண்டும். ஒரு முறை அந்த வலைத்தளத்தை WWW.RURALINDIAONLINE.ORGசென்று பார்த்திட்டால் எளிய மக்கள் வாழ்வு நமக்கு புரியும். பி.சாய்நாத் அவர்களின் Everybody loves a good droughtநூல் மிக முக்கியமானது. அவ்வகையில் Nine rupees an hourநூலும் மிக முக்கியமானதே. எளிய மக்களின் வாழ்வும், பொருளாதாரமும், கலையும் தெரிந்திட சமூகத்தில் நமக்கு வேலை என்ன என்ற கேள்வியும் புரியும். இறுதியாய் நின்ற கேள்வி, ஓரளவு முற்போக்கு விழுமியங்கள், சமூக பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் அடைந்த பகுதி தமிழகம் என்று மார்தட்டும் விஷயத்திற்கு பின்னே மறைந்துள்ள எளிய மனிதரது வாழ்வாதாரங்களே இப்படி இருக்க, நாட்டின் வட மாநிலங்கள் நிலை

நன்றி அபர்ணா கார்த்திகேயன்.






x

Comments

Thank you so much for reading my book Nine rupees an hour, and for the thoughtful and thorough review.
I'm so glad the stories and the telling worked for you, and importantly, the interviews through which I had hoped to give more context and commentary to the issues.
As you rightly conclude, what was - is - very worrying is that, if this is the case in one of the better performing states, how are people even coping elsewhere? We have a lot to answer for, as a society....
Thanks again,
Aparna Karthikeyan.

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற