
கீழ்கண்ட கடிதம், அவர் தமது சகோதரர் குல்தாருக்கு எழுதிய கடைசிக் கடிதம்.
மத்திய சிறை, லாகூர்/ 3 மார்ச்சு 1931.
அன்புள்ள குல்தாருக்கு,
உன்னுடைய கண்களில், இன்று கண்ணீரைக் கண்டதும் நான் பெரிதும் மனத்துயரம் அடைந்தேன். இன்று நீ பேசியதில் வேதனை நிரம்பியிருந்தது. உன் கண்ணீரை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. இளைஞனே! மன உறுதியுடன் படித்து அறிவை வளர்த்துக்கொள். உடல்நலத்திலும் கவனமாக இரு; நான் வேறென்ன சொல்வது?
உலகின் நாட்டமெல்லாம் கூட்டிக்கழித்து
லாப நஷ்டம் பார்ப்பதிலே செல்லுகையில்,
எங்கள் நாட்டமெல்லாம் எட்டிடுதல்
இன்னல்களின் உச்சகட்டம்.
உலகைத் தூற்றோம் நாம், விதியைப் பழியோம் நாம்
மலைபுரண்டிடினும் நிலைகுலையோம் நாம்;
சில கணமே வாழ்ந்திருவேன் உலகீரே!
விடியல் தீபம் நான், அணையவே விழைகின்றேன்
விட்டுச் செல்கிறேன் எண்ணத்தின் மின்னல்கள்
மண்பாண்டமிது மண்ணிலே கலந்திடுமே.
நல்லது, விடைபெறுகிறேன்; நாட்டு மக்களே; மகிழ்ச்சியாக இருங்கள்; நான் என் பயணத்தில் செல்கிறேன்; தைரியமாக இருக்கவும், நமஸ்தே!
உனது சகோதரன்,
பகத் சிங்
ஆதாரம்: எப்போதாவாது எண்ணிப்பாருங்கள்... (தியாகச் செம்மல்களின் கடிதங்கள் ), மொழியாக்கம் : சரோஜ் நாராயணசாமி,
வெளியிடு : பப்ளிகேஷன்ஸ் டிவிஷன், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய அரசு, பாட்டியாலா ஹவுஸ், புது தில்லி - 1. Rs. 55/-
Comments
எவ்வளவு அசாத்தியமான ஆளுமையை இழ்ந்திருக்கிறோம்?