
மீண்டும் அதே சத்தம்
சத்தம் இம்முறை அதிகமாய்
நான் எழுத உட்காரும்போதுதான்
இந்த சத்தம்
ரொம்ப நாளாய் இது தொடர்கிறது
நானும் மீண்டும் மீண்டும் எழுதுகிறேன்
மீண்டும் மீண்டும் எக்காள சத்தம்
களுக்கு, களுக்கு என்ற ஏளன சத்தம்
கொஞ்சம் எழுதி கொஞ்சம் எழுதி
கசக்கி போட்டவற்றையெல்லாம்
தின்னு கொழுத்து, வயிறு புடைத்து
என்னைப் பார்த்தே எக்காள முழக்கம்
செய்கிறது குப்பைத்தொட்டி
இதோ நான் மீண்டும்
அதன் வயிற்றை நிரப்புகிறேன்
எக்காளம் எழுப்பட்டும்
அதன் வயிற்றுக்கு நான்
இரையிடாத அந்நாள்வரை...
Comments
vazhthukkal
s v venugopalan