
குனிந்து சிறுமியிடம் கேட்கிறார், "உன் பேர் என்ன?".
சிறுமி,ஒரு வெறுப்புடன் "ஷமீம் பானு" என்கிறாள்.
குப்தா: "ஏன் பிச்சை எடுக்கிறாய்?, பள்ளிக்கு செல்லலாமே".
சிறுமி, "வேறு வழியில்லை, பசிக்குதே" என்கிறாள். அவளே தொடர்ந்து "நானும் பள்ளிக்கு சென்றிருந்தேனே" என்றாள். சொல்லுகையில் அவள் கண்ணில் தோன்றிய ஒளி என்னவென்று விவரிக்க இயலாததாய் இருந்தது. ஒரு கணம் நற்காலத்தின் நினைவுகள் மின்னியதாக இருக்கலாம்.
"அப்போதெல்லாம், என் வாப்பா என்னை அவரது பளபளவென துடைத்த சைக்கிளில் என்னை முன் வைத்தும், என் அண்ணனை பின்னாடி வைத்தும் பள்ளிக்கு கூட்டி செல்வார். வழியில் எப்படியோ என்னை தேடி வந்து என்னை முத்தமிடும் பட்டாம்பூச்சியை பார்க்கலாம், பள்ளியை நோக்கி ஹோவென கத்தி குதித்து வரும் பிள்ளைகளை பார்க்கலாம்" என்றாள்.
சேகர் குப்தா: "இப்போது என்ன ஆயிற்று?".
சிறுமி, "அதெல்லாம் ஒரு வருடத்திற்கு முன்பு. அன்றைக்கு காலை சாப்பிட்டுவிட்டு தூளியில் இருந்த என் குட்டித் தம்பியோடு நான், வாப்பா, அம்மா, அண்ணன் என அனைவரும் விளையாடிக் கொண்டிருந்தோம். திடீரென்று பெரிய கூச்சல். கதவை தடதடவென யாரோ தட்டினார்கள். வாப்பாதான் கதவை திறந்தார். எதிரே நெற்றியில் பெரிய குங்கும கீற்றோடும் கையில் ஆயுதங்களோடும் பலர். அவர்கள்தான் கூச்சலிட்டிருக்க வேண்டும். "கட்வா" என்று ஒருவன் கத்திக்கொண்டு ஒருவன் கையிலிருந்த சூலாயுதத்தால் என் வாப்பாவை குத்தினான். மற்றொருவன் இரும்பு தடி போன்ற ஒன்றால் என் அம்மாவை மண்டையில் அடித்தான். என் அண்ணனை ஒருவன் அரிவாளால் வெட்டினான். தீடீரென்று என் தம்பி அழத்தொடங்க அவனை தூக்கிக்கொண்டு என் வீட்டு பின் கதவை திறந்துகொண்டு ஓடத் தொடங்கினேன். போன பிறந்தநாளுக்கு வாப்பா வாங்கிக் கொடுத்த என் பாவாடையெல்லாம் கல் தட்டியும், முள் தடுத்தும் கிழிந்து போனபோதும் நான் என் தம்பியோடு பல மணி நேரம் ரொம்ப தூரம் ஓடினேன். எங்கோ விழுந்துவிட்டேன். கண் விழித்து பார்த்தபோது அயோத்தியின் மறு கோடியில் நான் இருந்தேன். சிலர் உதவியோடு என் வீடு இருக்கும் இடத்திற்கு வந்து பார்த்தபோது அங்கே வெறும் புகை மண்டலங்களும், பாத்திரம், பாதணி இவை யாவும் வீதிதோறும் இரைந்து முற்றிலும் மண்மேடாக இருந்தது." அவள் கண்ணில் பெருகிய கண்ணீர் சேகர் குப்தாவின் தொண்டையை அடைத்தது.
சிறுமி கேட்டாள், "(வோ லோக் ஹைசா க்யோன் கியா)ஏன் அவர்கள் அப்படி செய்தார்கள்?".

Comments
you have posted an excellent piece that demands an emotional justice in a land sought to be poalrised on communal lines.
s v venugopalan