அபிக்குட்டி ரொம்ப அழுது கொண்டிருந்தாள் என்று கடலோடு விளையாட கூட்டிச் சென்றேன். அலைகள் வந்து கால் நனைத்து மீண்டும் திரும்பி செல்வது என்பது பயமாக இருந்தாலும் கொண்டாட்டமாகவும் இருந்தது, அவளுக்கு. எவ்வளவு நேரம் தான் அலைகள் வந்து கால் நனைக்கும் விளையாட்டை விளையாடுவது. போரடிக்குமே என்று மற்றொரு அரதப் பழசான விளையாட்டை தொடங்கினேன். விளையாட்டு பழசாக இருந்தாலும், அபிக்குட்டி புதியவள்தானே. அலைகள் தீண்டும் மணல் வெளியில் அவள் பெயர் எழுதினேன். அலைகள் வந்து அழித்துவிட்டு போயிற்று. ஹொய் என்றொரு பூரிப்பு. மீண்டும் எழுதினேன், மீண்டும் அலை வந்து அழித்தது. இம்முறை அபிக்குட்டி ஏக சந்தோஷம். இதையே சில தடவைகள் தொடர்ந்தேன். இம்முறை அலை வந்து அழிக்க அவள் அழுதாள். அழுகைக்கு காரணம் புரியாமல் சரியென்று அலைகள் நனைக்கும் பகுதியிலிருந்து சற்று தள்ளி பெயரெழுதினேன். அலை எப்படி இதை அழிக்குது பார்க்கலாம் என்று அபிக்குட்டியிடம் சொன்னேன். அவளிடம் அழுகையும் நின்றது. அப்பாடா என்று நினைக்கும் முன்னர் ஒரு பெரிய அலை வந்து பெயர் அழித்துவிட்டுப் போயிற்று. அவள் அழத்தொடங்கிவிட்டாள்.
அழாதேடா கண்ணு, தாத்தாவிடம் சொல்லிவிடலாம் என்று அவளை சமாதானம் செய்து மீண்டும் சற்று தள்ளி அவள் பெயர் எழுதினேன்। நாங்கள் வியக்க ஒரு பெரிய அலை வந்து இம்முறையும் அழித்துவிட்டு சென்றது। இம்முறை அபி அழாத போதும் எனக்குள் ஒரு வெறி வந்திருந்தது। சரி, பார்க்கலாம் என்று இன்னும் சற்று தள்ளி மீண்டும் அவள் பெயர் எழுதினேன்। ஒரு அலை, இரண்டு, மூன்று, நான்கு என அலையெதும் அழிக்க வில்லை। எனக்குள் ஒரு சிரிப்பு। "பார்த்தியாடா கண்ணு இப்ப எப்படி" என்றேன்। அபிக்குட்டி இம்முறை மீண்டும் சைரன்। எனக்கு ஒன்றும் புரியவில்லை। அழுதபடியே சொன்னது அபிக்குட்டி, "அலை பாவம், அப்பா நீ cheat பண்றே"

Comments
ரசனை தத்துவம்...
This is Child:-)