அலுவலகம் வந்ததிலிருந்தே ஒரே படபடப்பாய் இருந்தது। செய்வதற்கு வேலைகள் பல இருந்த போதிலும் ஒன்றும் செய்ய மனமில்லாமல் இருந்தது। மேனேஜர் ஏதாவது சொல்லபோகிறார் என்று ஒன்று இரண்டு ஃபைல்களை மேஜை மேல் பிரித்து வைத்து விட்டேன்। அபிக்குட்டி ஞாபகமாகவே இருக்கிறது। அபிக்குட்டி இன்றுதான் பள்ளிக்கு முதல்நாள் சென்றிருக்கிறாள்। பயங்கர வாயாடி। பார்க்கிறதையெல்லாம் அப்படியே அபிநயம் பிடித்து காட்டும் சமர்த்துகுட்டி। பேச பேச வாய் ஓயாது அவளுக்கு। நானும் உம்கொட்டிக் கொண்டே இருக்கணும்। அவங்க அப்பாதான் சொல்லுவார், பேசியே பேசியே என்னமா வளர்ந்துட்டுது இந்தக் குட்டி என்று. அவ கைகளை விரித்து, காக்கா வடை கதை சொல்றதை பார்க்கணுமே, அழகு, அழகு.
இன்றைக்கு ஸ்கூலுக்கு அவர்தான் கொண்டுபோய் விட்டு வந்தார்। "நீ வந்தா அவ ரொம்ப நடிப்பா" என்று என்னை அலுவலகத்திற்கு போக சொல்லிவிட்டார்। அவருக்கு இன்றைக்கு இரவு ஷிப்ட்। எப்படி இருக்கிறதோ குழந்தை?!. பெரிய ஸ்கூல், ரொம்ப கேர் எடுத்துப்பாங்க, ஒன்றும் பயப்பட வேண்டாம், நிம்மதியாக இருக்கலாம், +2 வரைக்கும் கவலையில்லை என்று என்னென்னமோ சமாதானம் எனக்கு சொல்லியாயிற்று. எனக்குதான் கீதா சொன்னது அடிக்கடி நினைவுக்கு வந்து தொலைக்கிறது, "அங்கேயா, ரொம்ப ஸ்டிரிக்ட்டாமே அந்த ஸ்கூல், யாரோ சொல்ல கேள்வி". "கொஞ்சம் ஸ்டிரிக்ட்டா இருப்பது ஒன்னும் தப்பில்ல" இது என் அப்பா.
தலையெல்லாம் வலிப்பது போலிருந்தது. டீ குடிக்கப் போகலாம் என்றால் மேரியும் இன்று வரவில்லை. எப்படியோ கடிகாரம் மணி 12 காட்டியது. நல்லா இருக்கட்டும், அது. இனி மேனேஜரிடம் போகணும். பொன்னியம்மனை வேண்டிக் கொண்டு அவரை அணுகி, "சார், ஒரு அரை நாள் லீவு வேண்டும், உடம்பு முடியல". மேனேஜர், "எப்பவும் இந்த சாக்குதான், போய் வா" என்றதும் எனக்கு நம்பவே முடியவில்லை. "ரொம்ப தாங்க்ஸ் சார்" என்று அந்த மனுசன் மனம் மாறுவதர்குள் வெளியேறினேன். இந்த மாசம் ஏகப்பட்ட செலவு என்று அபி அப்பா புலம்ப ஆரம்பித்தாயிற்று. இருந்தாலும் ஏதோ சொல்லி சமாளிக்கலாம் என்று ஆட்டோவில் வீடு செல்லத் தொடங்கினேன். ஸ்கூல் விட்டிருக்குமா, அவர் போயிருப்பாரா, குழந்தை வெளியில எங்காவது நிக்குமா என்று கண்ணிகளாக கவலைகள் வந்தது.
"அப்பா, அபிக்க்குட்டி வந்துட்டாளா" என்றுதான் படியேறினேன். சன் செய்திகளிலிருந்து தலை திருப்பி, "வர்ற நேரம்தான்" என்றார். குழந்தைக்கு வெந்நீர் இருக்கா என்று என் ரூமுக்கு (சமையலறை) செல்வதற்குள் பைக் சத்தம் கேட்டது. "அப்பா, அபிக்குட்டி வந்தாச்சு". "ஏன்டி அலர்றே" என்ற அவரது சொல் எங்கோ தூரமாய் ஒலிக்க ஓடி சென்று குழந்தையை தூக்கினேன். பாவம், அழுதிருக்கும் போலிருக்கிறது. அபிக்குட்டியும் "அம்மா" என்றவாறு என் தோளில் முகம் புதைத்தது.
"கண்ணம்மா, ஸ்கூல்ல என்ன சொன்னாங்க? மிஸ்". "என்ன, வந்தவுடனேயே? =அவர். "அம்மா, ஸ்கூல்ல மிஸ்ஸு, மிஸ்ஸு பேசாம இருக்கனும், கையைக் கட்டுங்க, வாய் மேல் கை வையிங்க" என்று இடுப்பில் கை வைத்து சொன்னதும் குழந்தையை இழுத்து தோளில் சாய்த்து அணைத்தேன். கண்ணில் நீர் கரகரத்தது. "என்னங்க இது" என்றேன். அவரோ கிண்டலாய், "தமிழிலயா சொன்னாங்க, உங்க மிஸ். இங்கிலிஷ்லதான் எங்க டீச்சர் எல்லாம் பேசுவாங்கன்னு பிரின்ஸிபால் கிழம் சொன்னதே". என் அப்பா, "அபிக்குட்டி pre-kg தானே, LKGக்கு மேலதான் இங்கிலீஷ் இருக்கும், நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க" என்றார். அபிக்குட்டி கேட்டது, "ஏன்ம்மா, அழறே?".

Comments