மனித குல நாகரிக வளர்ச்சியில் நாம் நெடுந்தூரம் பயணித்துவிட்டோம் என்று நினைக்கும் போதெல்லாம் இது நிகழ்ந்துவிடுகிறது. மனித இனத்தின் பண்பாட்டு கலாச்சார வளர்ச்சியில் இது போன்ற நிகழ்வுகள் நம்மை பின்னுக்கு இழுக்கிறது. 30 வருட பெருமைமிகு வளர்ச்சி என்பதை குலைப்பதற்காக மேற்கு வங்கத்தில் மனித வடிவில் விலங்குகளினும் கீழானவர்கள் நடத்தும் வெறியாட்டம் ஜூன் 10ல்தான் தொடங்கியது.
மேற்கு வங்க "லால்கர்" பகுதியில் அம்மாநில முதல்வர் தோழர் புத்ததேவ் மீது கடந்த ஆண்டு மாவோயிஸ்டுகளால் நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதல் தோல்வியில் முடிந்தது. அப்போது அம்மாநிலத்தின் வீரமங்கை மம்தா பானர்ஜி அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை, மார்க்சிஸ்ட் கட்சி பொய் சொல்கிறது என்று ஒரு முழு பரங்கிக்காயை சோற்றுக்குள் மறைக்க முயன்றார். இதுபோன்ற பல உளறல்களுக்கும், விசித்திரமான செய்கைகளுக்கும் அவரது பெயர் பிரசித்தி பெற்றது. இப்போது அந்த பொய் பிகாஷ் என்ற மாவோயிஸ்ட் தலைவனின் விஷ நாக்கில் வழிந்து வெளிறி விட்டது.
சென்ற திங்கட்கிழமை (15।06.09) அன்று இரவு 9 மணி அளவில் ndtv யில் தான் அந்தக் காட்சி முதன் முதலில் காண்பிக்கப்பட்டது. கையில் கூர்மையான அம்புகளோடும், தோளில் துப்பாக்கிகளோடும், மற்றும் பயங்கர ஆயுதங்களோடும் ஆர்ப்பரித்து நின்றிருந்தனர். மற்றொரு காட்சி, சிலர் கையில் கடப்பாரைகளோடும், பெரிய சுத்தியல்கள் கொண்டும் ஒரு கட்டிடத்தை இடிக்கின்ற காட்சி. கேமரா மற்றொரு கோணத்தில் திரும்பி வேறொரு காட்சி காண்பிக்கப்படுகிறது. எரிந்து கொண்டிருக்கின்ற நெருப்பு ஜூவாலைகளூடே dyfi என்கிற பெயர் பொறித்த அடையாள அட்டையும், சுத்தியல் அரிவாள் சின்னத்துடனான கொடியும் எரிந்து கொண்டிருக்கிறது. வாயினுள் இறங்கிய சோற்றுக் கவளம் தொண்டையிலேயே அடைத்து நின்றது. கண்களில் நீர் தாரை தாரையாய் வழி்கிறது.
கேமரா கையில் வைத்துக் கொண்டிருக்கும் அந்த பெண் செய்தியாளர் ஒருவித நடுக்கத்துடன் தொடர்கிறார், " அங்கே பாருங்கள்". காட்சி மாறியது. வெட்ட வெளியில் கட்டிலில் முழுவதுமாய வெள்ளை துணியால் மூடப்பட்டு ஒரு ஓரத்தில் செந்நிற கரைகளோடு ஒரு உடல் கிடக்கிறது. "அவர் ஒரு சிபிஐஎம்மின் தோழர், மூன்று தினங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார், அவர் உடலை அவரது உறவினர்களோ, நண்பர்களோ எடுக்க விடாது மாவோயிஸ்டுகள் செய்துவிட்டபடியால் இதே இடத்திலே இது வரை கிடக்கிறது". கேட்டுக் கொண்டிருந்தவர்கள் முதுகு தண்டு சில்லிட்டிருக்கும். என்ன காட்டுமிராண்டித்தனம் இது?
அங்கே தழலில் எரிந்து கொண்டிருந்த கொடியின் வரலாறு தெரியுமா? அந்தக் கொடிதான் கோடிக்கணக்கான அம்மண்ணின் ஏழைகளுக்கு நிலத்தினை தந்து அவர்கள் வாழ்வில் விடியலை காண்பித்தது. அதற்கான போராட்டங்களில் சிந்திய இரத்தம் தான் செங்கொடிகளாக 30 வருடங்களாக பட்டொளி வீசி பறக்கின்றன. இருண்ட நகரம் என்று பத்திரிகைகள் ஏளனம் செய்ய, மத்திய அரசோ மின்சார திட்டம் தொடங்க நிதி உதவி மறுக்க, ஒரு வேண்டுகோளின் பெயரில் நாடெங்கும் இருந்த இலட்சக்கணக்கான தோழர்கள் அவர்கள் இரத்த தானம் செய்து நிதி பெற்று மேற்கு வங்க மாநிலத்திற்கு மட்டுமல்லாது அண்டை மாநிலங்களுக்கும் மின்சாரம் தரும் வளர்ச்சி கண்டது செங்கொடியின் கீழ்தானே.எந்த வித மத கலவரங்களுக்கும் மேற்கு வங்க மண்ணில் இடம் கொடாது காத்து நின்றிருந்தது அந்த செங்கொடிதானே. சிறுபான்மையோரின் மிகுந்த பாதுகாப்பு இடமாக மேற்கு வங்கம் இந்நாள் வரை இருந்து வருவது செங்கொடியின் சாதனை. வரலாறு எவராலும் மறைக்கப்படுவதில்லை.
நில சீர்திருத்தம் செய்து உணவு பொருட்கள் பலவற்றில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது மேற்கு வங்கம். மத்திய அரசு பின்பற்றிவரும் நாசகர பொருளாதார கொள்கைகளின் விளைவினால் வேலையின்மை அதிகரிக்க, அதை போக்க தொழிற்சாலை துவங்க எண்ணியது மேற்கு வங்கம். வேறு எந்த மாநிலமும் தர எண்ணாத அதிக விலையை நிலத்தின் உரிமையாளர்களுக்கு கொடுத்து அவரகள் நிலத்தில் தொழிற்சாலை அமைக்கும் போதுதான் உளறல் திலகம், ஆட்சி வெறி பிடித்த மம்தா கொள்கையற்ற மகா கூட்டணி (மகஜோட்) அமைத்து, பெரும்பாலான முதலாளித்துவ ஊடகங்களின் துணையோடு பொய்களை பரப்பி அங்கே பிரச்சனையை உண்டு பண்ணினார். கம்யூனிஸ்ட்களை எதிர்ப்பது என்று துவங்கி பின்பு சிபிஐஎம்மை எப்ப்டியாவது எதிர்ப்பது என்றே ஒரே கொள்கைகளோடு திரிணாமூல், காங்கிரஸ், எஸ்யுசி, ஜார்கண்ட் மாநில மாவோயிஸ்ட் என் அனைவரும் ஒரு அணியில் களமிரங்கி அந்தப் பகுதியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களை கொலை வெறியாட்டம் செய்தனர். சிபிஐஎம் கொலை வெறியாட்டம் நடத்துவதாக பொய் பிரச்சாரம் பரப்பினர். ஊடங்கங்களும் வர்க்க பாசத்தோடு அதை ஈறை பேனாக்கி பெருமாளாக்கி பிரச்சாரம் செய்தனர்.
நந்திகிராம் பகுதி முழுவதும் இந்த கூட்டணியினர் பல கொலைகளும், கற்பழிப்புகளும் செய்தும் அம்மக்களிடையே பீதியைப் பரப்பி அந்த பகுதியின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தனர். நந்திகிராம் பகுதிக்கு செல்லும் வழியனைத்தும் அடைத்து ஒரு "liberated" இடமாக அறிவித்தனர். மாநில அரசு சிறிது மாத கால அங்கே அமைதி ஏற்பட முயறிசிகள் அனைத்தும் செய்து தோல்வியுற்ற நிலையில், போலீஸை அனுப்பி அங்கு அமைதி திரும்ப பணித்தது. போலீஸைக் காட்டிலும் அதிநவீன ஆயுதங்களின் துணையோடு மமதா தலைமையிலான கூட்டணியினர் அவர்களை எதிர்த்தனர். நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் சில உயிரிழப்பும் நிகழ்ந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநிலத்திலுள்ள பல அறிவுஜீவிகளும், கலை இலக்கிய ஆளுமைகளும் சிபிஐஎம்மிற்கு எதிராக போராட்டம் செய்தனர். மேதா பட்கர், அருந்ததிராய் தொடங்கிய அந்த மேதாவிகள் கூட்டம் இன்றைக்கு லால்கர் பகுதியில் நடத்தப்படும் கொடுஞ்செயல்களையும், காட்டுமிராண்டித்தனத்தையும் கண்டும் வாளாவிருப்பது ஏன் என்பது புரியவில்லை?
மக்களை தங்கள் கொள்கைகளால வெல்ல முடியாத வெறியாட்டத்தின் மூலம் வென்றிட முயல்கிறது திரிணாமூல், காங்கிரஸ், மாவோயிஸ்ட், எஸ்.யூசி கூட்டணி. எப்படியாவது சட்டம் ஒழுங்கு காரணம் காட்டி ஆட்சியை கலைத்திட முயல்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி இப்படிப்பட்ட வெறியாட்டங்களை அமைதி வழியில் முறித்தே ஆட்சிக்கு வந்தது என்பது மக்களுக்கு தெரியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த தோழர் இ.எம்.எஸ்ஸின் வார்த்தைகள் "நாம் மக்களிடமே செல்வோம், அவர்கள் என்றும் நம் துணை இருப்பார்கள்" என்பதொன்றும் பொய்யுரைகள் இல்லை என்பது வரலாறு நெடுக சொல்லி நிற்கிறது. மாவோ, " நூறு பூக்கள் மலரட்டும், நூறு சிந்தனை மலரட்டும்" என்றார். எனின், சிந்தை என்று ஒன்றே இராத, அரசியலை சித்தாந்தங்களால் வெல்ல முடியாததால் கொலை வெறியாட்டம் நடத்துபவர்களை மாவோக்களின் வழி நடப்பவர்கள் என்பது சரியல்ல. எந்த இசம் ஆனால் என்ன, வெல்வது மனிதமாக இருக்கும், அரசியலில் கருத்து நிலைகள் அமைதி வழியில் இருப்பதே சரியானது என்பது இந்நாட்டின் இறையாண்மைக்கும், அமைதிக்கும், மத நல்லிணக்கத்திற்கும் காவலாய் இருந்து வருகின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றாக தெரியும். மக்களும் அமைதி வழியிலேயே செல்வர் என்பது எதிர் காலம் காட்டும் சத்தியம்.

Comments