Skip to main content

கேரளா எழுப்பிய கேள்விகள்


இப்போதுதான் முதல் தடவையாய் என் குடும்பம், அண்ணனுடையது, அப்பா அம்மா என எல்லாரும் கேரள மாநிலம் குருவாயூருக்கு திருமணம் நிமித்தமாய் சென்றிருந்தோம். திருமணத்திற்கு இரன்டு நாள் முன்பே நாங்கள் அங்கிருந்தோம். திருமணம் சாக்காய் வைத்துக்கொண்டு கடவுளின் சொந்த நிலமான கேரளத்தில் சில பகுதிகளையாவது காணலாம் என்பதே எங்கள் திட்டம்.

திட்டத்தின்படியே முதல் நாள் குருவாயூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான 51 யானைகள் ஒன்றாக வைக்கப்பட்டிருக்கும் புன்னத்தூர் யானைகோட்டம் சென்றோம். அப்பப்பா, அது நிச்சயமாய் பிரம்மாண்டம். முதலாவது, விலங்குகள் இருக்கின்ற இடத்தில் ஒரு வீச்சம் இருக்குமே அங்கு இல்லை. குழந்தைகள் போல் ஒவ்வொரு யானையும் பாகனோடு குளிப்பது, தின்பது என்று அட, அட. காண வேண்டும் இலட்சம் கண்கள், சீதாதேவி தன் காலுக்கு நிகரோ பெண்கள் என்று கர்நாடக கீர்த்தனை ஒன்று உண்டு. இலட்சம் கண்கள் தேவைபடாவிட்டாலும், 51ஆவது நிச்சயம் வேண்டும். உள்ளே பிரவேசிக்கும்போதே ஒரு குட்டி யானை தலையாட்டி ஆட்டி எங்களை வரவேற்றது.

மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பி அம்மாவின் ஆசைக்கிணங்க கொடுங்கல்லூர் பகவதி கோயிலுக்கு சென்றோம். அபி தூங்கிவிட்ட படியால் நான் உள்ளே செல்லவில்லை. மற்ற அனைவரும் சென்று வந்தனர். சட்டை, பனியன், சுடிதார், லுங்கி, பேன்ட் இவற்றுக்கெல்லாம் அனுமதி இல்லை கோவிலுக்குள். அம்மா உள்ளே போய்விட்டு வந்து சொன்னார், "என்ன ஒன்றுமே புரியலை, எனக்கு மட்டும் பிரசாதம் தரவில்லை." சரி விடும்மா பார்த்துக்கலாம் என அனைவரும் சமாதானம் சொன்னோம். அம்மா சமாதானம் ஆகவில்லை என்பது நாங்கள் திரும்பி வரும்வரையில் தெரிந்தது. கோயில் என்றால் நம்முடைய ஊர் போலில்லை. ஓடு வேய்ந்தவையாக மழை தண் ணீர் மேலே தேங்காத வகையில் அமைக்கப்பட்டிருந்தது. எல்லா கோயிலும் அப்படித்தான்.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, வாழைச்சால் நீர் வீழ்ச்சி பற்றியெல்லாம் எழுத எனக்கு தெரியவில்லை। தமிழ்செல்வனோ, மாதவராஜோ அல்லது எஸ்।வி।வியோ எழுதினால் தகும். நமக்கு எது தெரியதோ அதை எழுதுவோம். இரண்டாவது நாள் மாலை திருச்சூரிலுள்ள வடக்குநாதன் கோயில். (அண்ணன் பையன் கோகுல் சொன்னான், உதைக்கும் நாதன் என்று மழலையாய்). இங்கேயும் அனைத்தும் கெடுபிடியும். சட்டை, பேன்ட், லுங்கி, சுடிதார், பனியன் என்பனவற்றுக்குத் தடா. வேறு வழியில்லாமல் இம்முறை நாங்கள் அனைவரும் உள்ளே சென்றோம். இந்தக் கோயிலும் ஒரு பெரிய நிலப்பரப்பினை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. இங்கே நாங்கள் புத்திசாலித்தனமாய் ரூ.15/‍ கொடுத்து ஒரு டிக்கெட் வாங்கினோம். அதை ஒரு இடத்தில் கொடுத்தால் பிரசாதம் தருவார்களாம். நானே என் அரைகுறை மலையாளத்தில் கேட்டு ஒரு வழியாய் பிரசாதம் பெற்றேன். ஒரு வெண்ணெய் உண்ட கண்ணன் போல் ஒருவன் ஒரு இரண்டு இஞ்ச் உயரத்தில் இருந்து பிரசாதம் போட்டான். சரியாய் கேட்ச் பிடித்தேன். இதே கதை மற்றொரு கோயிலிலும் தொடர்ந்தது. மோகன் (என் அண்ணன்) அவன் தான் சொன்னான். "இடதுசாரிகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோதும் இங்குள்ள இந்தக் கலாச்சாரத்தில் என்னவொரு குறுக்கீட்டினை செய்துள்ளனர் என்பது புரியவில்லை. இங்கேதான் நம்மாள் பெரியார் நிற்கிறார். ஒரு ஒற்றை ஆளாக சனாதன போலித்தனங்களுக்கு எதிராக எப்படி நின்றார். எந்தக் கட்சியினர் பேசாவிட்டாலும் இப்போதும் இடதுசாரிகள் பெரியாரை துக்கி கொண்டாடவேண்டும்".

எனக்கும் அப்போதுதான் சில கேள்விகள் தோன்றியது :

கலாச்சாரத்தில் ஒரு குறுக்கீட்டினை செய்யாமல் சமூக முன்னேற்றம் என்பது எப்படி சாத்தியமாகும்? இடதுசாரிகள் கலாச்சார தளத்தில் கேரளத்தில் எப்படி குறுக்கீடு செய்துள்ளனர்? வைக்கம் கோயில் பிரவேசம் இன்னும் தமிழகத்தில் தொடர்கின்றபோது கேரளத்தில் இடதுசாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? குருவாயூரில் சுடிதார் அணிய அனுமதி வேண்டும் என்று ஒரு குரல் எழுப்பப்பட்டபோது இடதுசாரிகளின் வெகுஜன அமைப்புகள் என்ன செய்து கொண்டிருந்தன? அச்சுதானந்தன் தான் அப்போது முதல்வர்। சட்டை, பனியன் உரித்து அவர்களின் சாதியை கண்டறிவது இங்கே தமிழகத்தில் அநேகமாய் ஒழிக்கப்பட்டுவிட்டபோது இடதுசாரிகளின் கேரளத்தில் என்ன ஆயிற்று? தான் தொட்டு தந்தால் தீட்டு ஆகிவிடும் என்று பிரசாதத்தினை தூக்கி போடும் அராஜகத்திற்கு இடதுசாரிகளின் பதில் என்ன?

தமிழகத்தின் கோயில்கள் பெரியாரின் பாதை கண்டுதானே அனைவருக்கும் ஆனது? இடதுசாரிகளாகிய நாம் பெரியாரை இன்னும் தொடர்ந்து தூக்கி பிடிக்க வேண்டியது மறுக்கமுடியாத கடமையாகிறது. பெரியார் பற்றிய வாசிப்பு இன்னும் விரிவாக வேண்டும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சென்ற மாநாடு சரியாகவே பதிவு செய்தது, பெரியாரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்று. அதற்கான வீரியமிக்க போராட்டங்கள் இனி வருங்காலத்தில் நிகழ வேண்டும். பெரியாரின் சிந்தனைகள் அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்படவேண்டும். அவரை முற்றாக வாசித்து ஆக வேண்டும். கேரளத்தின் நாராயண குருவின் பங்குதான் என்ன?

2. புரியப்படாத மற்றொரு கேள்வி. பெருமதிப்புகுரிய தோழர் ஈ.கே நாயனாரின் முன்முயற்சியால் கேரளத்தில் கல்வி அனைவருக்கும் சாத்தியமானது. பெண்களும் வெளியே வந்தனர். எனினும் ஒரு கேள்வி, கல்வியின் பங்கு கலாச்சார புரிதலில் என்னவாக இருக்கிறது? சமச்சீர் கல்வி, கற்றலில் இனிமை கல்வி என்று சொல்கிறோம். கல்வி என்பது என்ன என்பதும், கல்வியின் பயன் சமூகத்தில் என்னவாக இருக்க வேண்டும் என்பது, கற்றலின் வழிமுறைகள் மாற்றம் என்பது பயணிக்கப்படாத அல்லது மிக குறைவான தப்படிகள் எடுத்து வைத்த பாதையாகவே இருக்கிறது. இது குறித்த ஒரு உரையாடலும் இங்கே அவசியமாகிறது.

மௌனத்தின் பிடியில் இருந்து விடுபட்டு நெடுங்குரல் கொடுப்போம். விடியலை வரவேற்க தயாராகுவோம்.

Comments

அன்பு கோபி

அருமையான பதிவு. ஊர் சுற்றிப் பார்க்கப் போன இடத்தில் உஙள் உள்ளம் சமூகத்தையும் சுற்றிப் பார்க்கிறது. கேள்விகள் விவாதிக்கவும் தூண்டுகின்றன. வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

ஆனை மலை - வாசிப்பு அனுபவம்

அடர் காட்டுக்குள், பழங்குடிகளின் வாழ்வோடு உடன் பயணம் செய்ய வாய்ப்பு கொடுத்த உங்கள் நாவலுக்கு மிக்க நன்றி. எல்லாம் மரமே, பறப்பன எல்லாம் காக்கா, குருவியே என மட்டுமே சுட்டியிருந்த எனக்கு காடு என்பதுள்ளான வாழ்வு ஒன்று உண்டு என்பதை நக்கீரன் காடோடியில் உணர்த்தியிருந்தார். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டியதற்கு உங்களுக்கு பெரு நன்றி தோழர். காடு என்பதற்குள்ளும் ஒரு உலகம் இயங்குகிறது, சென்னையின் நதிக்கரையோரம் வாழ்ந்திடும் குடும்பங்கள் / அவ்வளவாக கவனம் பெறாத ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள(வைக்கப்பட்டுள்ள) அந்த கீழ்த்தட்டு மக்கள் வாழிடங்கள் மத்தியிலும் ஒரு உலகம் இயங்குகிறது, அங்கிருக்கும் மனிதர்கள் மட்டுமே அல்ல உயிரினங்களும் முக்கியமே, வேறெங்கும் அவ்வளவாக காணக் கிடைத்திராத மனிதர்கள்-விலங்கினங்கள் இடையேயான பரஸ்பர உறவு, பேச்சுவார்த்தை என்பது இவ்விடங்களில் ஆழமாக, அழகாக இருக்கிறது என சாதாரணர்களுக்கு உரைத்திடவே ஒரு படைப்பு தேவைப்படுகிறது. அவ்வகையில் இப்படைப்பு ‘ஆனைமலை” முக்கியத்துவம் பெறுகிறது என நினைக்கிறேன். இந்நாவலில் கூடுதலாக மனிதர்கள்-விலங்குகள்-மரங்கள்/செடிகள் என முக்கோண ஒரு உறவாடலும், உரையாடலு...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச ப...

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்

 கொரானா ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வாய்ப்பு கிடைத்தும் பல்வேறு காரணங்களால் புத்தக வாசிப்பு என்பது ஒன்றும் அத்தனை ஜுரூராக நடக்கவில்லை. அவ்வப்போது படிக்க வேண்டும் படித்தே ஆக வேண்டும் என எனக்குத் தோன்றியது என சில மட்டுமே படித்தேன். அப்படி ஜனவரி 2020 புத்தக கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்ட ஒரு புத்தகம் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் அவர்களின் நினைவுகளும் நிகழ்வுகளும் புத்தகம். ரிவோல்ட் வெளியீடு. புலம் டிசைன். வெண்மணி படுகொலை அதையொட்டிய நிகழ்வுகள் என்பதாலே புத்தகம் வெகு விரைவாக தடதடத்து செல்கிறது. தொய்வே இல்லை. ஓரிரவு பொழுதில் படித்து முடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது இப்புத்தக வாசிப்பு. பாரதி புத்தகாலயத்தாரின் வெளீயீட்டில் வந்த வெண்மணி : வாய்மொழி வரலாறு, தென்பரை முதல் வெண்மணி வரை முதலான புத்தகங்களின் வரிசையில் ரிவோல்ட் வெளியீட்டின் இப்புத்தகமும் படிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வெண்மணி படுகொலை வரலாற்று கொடும்நிகழ்வில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் என்பதோடு மற்றொன்று கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆகியோரின் பங்களிப்பும் என மும்முனைகள் இருக்கின்றன. இதில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய இயக்கங...