Skip to main content

ஆசிரியர் என்கிற ஆளுமை


"ராஜு, என்னப்பா பார்த்து ரொம்ப நாளாச்சு, எங்கே போனே?"

"அது ஒண்ணும் இல்லப்பா, நம்ம ஜேம்ஸ் வாத்தியார் இல்லே, அவருக்கு மேலுக்கு முடியாம இருக்காரா, ஒரு எட்டு பார்த்துட்டு வர்ற ஈரோடு போயிருந்தேன்".

"ஏன்ப்பா உனக்கு இந்த வேண்டா த வேலை. அந்தாளு உன்னை எத்தனை தடவை அடிபின்னியிருப்பாரு. அவர் சிரிச்சு ஒரு நாளாவது பார்த்திருப்போமா?"

"அது ஒண்ணும் இல்ல சங்கர், அவர் என்னை அடிச்சு துவைச்சது என்னவோ உண்மதான். ஆனா, நான் இப்படி இருக்கேனா அதுக்கு அவரும் ஒரு காரணம் தெரியுமா".

=====================================

"மச்சி, உனக்கு விஷயம் தெரியுமா?, நம்ம கணக்கு சுந்தரம் வாத்தியாரை நேத்து எவனோ வண்டியிலே இடிச்சுட்டு போயிட்டானாம், நல்ல அடியாம்"

"அட பாவமே"

"டேய் என்னடா, பாவமேன்னு சொல்றே. அவரெல்லாம் ஒரு வாத்தியார்ன்னு சொல்றதுக்கே அவமானமாயிருக்கு. ஒரு நாளாச்சும் ஒழுங்கா பாடம் நடத்தியிருக்காரா. எப்பப் பாரு வட்டி, பிஸினஸ்ன்னுட்டு. அவருக்கு நல்லா வேணும்டா"

மேற்சொன்ன உரையாடல்களை நம்மில் அநேகரும் பேசியிருக்கக் கூடும். பள்ளி/கல்லூரி முடிந்து ஆண்டுகள் உருண்டோடி மூப்பு வந்த காலத்தும் நமக்கு நம் ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களில் நம் நினைவுக்கு வருகிறார்கள். சி(ப)லருக்கு அவர்களே வாழ்க்கையோட்டத்தின் திசை வழியில் ஒரு பெருமாற்றத்தினை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். பள்ளி கல்வி படிக்கின்ற காலத்தில் நல்லவர்களாக நமக்கு விளங்கிய ஆசிரியர்கள் நடுத்தர வயதினை எட்டும் சமயத்தில் அவர் அப்படி ஒன்றும் நல்லது செய்யவில்லையோ என்ற எண்ணம் கூட வருகிறது. நம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பொழுதில் பள்ளி வளாகத்தினை விட ஆசிரியர்களே நம் கவனத்தை பெரிதும் ஈர்க்கின்றனர். அந்த ஸ்கூல்ல நல்லா சொல்லி குடுப்பாங்களாம் என்ற விதியே அந்த பள்ளிக்கு மவுசினை கூட்டுகிறது.


ஒரு ஆசிரியர் சிறந்தவர் என்பதற்கு அளவுகோல்தான் என்ன? நிச்சயமாய் சொல்லலாம், அரசாங்கம் கொடுக்கின்ற நல்லாசிரியர் விருதினை பெறுகிறவர்களில் பலரும் அந்த விருதிற்கு தகுதி கொண்டவர்களாக இருப்பதில்லை. கொடுமை தெரியுமா, நல்லாசிரியர் விருதினை பெற அந்த ஆசிரியரே விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அவையே விருதுக்கு பரீசீலிக்கப்படும். பெற்றோர்கள் பல சமயம் மிகுந்த கண்டிப்புடன் செயல்படுபவர்களையும், தனியே டியூஷன் நடத்துபவர்களையும், மிகுதியாக வீட்டுப்பாடம் கொடுப்பவர்களையுமே நல்லாசிரியர்கள் என சொல்வதையும் நாம் காண்கிறோம். கல்வி அதிகாரிகளின் பார்வையில் கூடுதலான தேர்ச்சி விகிதமும், syllabusனை காலத்தோடு முடிப்பதும், அரசியலை வகுப்பில் பேசாமையும், வகுப்பில் மிகுதியான அமைதி நிலவச் செய்தலுமே ஒரு ஆசிரியரின் நல்திறனுக்கு மதிப்பீடுகளாக அமைகின்றன.


"முதல் ஆசிரியன், பகல் கனவு, டோட்டோ சான், ஏன் டீச்சர் என்னை பெயிலாக்கினீங்க, ஒடுக்கப்பட்டோருக்கான கல்விமுறை" போன்ற புத்தகங்கள் தமிழ் சமூகத்தில் ஆசிரியர்களில் எத்தனை பேருக்கு கல்விக்கான புத்தகங்களாக தெரியும்? கிஜுபாய் பகேகே, பாவ்லோ பிரைரே, இவான் இலியீச், யஷ்பால், கிருஷ்ணகுமார், மரியா மாண்ட்டசோரி போன்ற கல்வியாளர்களின் சிந்தனைகள் ஓரளவுக்கேனும் தெரிந்த ஆசிரியர்களும் ரொம்ப குறைவு. பாரதி புத்தகாலயம் இந்திய மாணவர் சங்கத்தோடு சேர்ந்து கல்விக்கான 25 புத்தகங்களை வெளியீட்டு மகத்தான சாதனையை செய்திருப்பது இன்னும் பலருக்கும் தெரியவில்லை. இதில் வருத்ததோடு சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. தமிழ்நாட்டில் இடது சாரி சிந்தனை கொண்ட ஆசிரியர் சங்கங்கள் கூட மாற்றுக் கல்வி, கற்பித்தல், கல்வி குறித்தோ அவர்களில் மாநாடுகளில் கூட விவாதிப்பதில்லை.

இந்த சூழ்நிலையில் ஒரு ஆசிரியர் குறித்த மதிப்பீடுகளை எப்படி செய்வது? ஆசிரியர் குறித்த மதிப்பீடுகளை மாணவர்களே செய்தால் என்ன? அது எப்படி இருக்கும்? ஒரு மாணவனிடம் சென்று நீ உனக்கு வந்த ஆசிரியர்களில் யாரை நல்ல ஆசிரியர் என்று சொல்வாய் என்று கேட்டால் அவன் என்ன சொல்வான்? அவன் நல்ல ஆசிரியருக்கு வைத்திருக்கும் மதிப்பீடுகள்தாம் என்ன? ஒரு மாணவன் ஒரு ஆசிரியரை அவர் முதுகுக்கு பின்னாலும் நல்லவர் என்று சொல்வதை கேட்கும் ஆசிரியர்களின் மனநிலை எப்படி இருக்கும்? மாணவர்களின் மதிப்பீடுகளுக்கும், மாணவிகளின் மதிப்பீடுகளுக்கும் இருக்கும் வித்தியாசங்கள் என்ன? தன்னை நல்ல ஆசிரியர் என்று தன்னிடம் என்றோ படித்த மாணவன் சொல்லக் கேட்கும் ஆசிரியர் சொல்வது என்ன? சுவையாக இருக்கும் அல்லவா.

இது போன்ற ஒரு விஷயத்தை ஈரோடு கலைக் கல்லூரியை சேர்ந்த பேராசியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்டத்தின் கிளை செயலரும், பொருளாதார எழுத்தாளருமான தோழர் ந. மணி செய்திருக்கிறார். நானும் அவரோடு அறிவியல் இயக்க பணிகளில் நானும் இருந்திருக்கிறேன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். திடீரென்று அவர் என்னை போனில் தொடர்பு கொண்டு சொன்ன போது, "சரிங்க தோழர், அதுவும் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம், தொடங்குங்கள் இன்றே" என்று சொன்னேன். "தோழர், வேலையை முடிச்சிட்டேன்" என்று சொன்னபோது ஆவல் அடங்கவில்லை. நேரம் இரவு பத்தரை ஆன‌போதும் அவ்விஷயத்தை குறித்த பல தகவல்களை கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவரது கல்லூரி மாணவர்களில் 50 பேரை தேர்ந்‌தெடுத்து அவர்களிடம் சில கேள்விகளை கொடுத்து பின் அவர்களின் பள்ளிக் காலத்து நல்ல ஆசிரியர்களை தேர்வு செய்யச் சொன்னாராம். அவர்கள் தேர்ந்தெடுத்த ஆசிரியர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் சொன்னாராம். சில ஆசிரியர்கள் வார்த்தைகளற்று மௌனவெளியில் புதைந்தையும், கண்ணீர கோர்த்து நா தழுதழுத்ததையும், ஓவென்று அழுததையும், அப்படியா என வெடித்து சிரித்ததையும் அவர் சொன்னபோது எனக்கு உண்டான ஒரு அனுபவத்தை வார்த்தைகளற்று மகிழ்ந்தேன். மேலும் அவர் வெகு சீக்கிரமே அம்மாணவர்கள், அவர்களின் நல்ல ஆசிரியர்களிடையே ஒரு நாள் சந்திப்பினை ஏற்பாடு செய்வதாக. சொன்னார். அந்த நிகழ்வுக்கு நானும், புதுச்சேரி கல்வியாளர் தோழர் ஜே. கிருஷ்ணமூர்த்தியும் முன்கூட்டியே பதிவு செய்துள்ளோம். அந்த விஷயங்கள் அனைத்தையும் எழுத்தில் விரைவில் வர உள்ளது. ஒரு தொடராக எழுதலாம் என்று நான் சொல்லியுள்ளேன். பிரசுரமாகவும் வேண்டும் எனவும் விழைகிறேன்.

தோழர்களே, இது ஒரு தொடக்கமே. கல்வி குறித்தும், கற்பித்தல் குறித்தும் நாம் பேச வேண்டியது கடலளவு உள்ளது. விரைவில் தமிழ்ச் சமூகத்தில் தொடங்க வேண்டும். அதற்கு தோழர் ந. மணியின் முயற்சி தொடக்கப் புள்ளியாக அமையட்டும். அந்த நிகழ்வில் நீங்களும் பங்கு கொள்ள இதோ அவரது கைபேசி எண்:
9443305040.
(பின் குறிப்பு : ஏற்கெனவே தோழர் எஸ்வி.வி. BANK WORKERS UNITY இதழில் என் ஒரு பதிவினை இடம் பெற செய்து என்னை பயமுறுத்தினார். இப்போது தோழர்கள் காமராஜும், மாதவராஜும் சேர்ந்துள்ளனர். இவர்களது கவனத்தை என் வலைப்பூ ஈர்த்துள்ளது என்ற மகிழ்ச்சியோடு, கூடுதல் கவனத்தோடும், சிந்தனையோடும் பதிவுகள் செய்வேன் . }

Comments

N.Mani said…
ramgopal, society has greatful to you for this initiative efforts

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

ஆனை மலை - வாசிப்பு அனுபவம்

அடர் காட்டுக்குள், பழங்குடிகளின் வாழ்வோடு உடன் பயணம் செய்ய வாய்ப்பு கொடுத்த உங்கள் நாவலுக்கு மிக்க நன்றி. எல்லாம் மரமே, பறப்பன எல்லாம் காக்கா, குருவியே என மட்டுமே சுட்டியிருந்த எனக்கு காடு என்பதுள்ளான வாழ்வு ஒன்று உண்டு என்பதை நக்கீரன் காடோடியில் உணர்த்தியிருந்தார். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டியதற்கு உங்களுக்கு பெரு நன்றி தோழர். காடு என்பதற்குள்ளும் ஒரு உலகம் இயங்குகிறது, சென்னையின் நதிக்கரையோரம் வாழ்ந்திடும் குடும்பங்கள் / அவ்வளவாக கவனம் பெறாத ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள(வைக்கப்பட்டுள்ள) அந்த கீழ்த்தட்டு மக்கள் வாழிடங்கள் மத்தியிலும் ஒரு உலகம் இயங்குகிறது, அங்கிருக்கும் மனிதர்கள் மட்டுமே அல்ல உயிரினங்களும் முக்கியமே, வேறெங்கும் அவ்வளவாக காணக் கிடைத்திராத மனிதர்கள்-விலங்கினங்கள் இடையேயான பரஸ்பர உறவு, பேச்சுவார்த்தை என்பது இவ்விடங்களில் ஆழமாக, அழகாக இருக்கிறது என சாதாரணர்களுக்கு உரைத்திடவே ஒரு படைப்பு தேவைப்படுகிறது. அவ்வகையில் இப்படைப்பு ‘ஆனைமலை” முக்கியத்துவம் பெறுகிறது என நினைக்கிறேன். இந்நாவலில் கூடுதலாக மனிதர்கள்-விலங்குகள்-மரங்கள்/செடிகள் என முக்கோண ஒரு உறவாடலும், உரையாடலு...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச ப...

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்

 கொரானா ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வாய்ப்பு கிடைத்தும் பல்வேறு காரணங்களால் புத்தக வாசிப்பு என்பது ஒன்றும் அத்தனை ஜுரூராக நடக்கவில்லை. அவ்வப்போது படிக்க வேண்டும் படித்தே ஆக வேண்டும் என எனக்குத் தோன்றியது என சில மட்டுமே படித்தேன். அப்படி ஜனவரி 2020 புத்தக கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்ட ஒரு புத்தகம் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் அவர்களின் நினைவுகளும் நிகழ்வுகளும் புத்தகம். ரிவோல்ட் வெளியீடு. புலம் டிசைன். வெண்மணி படுகொலை அதையொட்டிய நிகழ்வுகள் என்பதாலே புத்தகம் வெகு விரைவாக தடதடத்து செல்கிறது. தொய்வே இல்லை. ஓரிரவு பொழுதில் படித்து முடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது இப்புத்தக வாசிப்பு. பாரதி புத்தகாலயத்தாரின் வெளீயீட்டில் வந்த வெண்மணி : வாய்மொழி வரலாறு, தென்பரை முதல் வெண்மணி வரை முதலான புத்தகங்களின் வரிசையில் ரிவோல்ட் வெளியீட்டின் இப்புத்தகமும் படிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வெண்மணி படுகொலை வரலாற்று கொடும்நிகழ்வில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் என்பதோடு மற்றொன்று கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆகியோரின் பங்களிப்பும் என மும்முனைகள் இருக்கின்றன. இதில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய இயக்கங...