
Despite
the state. கடந்த
15-20 நாட்களாக
ஒரே புத்தகத்துடன் சுற்றி
வருகிறேன். உலகமயத்திற்கு
பின்னான இந்தியாவில் எப்படி
மாநிலங்களில் "state”அதாவது
அரசு என்னும் identityஎன்ன
role play செய்கிறது
என்ற ஆய்வும் அதைத் தொடர்ந்து
எழுப்பும் கேள்விகளும்
கருத்துக்களுமே இந்நூல்.
இயக்கங்களில்
இருப்பவர்கள் இப்புத்தகத்தை
படித்தால் நல்லது. ஏனெனில்
நாம் வழக்கமாக உபயோகிக்கும்
rhetoricவசனங்களின்
பின்னே இருக்கும் வெறுமையும்,
நாம் எதிர்பாராத
திசையில் ஒளிந்திருக்கும்
உண்மைகளும், கண்
முன்னே நடந்தாலும் ஒரு மூடு
திரை நம் கண் முன் ஒரு மகத்தான
உண்மைநிலையை மறைப்பதை கண்டுணர
முடியும். மிசோரம்,
ஒரிசா,
பீகார்,
தமிழ்நாடு,
பஞ்சாப்,
குஜராத் என
இந்த மாநிலங்களுக்கு சென்று
அங்கே நடப்பவைகளை கண்டுணர்ந்து
பிரச்சனைகளின் தன்மையை உணர
stakeholdersஎனப்படுவோரை
பேட்டி கண்டும் தான் வாசித்தவற்றில்
இருந்தும் சில உண்மைகளை
கண்டடைவது என அசல் ஆய்வினை
நடத்தியுள்ளார் இப்பத்திரிகையாளர்.
இது தப்பாக
புரிந்து கொள்ள வாய்ப்பிருந்தும்
சொல்கிறேன், மீடியாக்களில்
விவாதத்தை சரிவர நடத்துபவர்கள்
மட்டுமே பெரிய பத்திரிகையாளர்கள்
என ஒரு கருத்து பெரிதாக
எழுந்துள்ள சூழலில்,
ராஜசேகர்
என்னும் பத்திரிகையாளர் ஒரு
பத்திரிகையாளர் எப்படி இருக்க
வேண்டும் என சொல்கிறார்,
அர்த்தமாய்
இருக்கிறார்.
மற்ற
மாநிலங்களை விட்டு தமிழகம்
குறித்து அவர் என்ன சொல்கிறார்?
ஒவ்வொரு
மாநிலத்தையும் குறித்து அவர்
அறிமுகப்படுத்த துவங்கும்
முறை ஒன்றாக இருக்க,
தமிழகத்தில்
அவர் இளவரசன் திவ்யா மூலம்
நுழைகிறார் என்றால் தமிழகத்தின்
பெரிய பிரச்சனை என்ன என்பது
புரிகிறது.
அதே
சமயம் வெற்று கோஷங்கள் பின்னே
சிக்காமல் உண்மை நிலைகளை
கண்டறிகிறார்.
ஆம்,
வெண்மணியின்
காலத்தில் அவ்வளவாக இல்லாத
ஆணவப் படுகொலைகளும்,
பொருளை விட
ஆளையே கொன்றழித்த நிலைமைகளும்
ஏன் இப்போது மாறின என யோசிக்கிறார்.
அதாவது,
நத்தக்
கொல்லையில் ஆட்கள் கொல்லப்படாமல்
குறியாக சான்றிதழ்களும்,
மின்னனு
சாதனங்களும் அடித்து
நொறுக்கப்பட்டத்தை சொல்கிறார்.
ஆம்,
கல்வி மற்றும்
நகர்ப்புறங்களை நோக்கிய
அடித்தட்டு மக்களின் நகர்வு
என எல்லாம் தலித் மக்களின்
பொருளாதார நிலைகளை மாற்றியமைத்திட
கொஞ்சம் முடிந்திட்ட சூழலில்
அவ்வாறான பொருளாதார முன்னேற்ற
நிலைகளை அடையாத இடைத்தட்டு
MBC
மக்கள்
தங்கள் வாழ்வாதாரம் தேங்கிய
அசல் காரணங்களையோ அல்லது
தங்கள் வாழ்வாதாரம் மேம்பட
தாங்கள் செய்ய வேண்டிய,
கேட்க வேண்டிய
விஷயங்களை கேட்காமல் எப்படி
கலாச்சாரம் என்னும் மோசடியை
கையில் எடுக்கின்றனர் என
சொல்கிறார்.
இதற்கு
பாமகவின் ராம்தாஸ் தான் விஷ
விதையை முதன் முதலில் தூவியவர்
என்பதையும்,
தாங்கள்
சமூக நீதி பார்வையில்
பயணிக்கிறோம்,
சாதி
பேதமில்லை என்று சொல்லிய
ஆட்சியில் இருந்திட்ட திராவிட
இயக்கங்கள் எப்படி சாதி
மேலாதிக்கத்தை போஷித்தன
என்பதையும் கவனப்படுத்துகிறார்.
மேம்பாடு
என்பதை அப்படி ஒன்றும் பெரிதாக
தலித் மக்கள் கண்டடையாத
போதும்,
மேம்பட்டுவிட்டதாக
ஒரு பூடகத்தை கட்டி எழுப்பி
சாதிய வன்முறைகள் நிகழ்த்தப்படுவதாக
குறிப்பிடும் வேளையில்,
MBC
என்ற பிரிவின்
கீழ் 108
சாதி
மக்கள் 20%
சதவீத
ஒதுக்கீடு பெறுகிற சமயத்தில்,
SC
என்ற பிரிவின்
கீழ் 16%
சதமான
இடஒதுக்கீட்டின் பலன்களை 2
பிரிவு சாதி
மக்களே பெறுவதை ஒருவர்
அங்கலாய்ப்பதையும் சொல்கிறார்.
ஒரு பக்கம்
தலித் மக்கள் மேம்பட்டு
விட்டதாக ஒரு கற்பித்தத்தில்
வன்முறைகள் விசிறி விடப்பட,
மறுபக்கம்
ரேஷன் கடையில் தலித் ஒருவருக்கு
வெறும் 20
கிலோ
அரிசி மட்டுமே கிடைக்க,
மற்ற சாதியினர்
20
கி
அரிசி,
சர்க்கரை,
பருப்பு
வகைகள்,
எண்ணெய்
பெறுவதை சுட்டிக்காட்டி
எப்படி அரசு நிறுவனங்களாக
இருந்த போதிலும் சாதிய
ஒடுக்குதல் நிகழ்கின்றன
என்பதை படம் பிடித்து
காட்டுகிறார்.
வெற்றி
நடைபோடும் தமிழகமே என ஆளும்
அரசு பீற்றிக் கொண்டு இருப்பது
ஒருபுறம் இருக்க,
என்னவாக
இருந்தாலும் தமிழகம் முன்னேறியே
இருக்கிறது,
திராவிட
அரசியல் சமூக நீதி அரசியல்
எனவும் பேசப்படும் பொழுதில்,
சில அதிர்ச்சிகர
உண்மைகளை இப்புத்தகம்
காட்டுகிறது.
குறிப்பாக
தமிழகத்தின் பெருமைகளாக
பேசப்படும் கல்வி வாய்ப்புகள்,
சுகாதாரம்
ஆகியவைகளின் உண்மை நிலையையும்
இப்புத்தகம் பேசுகிறது.
சமூக நீதி
இலக்குகளின் பயணத்தில்
உண்மையிலேயே அக்கறை
தொடர்ந்திருக்குமானால்
மிகப்பெரிய மாற்றங்களை தமிழகம்
கண்டிருக்கும் என நியாயமான
அங்கலாய்ப்பில் தொடர்கிறார்.
ஒரு பக்கம்
குழந்தைகள் இறப்பு விகிதம்,
தாய்மார்கள்
இறப்பு விகிதம் என்பவை இந்தியாவே
பாராட்டுகிற அளவுக்கு குறைந்து
வரும் வேளையில்,
உலகமய
சூழல் என்பது தமிழகத்தையும்
ஆட்டுவித்து இங்கும் கான்டிராக்ட்
முறையும் ஆள் குறைப்பும் வர
எளிய மக்களின் சுகாதாரம்
பாதிப்பு அடைந்துள்ளதையும்
அதை மோசடியான கணக்குகள் மூலம்
மறைப்பதையும் சொல்கிறார்.
எல்லாவற்றையும்
விட என்னதான் அரசு மருத்துவர்கள்,
ஆஷா நர்சுகள்
என்பவர் மூலமாக சுகாதாரத்தை
முன்னேற்ற முனைந்தாலும்
அடிப்படை விஷயங்களான வேலை
வாய்ப்பு,
வறுமை
ஒழிப்பு என்பவை இல்லாமல்
அடையும் முன்னேற்ற அடைவுகள்
ஒரு கட்டத்தில் stagnate
ஆவது
மட்டுமல்ல,
குறையவும்
தொடங்கும் என சுட்டுகிறார்.
இலவச
லேப்டாப், tab
என
இவை கொடுப்பது populist measures
என இவற்றை
இலவசமாக தருவதாக பீற்றிக்
கொள்ளும் அரசுகள் பொதுக்கல்வியை
உதாசீனப்படுத்தி அடிப்படையே
தகர்க்கிறது என சொல்கிறார்.
ஆண்டுக்காண்டு
பாஸ் விகிதம் கூடுகிறது
என்பதின் பின்னே உள்ள பிம்பத்தை
ஒரே ஒரு வரியில் இவ்வாறு
சொல்கிறார், “75%
சதமான
மாணவர்களை பாஸ் செய்து
வெளியேற்றினால் தான்
கல்லூரிகளுக்கு 200000
மாணவர்கள்
கிடைப்பர்,
தமிழகத்தில்
அநேகம் கல்லூரிகள் தனியாரிடம்
இருக்கின்றன".
இங்கே
எம்ஜிஆரின் வாரிசு நான் தான்
நான் தான் என பெருமை கொள்ள
நடக்கும் போட்டி நடக்க,
காமராஜர்
தொடங்கி வைத்த சமூக நீதி
பார்வையிலான மக்கள் திட்டங்கள்
என்பதை நாசமாக்கிய பணியை
துவக்கி வைத்தவரும்,
எதிர்ப்புகளை
இரும்பு கரம் கொண்டு அடக்க
தொடங்கியவர் புண்ணியவானும்
அவரே என்பதையும் இந்நூல்
சொல்கிறது.
2002-2003
காலத்தில்
விவசாய வருமானம் என்பது 24,864
ரூபாய்களாக
இருந்தது 2012-2013
காலத்தில்
ரூ.83760
என
உயர்ந்திட்ட போதும் இதே கால
இடைவெளியில் விவசாயிகளின்
லாபம் உயரவில்லை என சொல்கிறார்.
அதாவது முதலீடு
3000
என
இருந்த 70
களில்
வருமானம் 4000
என
இருந்தது,
இப்போது
40000
ரூபாய்
என இருப்பது வருமானமாக 43000
தருகிறது
என்பதிலிருந்து புரிகிறது.
விவசாயம்
அரசின் ஆதரவினை இழந்துவிட்ட
பின்னணியில் ஏற்கெனவே தனியாரிடம்
சிக்கி தவித்து விவசாயம்
செய்து வாடும் விவசாயிகளுக்கு
பேரிடியாக, ஆற்றுப்
படுகையில் மணல் அள்ளுதல்
என்பதும் பெருத்த சேதத்தை
விளைவிக்கிறது என்பதையும்
ஆழமாக சொல்கிறார். ஆண்டு
பட்ஜெட்டில் வெறும் 250
கோடி ரூபாய்கள்
மணல் விற்பதின் மூலமாக வருவாய்
என காட்டும் அரசு மறைமுகமாக
20000 கோடி
ரூபாய்கள் இழைப்பை சந்திக்கிறது
என்பதையும் சொல்கிறார்.
அவ்வாறாக
வரும் பணத்தில் தான் தேர்தலை
சந்திக்கின்றன். முதலில்
அரசியல்வாதிகளுக்கு பணம்,
பின் அதிகாரிகளுக்கு,
அதற்குப்
பிறகு அப்பகுதி மக்களுக்கு
அவ்வப்போது பணம் என மணல்
அள்ளும் மாபியாக்கள் எப்படி
மாறியிருக்கின்றன என இந்நூல்
சொகிறது.
சரி,
இவ்வளவு
பிரச்சனைகளுக்கு பின்னும்
மக்கள் ஏன் போராடுவதில்லை,
அமைதி தழுவும்
மாநிலமாக இருப்பது ஏன் என்ற
கேள்விக்கு தமுஎகசவின் மாநில
தலைவர் ஆதவன் தீட்சண்யா
அவர்கள் இந்நூலில் சொல்வது,
“தன்னைப்
நேரிடையாக பாதிக்காத
விஷயங்களுக்காக தான் ஏன்
செலவழிக்க வேண்டும்,
அக்காசு
இருந்தால் தனக்கு எப்படி
பயன்படும் என தன்னை சுருக்கிப்
பார்க்க இந்த பொருளாதார சமூக
சூழல் இருக்கிறது. ஒரு
காலத்தில் 1000 பேரிடம்
100ரூ
வாங்கி கலைவிழா நடத்துவோம்,
அது 10
பேரிடம் 1000
வாங்கி என
சுருங்கி இப்போது ஒரு ஸ்பான்ஸரை
எதிர்பார்க்கும் நிலையில்
உள்ளோம். ஒன்னுக்கும்
பயன்படாத மண் என சொல்லிய ஓசூர்
நகரை தொழிலாளிகள் உழைப்பாளிகள்
மாற்றிக் காண்பித்தனர்,
இப்போதோ அரசு
அவர்களை உதறி தள்ளுகிறது,
உதாசீனப்படுத்துகிறது,
அவமதிக்கிறது".
140
எழுத்துருக்கள்
இருக்கிற ஒரு டிவிட்டர் மெசேஜை
கூட குறைத்து செய்தியை சொல்ல
வேண்டும் என்பதான காலத்தில்
ஒரு புத்தகத்தில் இவ்வளவிற்கு
மேல் சொல்லுதல் சரியல்ல என
அவசர அவசரமாக முடிக்கிறேன்.
இப்புத்தகத்தில்
afterwordஎழுதியுள்ள
தோழர் வ. கீதா,
திராவிட
அரசியலின் குறியீடு வெற்று
கோஷங்களும், நடைமுறை
இடைவெளிகளும் தான் என்றும்
ஒரு ஆழமான திட்ட வகுத்தலும்
அதனைத் தொடர்ந்த செயலாக்கமும்
என்பதற்கு பதிலாக இங்கே
welfarismஎன்பதே
இருக்கிறது என்பதோடு குடிகள்
தங்கள் உரிமைகளை கோருபவராக
கருதாமல் அரசின் கடைக்கண்
பார்வையை நாடி நிற்பவர்களாக
மாற்றிவிட்டது என சொல்கிறார்.
அதாவது,
CITIZENS CAME TO BE VIEWED AS RECEPIENTS OF GOOD WILL RATHER THAN
BEARER OF RIGHTS, AS PERMANENTLY NEEDY YET DESERVING ONLY THE BARE
MINIMUM என சொல்கிறார்.
இறுதியாக
ஒரு mainstream பத்திரிகை
மீடியாக்கள் எதிலும்
mrajasekharஎழுதியுள்ள
கட்டுரைகள் பதிவாகவில்லை.
அது சமூக
வலைத்தளத்தில் உள்ள scroll.in
இல் பதிவான
கட்டுரைகளே என்பதில் சமூக
நிலையும் நன்றாக பிரதிபலிக்கிறது.
மக்களே,
குஜராத்
குறித்து அவரது எழுத்துக்களும்
படிக்கப்பட வேண்டும்.
சோசலிச முகாமின்
தகர்விற்கு பின்னே உலகமயம்
மக்களை எப்படி சூறையாடி
இருக்கிறது என்பதையும்,
சமூக ஜனநாயக
குறியீடுகளை நசுக்கியுள்ளது
என்பதையும், இறுதியாக
மக்களை மதம் சாதி என்பதாக
பிரித்தாளுவதிலேயே அரசு இந்த
உலகமய சூழலில் தங்கள் பிடியை
தக்க வைப்பதை இப்புத்தகம்
ஆழமாக சொல்கிறது.
அவசியம்
படிக்க வேண்டும், விவாதிக்க
வேண்டும். அதோடு
உருவாக்கி வைத்துள்ள கற்பிதங்களை
உடைத்து உண்மைகளை கண்டறிந்து
மக்களின் வாழ்வில் ஒளியேற்ற
வேண்டும் என்பதான இலக்கை
வைத்திருப்போர் அந்த குறைந்த
சதத்தினர் மட்டுமாவது அவசியம்
படித்திட வேண்டும்.
Comments