Skip to main content

புதுவையில் பாரதி புத்தகாலயம் – மாற்றுக் கல்விக்கான முதல் வாசிப்பு முகாம்

புதுவையில் பாரதி புத்தகாலயம் – மாற்றுக் கல்விக்கான முதல் வாசிப்பு முகாம்

23.08.2014.
அன்று ஆகஸ்ட் 23 சனிக்கிழமை. புதுவையில் முதல்முறையாக பாரதி புத்தகாலயம், புதுவை அறிவியல் இயக்கம் மற்றும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைந்து நடத்தும் ஆசிரியர்களுக்கான் வாசிப்பு முகாம் NKC அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி, குருசுக்குப்பத்தில் நடைபெற்றது. மதியம் 0300 மணி என்று சொல்லியிருந்தோம். உருவையாறு பள்ளி ஆசிரியர் சதீஷ், பாரதி புத்தகாலய ராம்கோபால், புதுவை அறிவியல் இயக்கத்தின் விஜயமூர்த்தி, முருகவேல், ஆசிரியர் விசாகன் என எல்லாரும் காத்திருந்தோம். நேரங்கள் கழிய கழிய ஒன்று, இரண்டு என ஆசிரியர்கள் வருகையில் நம்பிக்கையற்று நின்றிருந்த எங்களுக்கு முகாம் ஆரம்பிக்கையில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வந்தது நம்பிக்கையும் மகிழ்வினையும் தந்தது.

ஆசிரியர் சதீஷ் தொடங்க, வரிசையாய் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களை தாங்களே அறிமுகப்படுத்தினார்கள். விரைவில் சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவரும், பேராசிரியருமான நா. மணி அவர்கள் எழுதிய “பள்ளிக்கூட தேர்தல்நூல் வாசிக்க குழுக்கள் தலைப்பட்டன. அந்தி வானம் மஞ்சள் போர்வை போர்த்த, ஆசிரியர்கள் குழு குழுவாய் படித்த காட்சி இன்னும் மறக்காமல் நிற்கிறது நெஞ்சில். எவரும் படிக்காமல் இல்லை. எல்லாரும் படிக்கின்றனர்.


                சுமார் ஒரு மணி நேரம் கழிய அனைத்து குழுக்களும் ஒன்றாய் அமர்த்தி குழு அனுபவங்கள் துவங்கியது. ஒன்றும் தப்பாமல் அனைத்து குழுக்களும் இந்த புத்தகம் தங்களுக்கு புதியதொரு படிப்பினை தந்தது என தெரிவித்தது. வானூரைச் சேர்ந்த ஆசிரியர் இளங்கோ, தான் விரும்பி வாங்கிய பணியிட மாற்றலை எப்படி அவரது பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து ஊர்மக்களோடு மாற்றல் வேண்டாம் என சொல்லுங்கள், நீங்கள் எங்களுக்கு வேண்டும் என கோரிக்கை வைத்து மாற்றல் உத்தரவை மறுக்க செய்த நிகழ்வினை சொல்லித் துவங்கியது முகாமின் வெற்றிக்கான கட்டியம் கூறுதலாக அமைந்தது. நிச்சயமாய் ஆசிரியர் தினத்தன்று தனது சக ஆசிரியர்களுக்கும் “பள்ளிக்கூட தேர்தல் புத்தகத்தினை பரிசாக கொடுப்பேன் என்றும், தனது செயல்பாட்டால் சக ஆசிரியர்களும் ஏதோ ஒரு விதத்தில் பள்ளிக்கூடத்தில் கூடுதல் ஈடுபாட்டுடன் செயல்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

        அடுத்ததாக வந்த ஆசிரியர் ஒப்லிபன், தன்னிடம் பயின்ற மாணவி ஒருவர் பள்ளியை விட்டு செல்ல நிலை வந்தபோதும் செல்ல விரும்பாததை தெரிவித்து, ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களின் மனதில் இடம் பிடிப்பதை கடமையாக கொள்ள வேண்டும் என்றும் கூறினார். நல்லாசிரியரும், நாடக நடிகருமான ஆசிரியர் இராமலிங்கம் அவர்கள் அடுத்த குழுவின் சார்பாக வந்து பணி செய்யும் அந்த குழந்தைகளின் சமூகத்தோடு ஓர் ஆசிரியர் இணக்கமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். கண்டமங்கலம் ஆசிரியர் சேகர் முதலில் தான் மாணவர்களை அடித்ததாகவும், அறிவியல் இயக்கத்தாரின் தொடர்பால் தான் தற்போது அடிப்பதில்லை என்றும், வாசிப்பு என்னும் பழக்கம் கட்டாயம் ஓர் ஆசிரியருக்கு இருந்தே ஆக வேண்டும் என்றும் சொன்னார்.



உருவையாறு பள்ளி ஆசிரியை ஹெலன் ராணி அவர்கள் தான் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை தருவதாகவும், விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறினார். மாணவிகள் பள்ளி இடைநிற்றலை தடுக்க தான் எப்போதும் அவர்களது வீடு வரை சென்று முயல்வதாகவும், அவ்வாறே தனத் பள்ளி மாணவிக்கு நடைபெற இருந்த அநீதியான குழந்தை திருமணத்தை தான் முன்முயற்சி எடுத்து தடுத்ததாகவும் சொன்ன போது அரங்கம் கைதட்டலில், பெருமிதத்தில் நிரம்பியது.

விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க பொறுப்பாளர் தலைமை ஆசிரியர் சண்முகசாமி குழு அனுபவங்களின் தொகுப்புரையில் எல்லா ஆசிரியர்களும் நல்லாசிரியரே, இந்திய கல்வி முறையில் மாற்றம் தேவை; ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வியாக கல்வி முறை மாற வேண்டும்; சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டியதும், அரசியல் கல்வியும், சமூக பாதுகாப்பு கல்வியும் அவசியம் என உறுதியாக தெரிவித்தார்.


28 பேர் கலந்து கொண்டு 3 மணி தொடங்கி 630 மணி வரை நடந்தாலும் எவரும் கலையாத வாசிப்பு முகாம் இத்தகைய நல்லதோர் ஆசிரியர்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி தங்களை தாங்களே மெருகேற்றுவதிலும், ஆசிரியர்களை வாசிக்க வைப்பதிலும் இம்முகாம் வெற்றியே. ஆசிரியர்களை அழைத்து வந்த இளைஞரான சதீஷும்,  முகாம் தொடங்க ஆலோசனையும், நல்லதோர் அறிவியல் இயக்க பாடலோடு முகாமை துவங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர் இராச.செயராமன் அவர்களும் வெகு ஆர்வத்துடன் வாசிப்பு முகாமினை நடத்தியதும் முகாம் சிறக்க உதவியது. ஆசிரியர் .. மேலும் இத்தகைய ஆசிரியர்களை எதிர்நோக்கி அடுத்த முகாம் காத்திருக்கிறது. 

அருமையான படங்கள் தந்து உதவியர் தோழர் சண்முகசாமி.

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

ஆனை மலை - வாசிப்பு அனுபவம்

அடர் காட்டுக்குள், பழங்குடிகளின் வாழ்வோடு உடன் பயணம் செய்ய வாய்ப்பு கொடுத்த உங்கள் நாவலுக்கு மிக்க நன்றி. எல்லாம் மரமே, பறப்பன எல்லாம் காக்கா, குருவியே என மட்டுமே சுட்டியிருந்த எனக்கு காடு என்பதுள்ளான வாழ்வு ஒன்று உண்டு என்பதை நக்கீரன் காடோடியில் உணர்த்தியிருந்தார். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டியதற்கு உங்களுக்கு பெரு நன்றி தோழர். காடு என்பதற்குள்ளும் ஒரு உலகம் இயங்குகிறது, சென்னையின் நதிக்கரையோரம் வாழ்ந்திடும் குடும்பங்கள் / அவ்வளவாக கவனம் பெறாத ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள(வைக்கப்பட்டுள்ள) அந்த கீழ்த்தட்டு மக்கள் வாழிடங்கள் மத்தியிலும் ஒரு உலகம் இயங்குகிறது, அங்கிருக்கும் மனிதர்கள் மட்டுமே அல்ல உயிரினங்களும் முக்கியமே, வேறெங்கும் அவ்வளவாக காணக் கிடைத்திராத மனிதர்கள்-விலங்கினங்கள் இடையேயான பரஸ்பர உறவு, பேச்சுவார்த்தை என்பது இவ்விடங்களில் ஆழமாக, அழகாக இருக்கிறது என சாதாரணர்களுக்கு உரைத்திடவே ஒரு படைப்பு தேவைப்படுகிறது. அவ்வகையில் இப்படைப்பு ‘ஆனைமலை” முக்கியத்துவம் பெறுகிறது என நினைக்கிறேன். இந்நாவலில் கூடுதலாக மனிதர்கள்-விலங்குகள்-மரங்கள்/செடிகள் என முக்கோண ஒரு உறவாடலும், உரையாடலு...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச ப...

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்

 கொரானா ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வாய்ப்பு கிடைத்தும் பல்வேறு காரணங்களால் புத்தக வாசிப்பு என்பது ஒன்றும் அத்தனை ஜுரூராக நடக்கவில்லை. அவ்வப்போது படிக்க வேண்டும் படித்தே ஆக வேண்டும் என எனக்குத் தோன்றியது என சில மட்டுமே படித்தேன். அப்படி ஜனவரி 2020 புத்தக கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்ட ஒரு புத்தகம் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் அவர்களின் நினைவுகளும் நிகழ்வுகளும் புத்தகம். ரிவோல்ட் வெளியீடு. புலம் டிசைன். வெண்மணி படுகொலை அதையொட்டிய நிகழ்வுகள் என்பதாலே புத்தகம் வெகு விரைவாக தடதடத்து செல்கிறது. தொய்வே இல்லை. ஓரிரவு பொழுதில் படித்து முடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது இப்புத்தக வாசிப்பு. பாரதி புத்தகாலயத்தாரின் வெளீயீட்டில் வந்த வெண்மணி : வாய்மொழி வரலாறு, தென்பரை முதல் வெண்மணி வரை முதலான புத்தகங்களின் வரிசையில் ரிவோல்ட் வெளியீட்டின் இப்புத்தகமும் படிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வெண்மணி படுகொலை வரலாற்று கொடும்நிகழ்வில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் என்பதோடு மற்றொன்று கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆகியோரின் பங்களிப்பும் என மும்முனைகள் இருக்கின்றன. இதில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய இயக்கங...