
மாற்றுக் கல்விக்கான அடுத்த புத்தக வாசிப்பு முகாம்
(ஜனவரி 8,9)
”அடடா, நான் விட்டுவிட்டேனே, என்னை கொஞ்சம் “அலர்ட்” பண்ணியிருக்கக் கூடாதா, மிஸ் பண்ணிட்டேனே”, “தோழர், இப்படியிருக்கும் என்று சொல்லியிருக்கக் கூடாதா, நான் கூட வந்திருப்பேனே”, “புதிய ஆசிரியன் அக்டோபர், நவம்பர் மாத இதழ் படித்தேன், ஐயா, அடுத்த முகாம் எப்போது?” “அடுத்த முகாமிற்கு என் பெயரை இப்பொழுதே எழுதிவிடுங்க” என்று கடந்த செப்டம்பர் 4,5 தேதிகளில் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் ஈரோடு அறிவியல் இயக்கம் நடத்திய முதல் புத்தக வாசிப்பு முகாமிற்கு வர இயலாத பலருடைய ஆதங்கத்தினையும், ஏக்கத்தினையும் போக்கும் வகையில் அடுத்த வாசிப்பு முகாம் இதோ வருகின்ற புதிய வருடத்தில் (2011) ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் ஈரோடு நகரிலேயே நடைபெற உள்ளது. சென்ற முகாம் குறித்த பதிவுகள் www.puthiyaaasiriyan.com என்கிற வலைத்தளத்திலும் காணலாம். புதிய ஆசிரியன் இதழின் அக்டோபர், நவம்பர் மாதங்களில் காணலாம்.
http://www.puthiyaaasiriyan.com/index.php?year=2010&month=10&pageid=6
http://www.puthiyaaasiriyan.com/index.php?year=2010&month=11&pageid=6
இம்முறை வாசிப்பிற்கு 6 புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அவை :
1. கல்வி சிந்தனைகள் – காந்தி
2. கல்வி சிந்தனைகள் – அம்பேத்கர்
3. கல்வி சிந்தனைகள் – பாரதியார்
4. கல்வி சிந்தனைகள் – தாகூர்
5. கல்வி சிந்தனைகள் – விவேகானந்தர்
6. கல்வி சிந்தனைகள் – பெரியார்
பங்கேற்பாளர்கள் இதில் ஏதேனும் ஒரு புத்தகத்தினை அவர்களே தேர்ந்தெடுத்து வாசித்து விவாதிக்கலாம். ரூ. 375/- மதிப்பிலான இந்த 6 புத்தகங்கள் ரூ. 300க்கே கிடைக்கும். இந்த தொகைக்குள்ளாகவே உணவும், இருப்பிட வசதியும் அடங்கி விடுகிறது. புத்தகங்கள் உங்கள் வீடு வர நீங்கள் பணம் அனுப்ப வேண்டிய முகவரி : ந. மணி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு, 59/1, கே.கே. நகர், சென்னிமலை ஈரோடு, ஈரோடு – 638009. மேலும், இம்முறை 3 ஆய்வுக் கட்டுரைகள் இம்முகாமில் விவாதத்திற்கு வைக்கப்படுகின்றன. அவை
1. காந்தி, தாகூர், லாலா லஜபதி ராய் கல்வி சிந்தனைகள் ஒப்பீடு மற்றும் மதிப்பீடு
– எழுத்தாளர் கமலாலயன்
2. பெரியார், அம்பேத்கர் கல்வி சிந்தனைகள் ஒப்பீடு மற்றும் மதிப்பீடு
– முன்னாள் இந்திய மாணவர் சங்க செயலாளர், செல்வா.ஜி
3. பாரதி, விவேகானந்தர் கல்வி சிந்தனைகள் ஒப்பீடு மற்றும் மதிப்பீடு
– பொதுப்பள்ளிக்கான கல்வி மேடையின் பொறுப்பாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு
முதலில் பதிவு செய்யும் 40 பேருக்கு மட்டுமே வாய்ப்பு முகாமில் பங்கேற்க நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 94433 05040. 9444746260.
Comments
aavaludan kaaththirukkum naan pondicherry.jayaraman.