நண்பர்களே, இதெல்லாம் இந்தியாவில் நடக்குமா? சாத்தியம் தானா? ஒரேஒரு புத்தகம், அதை வைத்து கொண்டு இரண்டு நாள் விவாத அரங்கம். அந்த அரங்கத்திற்கு நாமே காசு அனுப்பி கலந்து கொள்ள வேண்டும். வெறும் 30 பேர் மட்டுமே அனுமதி.
முதல் முயற்சியாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு கிளை இந்த அரிய நிகழ்வை சாத்தியமாக்கவிருக்கிறது. பாவ்லோ பிரயரே என்கிற பிரேசில் நாட்டு கல்வியாளர் எழுதிய "ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை" (Pedagogy of the oppressed) என்கிற மகத்தான புத்தகத்தின் (பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு) மீதான விவாத அரங்கு பவானி சாகர் அணை அருகில் வருகிற செப்டம்பர் மாதம் 4 5 தேதிகளில் நடக்க விருக்கிறது. இந்த நாட்டில் புரட்சி என்கிற வார்த்தை போன்றே கல்வியாளர் என்கிற பதமும் மிகவும் கொச்சைப்படுத்தப்படுகிறது. கல்வி நிறுவனம்(?) வைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் கல்வியாளர்கள் என்கிற மிக மோசமான அர்த்தம் இங்கே நிலவுகிறது.
கல்வியாளர் என்றால் என்ன? மாற்றுக் கல்வி என்றால் என்ன? வாருங்களேன் அற்புதமானதொரு சுகானுபவத்தில் நாமும் கலப்போம். ..

வாசிப்பு முகாம் அழைப்பு
ஒடுக்கப்பட்டோரின் மாற்றுக் கல்விக்கான தந்தை என்று அழைக்கப்படுகிற பாவ்லோ ப்ரையிரேயின் மாஸ்டர் பீஸ் “ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை”. 1968ல் இந்நூல் வெளிவந்தது. பல மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு, உலகையே ஒரு உலுக்கு உலுக்கியது. ஆனால் இதன் சாரம் தமிழில் வெளிவரவே கால் நூற்றாண்டாகிவிட்டது (நிறப்பிரிகை 1992). ஆங்காங்கே கருத்தரங்குகளிலும் ஆய்வுக் கட்டுரைகளிலும் மட்டும் குறிப்பிடப்பட்ட இந்நூல் முழுமையாக மொழியாக்கம் செய்யப்பட சரியாக 400 ஆண்டுகள் (2008) உருண்டோடிவிட்டன. இப்பொழுதேனும் நம் அனைவருக்கும் பாவ்லோ ப்ரையிரே அறிமுகமாக வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை நூல் விவாதிக்கப்பட வேண்டும் அதன் சாரத்தை உள்வாங்க வேண்டும். இதற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்க ஈரோடு மாவட்டக் கிளை இந்நூலின் மீதான இரண்டு நாள் வாசிப்பு முகாமை நடத்திட உள்ளது. ஆசிரியர் தினத்தையொட்டியும் பாவ்லோ ப்ரையிரேயின் பிறந்த நாளைத் தழுவியும்(செப். 19) இம்முகாம் நடைபெறுகிறது.
செப்டம்பர் 4,5 (சனி ஞாயிறு),
பவானி சாகர் அணை, பதிவுக் கட்டணம் : ரூ. 250/- DD or M.O. DD : (Tamil Nadu Science Forum payable at Erode)
பவானி சாகர் அணை, பதிவுக் கட்டணம் : ரூ. 250/- DD or M.O. DD : (Tamil Nadu Science Forum payable at Erode)
முதலில் பதிவு செய்யும் 30 பேர் மட்டுமே வாசிப்பு முகாமில் பங்கேற்க முடியும். பதிவு செய்வோருக்கு இந்நூல் (இலவசமாக) உடனடியாக அனுப்பி வைக்கப்படும். விவாதத்தில் பங்கு பெற்று தொகுப்புரை வழங்குவோர் : ஜே. கிருஷ்ணமூர்த்தி, இரா. நடராசன்.
பதிவுத் தொடர்பு : பேரா. நா. மணி,
50/1, கே.கே. நகர்,
சென்னிமலை ரோடு,
ஈரோடு – 638009. அலைபேசி : 9443305040
(அ) பாரதி புத்தகாலயம் சென்னை – 18.
* கல்வித்தளத்த்ல் இயங்கி வருபவர்கள், இயங்க விழைபவர், ஆசிரியர்களுக்குமுன்னுரிமை வழங்கப்படும்.
Comments