Skip to main content

Posts

மந்திரக்குடை - சிறார் நாவல்

  சிறார் நாவல் அல்லது குழந்தைகளுக்கானது என்று வெளியாகும் பலதையும் படித்திடும் பழக்கம் எனக்கு உண்டு. அதில் இரண்டு பலனுண்டு. ஒன்று, என் குழந்தைகளுக்கு புதிதாக கதை கிடைப்பது. மற்றொன்று 44 வயதை கடந்த பின்னும் இன்னும் இனித்திடும் அந்த fantasy part.   ஆக, என்னுடைய அடுத்த வாசிப்பாக இருந்தது   ஞா. கலையரசி அவர்களின் மந்திரக்குடை. குடையை வைத்து என்ன மந்திரம் செய்துவிட முடியும், குடையை பிடித்து கொண்டு பறக்கலாம் என்பதே முதலில் வரும் கற்பனை. சரி, பறக்கிறார்கள் அல்லது பறக்கிறாள்(ன்) .. அப்புறம்? பறந்து எங்கே செல்கிறார்கள்? என்ன ஆனது? ஒருவர் மட்டுமே பறந்தனரா அல்லது பழங்கதை ஒன்றில் வருவது போல இந்திரனின் ஆனையை தொடர் சங்கிலியாக பிடித்து பின் கீழே விழுந்த கதை போலவா? பறப்பதல்லாமல் குடை மழையிலிருந்து வெயிலிலிருந்து காத்திட்ட போதும் வேறு ஏதும் பொத்துகிட்டு வர வழிவகை செய்கிறதா? கடலில் படகாக மாறி ஒரு புதிஅய் உலகை காட்டியதா குடை? …………. படித்துப் பாருங்கள். விலை குறைவுதானே! சுவாரசியமாகத்தான் இருக்கிறது. நிச்சயமாய் புக்ஸ் பார் சில்ரனின் படைப்பில் வரவேற்க்கத்க்க ஒன்று என எனக்குத் தோன்றுகிறது. ...

THE MURDERER, THE MONARCH AND THE FAKIR - நூல் அறிமுகம்

  யாவரும் அறிந்த உண்மைகளிலும் ஒரு உண்மை ஒளிந்துக் கொண்டே தான் உள்ளது போலும். அது போலவே பலரும் அறிந்த உண்மையையும் மீண்டும் பல காலம் கழித்து அதன் உண்மைத்தன்மையை எவரேனும் காரியமாக அசைத்திட முற்படுகையில் அந்த உண்மையை மீண்டும் மீண்டும் அறுதி செய்ய வேண்டி உள்ளது காலத்தின் தேவையாகிறது. அவ்வாறான சில உண்மைகளை திரும்பவும் உறுதியாக சொல்வதும் ஒளிந்திருந்த அல்லது அவ்வளவாக கவனம் பெறாத சில உண்மைகளுக்கு வெளிச்சம் பாய்ச்சும் ஒரு முக்கியமான புத்தகம் தான் இது.   THE MURDERER, THE MONARCH AND THE FAKIR.   காந்தியடிகளின் கொலை என்பது ஒன்றும் மர்மமான ஒன்றல்ல. எவர் சுட்டார் எதற்காக சுட்டார் என்பதெல்லாம் தெரிந்த உண்மைகள். உண்மையில் சுட்டவன் தன்னை யார் என்று ஒளித்து வைக்கவில்லை , அவனுடைய நோக்கமும் தெளிவானதே. இதிலென்ன சுவாரசியம் மீண்டும் மீண்டும் வருகிறது ? கோட்சே ஆம் நாந்தான் சுட்டேன் என நீதிமன்றத்தில் சொன்னானே பிறகென்ன ? ஆனால் , இவ்வளவுதானா உண்மைகள்… ? கோட்சேவின் தனிப்பட்ட கோபத்தினால் மட்டுமே விளைந்ததா இக்கொலை ? நாந்தான் சுட்டேன் என்று சொன்னதின் பின்னே ஏதேனும் உண்மை மறைக்கப்பட்டதா ? இவைய...

கயிறு - விஷ்ணுபுரம் சரவணன்

  பாரதி புத்தகாலயத்தின் வாத்து ராஜா விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கிளாசிக். ஏற்கெனவே வாசித்து விட்ட போதிலும் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும் மற்றொரு புத்தகம். அதைத் தொடர்ந்து அவரது சிறார்களுக்கான கதைகளை தேடி தேடி வாசித்து வருகிறேன் கடந்த செவ்வாய் அன்று (30.11.21) அன்று இரவு தமிழ்மார்க்ஸ் டிவிட்டர் ஸ்பேசில் தோழர் இ.பா.சிந்தன் சமூக சிந்தனையை தூண்டும் சிறார் புத்தகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். சமூக வலைத்தளங்களில் வெட்டி அரட்டையை விட்டொழித்து உருப்படியாக செயலாற்றுவது என தமிழ்மார்க்ஸ் டிவிட்டர் மக்களைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். அவ்வுரையில் இ.பா. சிந்தன் சில புத்தகங்களைப் பட்டியலிட்டார். அவை கொ.மா.கோ இளங்கோவின் சஞ்சீவி மாமா, பச்சை வைரம், உதயசங்கர் தோழரின் மாயக்கண்ணாடி, சோசோவின் விசித்திர கதை முதலியன. இதில் சஞ்சீவி மாமா பச்சை வைரம் மாயக்கண்ணாடி ஆகியவை ஏற்கெனவே நான் வாசித்துவிட்டேன் என்பதும் அவை உண்மையிலேயே மிக தரமானவை என்பதற்கும் அவை பெற்ற விருதுகளே சாட்சி. இதுவரை படிக்காதவர்கள் அவசியம் படித்திட கோருகிறேன். இந்தப் பரிந்துரையில் அவர் சொன்ன மற்றொரு புத்தகம் தான் விஷ்ணுபுரம்...

Topi Rockets from Thumba - இந்தியாவின் முதல் ராக்கெட் பரிசோதனை முயற்சி

  அது ஒரு கடற்கரையோர கிராமம். இந்தியாவின் தென் எல்லையில் கடைகோடியாய் இருந்த சுவடு தெரியாமல் இருந்திட்ட கிராமம் அது. தனது சிறு சிறு தேவைகளுக்கு தொடங்கி வாழ்வாதாரம் வரைக்கும் கடலையே துணையாக கொண்டிருந்த ஒரு மீனவ சமூகத்தினரே பெரும் சதவிதம். அங்கு ஒரு குட்டி பெண் மேரி…குட்டிப் பெண் மேரிக்கும் அந்த கிராமமே சொர்க்கம். அங்கு கிடைக்கும் கூரியன் கடையின் பழம்பொரி, நீண்டு வளர்ந்திருந்த தென்னை பன மரங்கள்.. கடலில் தினம் எழும் சூரியன் என அவ்வளவும் அந்த கிராமத்தில் கிடைத்திருந்தது அவளுக்கு.   அப்படியான மகிழ்ச்சியான ஒரு நாளில்தான் அக்கிராமம் பரபரப்பாகி ஊர் முழுக்க ஒரே பேச்சாக இருந்தது. அது “இங்கிருந்து வானுக்கு ராக்கெட் விட போறாங்களாம்..” என்பதே அது. ஆம் சுதந்திரம் பெற்று 16 வருடங்களே முடிந்திருக்க தும்பா என்னும் அழகிய குக்கிராமத்திலிருந்து ராக்கெட் விட முடிவு செய்தது அரசு.   அப்பொழுதிலிருந்து தொடங்கி அந்த கிராமம் ராக்கெட் ஏவுதளமாகும் வரை நடப்பதாக விஷயங்களை வடிவமைத்து இந்தியாவின் முதன் முதல் ராக்கெட் ஏவிய அந்த ஆச்சர்ய கணத்தை குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள். ...

வானவாசிகள் - என் பார்வையில்

  விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்த சிட்டுக்குருவியைப் போலே.. இறக்கை விரித்தே இறக்கை விரித்தே வானம் ஏறி…. விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் பறத்தல் என்பது குறியீடு. மனுச பய புள்ளையான நம்முள் எல்லாருக்கும் விமானத்தில் பறத்தலே பெரும் பரவச அனுபவம், உண்மையாகவே இறக்கை முளைத்து பறக்க முடிந்தால்… ஆம் தேவதைகளாகி இறக்கை விரித்து பறந்தோமானால்…அந்த நாள் என்று வரும் என ஏக்க பெருமூச்சு விடலாம்… இல்லை இறக்கை போன்ற ஒரு செயற்கை பொருள் வைத்து பறக்கும் காலமும் வரலாம். அப்பொற்காலம் வெகுவேகமாக வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், உங்களைப் போலவே நானும்.     பறவையை கண்டான்… விமானம் படைத்தான் என்ற அளவே என்னுடைய அறிவியலறிவு… ஆனால் பறத்தல் என்பது எப்படி சாத்தியமாகிறது.. அது ஏன் ஒரு பறவைக்கு இறக்கை நீளமாகவும்.. இருங்கள் இருங்கள்… முதலில் இறகு என்பது இறக்கை என்பது வேறு என்பதும் எனக்கு புரிந்தது இப்புத்தகத்தில் தான். அதாவது இறகு என்பது பலது சேர்ந்ததுதான் இறக்கையாம்.. என்னத்தே 12 வரைக்கும் படிச்சு.. என்னத்தே அதற்கு பிறகு பிஸிக்ஸ் இளங்கலை வேற படிச்சு… அடப்போங்கப்பா.. இது தெரியலயே எனக்கு என அசிங்கமா போச்ச...

லால் சலாம் - நூல் அறிமுகம்

வணக்கம் தோழர் லெனின் அவர்களே! யார் சொன்னது நீங்கள் இறந்துவிட்டதாக? இறந்த பின்னாலும் அவரது செய்கைகளின் மூலமாக நினைக்கப்படுகிற மாமேதைகளில் ஒருவராக நீங்கள்! இப்படி ஆரம்பித்து பாய்ச்சல் வேகத்தில் ஒரு 32 பக்கங்களில் ஒரு மாமேதையின் வரலாற்றின் பல முக்கிய நிகழ்வுகளையும் வெகு சுவைபட சொல்லி நிற்கும் புத்தகம் இது. அநேக வகைகளில் வாழ்க்கை வரலாறுகள் நாம் படித்திருப்போம். அறிஞர் சாமிநாத சர்மாவின் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு தொடங்கி எண்ணற்றோரின் வாழ்க்கை வரலாறு ஆக்கங்கள் நாம் வாசித்திருப்போம். குறிப்பாக தோழர் என். ராமகிருஷ்ணன் அவர்களின் statistics வகை, தோழர் அருணன் அவர்களின் அழகிய தமிழ் வகை, சமீபத்தில் தோழர் ஆதி வள்ளியப்பன் அவர்கள் எழுதிய சிறார்களுக்கான மார்க்ஸ் லெனின், தோழர் சுப்பாராவ் அவர்களின் நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ், எங்கெல்ஸ் பல வகைகளில் ஏராளனமானவற்றை படித்திருப்போம். இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எழுதப்படும் தலைவரையே விளித்து அவருடன் பேசும் வகையிலான என மாறுபட்ட வகை வாழ்க்கை வரலாறு இது. என்னவென எழுதுவது வாசிப்பு அனுபவத்தை? ஒரு 3d பிம்பமாக ஹாலோகிராம் வடிவில் காம்ரேட் லெனின் அவர்கள் முன்...

மாடுகளின் வேலைநிறுத்தம், துள்ளி, உழைப்பாளி வாத்து

  சிறார்களுக்கான புத்தகம் நம்மை மாதிரி பெரிசுகள் ஏன் படிக்க வேண்டும் என என் நண்பர்கள் சிலர் நினைக்கிறார்கள். எந்தப் புத்தகத்திலும் என்ன புதுசா இருக்கப் போகுது என நினைக்கும் நண்பர்களும் இருக்கிறார்கள். ஆனால் நான் தொடர்ந்து சிறார்களுக்கென வரும் நூல்களையும் ஆர்வத்துடன் படித்து வருகிறேன். என்னமோ அதில் ஒரு சந்தோஷம் கிடைக்கிறது.    அப்படியாக நான் வாசித்த மூன்று நூல்களை மட்டுமே இங்கு பேசப் போகிறேன். மூன்றுமே புக்ஸ் பார் சில்ரன் வெளியீடு. மூன்றுமே அன்பு வாகினி என்பவர் மொழியாகத்தில் வந்துள்ளது. 1. துள்ளி 2. உழைப்பாளி வாத்து 3. மாடுகளின் வேலைநிறுத்தம்.    இப்புத்தகங்கள் ஏற்கெனவே புக்ஸ் பார் சில்ரன் வெளியிட்ட ஆதி வள்ளியப்பன் அவர்களின் மொழியாக்கத்தில் நீ கரடி என யார் சொன்னது, இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் என்பவனவற்றின் வகை சார்ந்தது. இவையெல்லாம் சிறார்களுக்கு என மட்டுமே எழுதப்பட்டதா என தெரியவில்லை. அவ்வாறு இருக்கவும் வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. நேற்றைய இரவு என் குழந்தைகளுடனான நேரத்தில் நான் இவ்வாறு சொன்னேன், “எனக்கென்னவோ, இவை குழந்தைகளுக்காகவென எழுதப்பட்டதாக த...