வெறுப்பின் உடற்கூறியல் , இப்படி மொழிபெயர்க்கலாம் என நினைக்கிறேன் . ரேவதி லால் என்னும் பத்திரிகையாளர் எழுதியுள்ள புத்தகம் இது . குஜராத் கலவரம் 2002 இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று . பாசிசத்தின் தொடக்கம் அது . ஒரு மாநிலத்தில் தொடங்கிய பாசிசம் , பின்பு நாட்டின் அரசு அதிகாரமாக உருப்பெற உதவிய கலவரம் . இந்நூலின் ஆசிரியர் குஜராத் கலவரங்கள் 2002 ல் ஈடுபட்ட மூவரின் வாழ்க்கையை ஆராய்ந்து அதன் மூலம் இந்த வெறுப்பின் பின்னணியை அறிய முயல்கிறார் , ' சுமார் 3 வருட உழைப்பில் பல்வேறு சிரமங்கள் இடையே இந்தப் புத்தகம் உருவானது . பாரதி புத்தகாலயத்தின் வெளியீடுகளான ராணா அயூப்பின் குஜராத் கோப்புகள் மற்றும் ஸ்ரீகுமாரின் குஜராத் கலவரம் ஆகிய இரு புத்தகங்களை படித்தவர்களுக்கு இந்தப் புத்தகம் அதிக அதிர்ச்சிகளை தராது . மூன்று வெவ்வேறு பின்னணிகளை கொண்டவர்கள் இந்தக் கலவரங்களில் எவ்வாறு பங்கெடுத்தனர் , கலவரங்களுக்கு பின்னான காலங்களில் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதையே ஆசிரியர் ஆய்ந்து இருக்கிறார் . கலவரம் , மோதல் என என்னதான் சொன்னாலும் அதில் ஈடுபட்ட மக்களின் உளவியலும் , சமூக சுழல் ஆகிய கா...