
இப்புராணங்கள் மூலம்,
தோன்றிய கால, உள்ளடகத்தின் நம்பகத்தன்மை ஆகியவை
எப்போதுமே விவாதத்திற்கு உரியவை.
ராமனும், சீதையும், கிருஷ்ணனும்,
அனுமானும், பரதனும், வாலியும்,
வீமனும் இன்றும் நம்மோடு
கலந்துள்ள பெயர்களே. நாடு
முழுவதும் ஏதோ ஒரு
பெயரில் ராமனாக, கிருஷ்ணனாக,
அர்ச்சுன்னாக, சீதையாக, பாஞ்சாலியாக பலரை காணலாம்.
எனக்கென்னவோ ராமாயணமே ரொம்ப இஷ்டம்.
கம்பனும் ஒரு காரணமோ.
ஆனால், நிச்சயமாய் சொல்லலாம் என் தமிழ்
ஆர்வத்திற்கு கம்பன் கழகமே
காரணம். சிறுவயதில் இராமனின் வீரத்தில், அனுமனின் சூரத்தனத்தில் என
இராமாயணம் பிடித்திருந்தது. ஒரு
சமயத்தில் வாலி மீது
இழைக்கப்பட்ட துரோகமும், கும்பகர்ணனின் தியாகமும், சீதையின் துன்பமுமே ஈர்த்திருக்கிறது.
யோசனை செய்கையில் சீதையும், பாஞ்சாலியும் இந்த இரு
புராணங்களிலுமே மிகவும்
வருத்தம் அடைந்தவர்கள். பாவம்,
இருவருமே வஞ்சிக்கப்பட்டார்கள். அந்த
ராவணனை, துச்சாதன துரியோதனை என்ன வெல்லாம் செய்யலாம் என்ற
கோபங்கள் எழுந்த ஒரு
காலம் உண்டு.
ஆனால், வாசிக்க
துவங்குகையில் எனக்கு
கிடைத்த புத்தகமொன்று இந்த
இதிகாச புராணங்கள் குறித்த
பார்வையினை கூர்மையாக்கியது. அந்தப்
புத்தகம் எம்.டி.வாசுதேவன் நாயரின், காலச்சுவடு வெளியீடான இரண்டாம் இடம். வீமனை
கதை நாயகனாக்கி அந்த
நாவல் செய்த ரசவாதங்கள்தான் என்ன! அன்றிலிருந்து இதிகாச புராணங்களை மீள்பதிவு, பகுப்பாய்வு என எதை
செய்தேனும் ஒரு நூல்
வந்தால் அதன் மீது
ஒரு ஈர்ப்பு தொடர்கிறது.
காண்டேகரின் யயாதி,
ச.சுப்பாராவின் இரண்டாவது ஞானம் என அவ்வரிசை
தொடர்கிறது. சமீபத்தில் நான் படித்து வியந்த ஒரு புத்தகம் மீட்சி. ஆந்திர எழுத்தாளர்
ஓல்காவின் படைப்புகளை கௌரி கிருபானந்தன் மிக அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார்.
இராமாயண கதாபாத்திரங்களே கதை மாந்தர்கள். அதுவும்
பெண் கதாபாத்திரங்களே முக்கியதஸ்ர்கள். சீதை, அகலிகை, சூர்ப்பனகை, ஊர்மிளா ஆகியோரே
கதாபாத்திரங்கள்.
காதலி, கணவன், தாய் என்ன எத்தகைய பதவியை வகித்தாலும்
ஆண்கள் தங்கள் அதிகாரம் கொண்டே ஒரு பெண்ணை எப்போதும் பெண்ணாகவே நிலைகுலைய செய்வதை பார்க்க
முடிகிறது. தாயாக இருந்தாலும் லவ குசர்கள் சீதாபிராட்டியை பெண்ணாகவே பார்ப்பதும் “அவள் ஒரு பெண்” என்று நிலை கீழே தள்ளுவதும்
வெறுக்கத்தக்க இயல்பாக காண முடிகிறது. இக்கதைகளை படிக்கும் ஆண்கள் நிலை குலைவது நிச்சயம்.
நிலை மாற வேண்டியது அவசியம். மீள்வாசிப்பு என்னும் பதத்தின் அவசியம் இதிகாச புராணங்களைப்
பொறுத்தவரையில் ஒரு எளியவரின் குரலாக, ஒடுக்கப்பட்டவரின் குரலாக ஓங்கி ஒலிப்பதை காணலாம்.
“மீட்சி” என்கிற இந்த கதை தொகுப்பும் அவ்வாறே.
அடங்கமறு, அதிகாரத்தை கைப்பற்று என்பது வலியவர்களுக்கு
மிகவும் பிரச்சனையான சொற்றொடராக இருக்கலாம். ஆனால் ஒடுக்கப்பட்ட இனத்திற்கு, மனிதர்களுக்கு
இவை வலிமை தருபவையே. காதலி, மனைவி, தாய் என்ன ஒரு பெரிய பதவியினை சமூகம் சூட்டிடினும்
பெண் தான் எப்போதும் பெண்ணாகவே, தனக்கே உண்டான ஒரு சுயத்தை உடையவளாக இருக்கையில் கிடைக்க
கூடிய மன நிம்மதியை, ஒரு பெருமையை, பெருமித்த்தை கொண்டாடும் கதை தொகுப்பு இது.
அவசியம் பலரும் படிக்க வேண்டிய ஒன்று.
மீட்சி – ஒல்கா(தெலுங்கு மூலம்) – தமிழில் :
கௌரி கிருபானந்தன், விலை ரூ. 70/- -பாரதி புத்தகாலயம்
Comments