Skip to main content

Posts

Showing posts from June, 2009

மனிதம் மறைந்த பொழுதில்..............

மனித குல நாகரிக வளர்ச்சியில் நாம் நெடுந்தூரம் பயணித்துவிட்டோம் என்று நினைக்கும் போதெல்லாம் இது நிகழ்ந்துவிடுகிறது. மனித இனத்தின் பண்பாட்டு கலாச்சார வளர்ச்சியில் இது போன்ற நிகழ்வுகள் நம்மை பின்னுக்கு இழுக்கிறது. 30 வருட பெருமைமிகு வளர்ச்சி என்பதை குலைப்பதற்காக மேற்கு வங்கத்தில் மனித வடிவில் விலங்குகளினும் கீழானவர்கள் நடத்தும் வெறியாட்டம் ஜூன் 10ல்தான் தொடங்கியது. மேற்கு வங்க "லால்கர்" பகுதியில் அம்மாநில முதல்வர் தோழர் புத்ததேவ் மீது கடந்த ஆண்டு மாவோயிஸ்டுகளால் நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதல் தோல்வியில் முடிந்தது. அப்போது அம்மாநிலத்தின் வீரமங்கை மம்தா பானர்ஜி அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை, மார்க்சிஸ்ட் கட்சி பொய் சொல்கிறது என்று ஒரு முழு பரங்கிக்காயை சோற்றுக்குள் மறைக்க முயன்றார். இதுபோன்ற பல உளறல்களுக்கும், விசித்திரமான செய்கைகளுக்கும் அவரது பெயர் பிரசித்தி பெற்றது. இப்போது அந்த பொய் பிகாஷ் என்ற மாவோயிஸ் ட் தலைவனின் விஷ நாக் கி ல் வழிந்து வெளிறி வி ட் டது. சென்ற திங்கட்கிழமை (15।06.09) அன்று இரவு 9 மணி அளவில் ndtv யில் தான் அந்தக் காட்சி முதன் முதலில் காண்பிக்கப்பட்டது.

ஆங்கில செய்தி சேனல்கள்

நேற்று முன் தினம் ஏதேச்சையாய் TIMES NOW சேனலை ரிமோட்டில்திருப்பியபோது (அப்பாடா, அர்னாப் கோஸ்வாமி இல்லை), வழக்கம்போல ஒரு "breaking news" ஓடிக்கொண்டிருந்தது. "Democracy at low" என்ற தலைப்பிட்டு ஒருபெண்மணி கையில் மைக்கோடு கத்திக் கொண்டிருந்தார். விஷயம் இதுதான். கேரள மாநில மேதகு(!) ஆளுநர் அவர்களுக்கு சௌதி யில் இருந்து ஒருகொலை மிரட்டல் வந்ததாம். 24 மணி நேரத்திற்குள் அவர் கொலைசெய்யப்படலாம் என்று. சி.பி.எம் கேரள மாநில செயலர் தோழர் பினராயி விஜயன்மீது CBI விசாரணை நடத்த உத்தரவிட்ட அந்த அதிநியாய செயலுக்குத்தான் இந்தமிரட்டலாம். ஒரு ஆளுநர் மீது கொலை மிரட்டல் என்பது உயர்ந்த இந்தியஜனநாயகத்திற்கு எத்தனை பெரிய அவமானம் என்று திரும்ப திரும்ப அந்தபெண்மணி கிட்டதட்ட அலறிக்கொண்டிருந்தார். ஆங்கில செய்தி சேனல்கள் இப்படிப்பட்டவர்களைத்தான் தேர்வு செய்கிறார்கள். மைக்கை கையில் வைத்துக்கொண்டு ஏன் கத்துகிறார்கள் என்பது என் சிற்றறிவுக்கு மட்டும் ஏனோ எட்டமாட்டேன் என்கிறது. என்னங்க, என்ன சொல்ல வர்றீங்க? "ஆயிலா" புயலில் வங்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் சிக்கித் தவிக்கையில் அந்த மாநில முத

முதல் நாள்

அலுவலகம் வந்ததிலிருந்தே ஒரே படபடப்பாய் இருந்தது। செய்வதற்கு வேலைகள் பல இருந்த போதிலும் ஒன்றும் செய்ய மனமில்லாமல் இருந்தது। மேனேஜர் ஏதாவது சொல்லபோகிறார் என்று ஒன்று இரண்டு ஃபைல்களை மேஜை மேல் பிரித்து வைத்து விட்டேன்। அபிக்குட்டி ஞாபகமாகவே இருக்கிறது। அபிக்குட்டி இன்றுதான் பள்ளிக்கு முதல்நாள் சென்றிருக்கிறாள்। பயங்கர வாயாடி। பார்க்கிறதையெல்லாம் அப்படியே அபிநயம் பிடித்து காட்டும் சமர்த்துகுட்டி। பேச பேச வாய் ஓயாது அவளுக்கு। நானும் உம்கொட்டிக் கொண்டே இருக்கணும்। அவங்க அப்பாதான் சொல்லுவார், பேசியே பேசியே என்னமா வளர்ந்துட்டுது இந்தக் குட்டி என்று. அவ கைகளை விரித்து, காக்கா வடை கதை சொல்றதை பார்க்கணுமே, அழகு, அழகு. இன்றைக்கு ஸ்கூலுக்கு அவர்தான் கொண்டுபோய் விட்டு வந்தார்। "நீ வந்தா அவ ரொம்ப நடிப்பா" என்று என்னை அலுவலகத்திற்கு போக சொல்லிவிட்டார்। அவருக்கு இன்றைக்கு இரவு ஷிப்ட்। எப்படி இருக்கிறதோ குழந்தை?!. பெரிய ஸ்கூல், ரொம்ப கேர் எடுத்துப்பாங்க, ஒன்றும் பயப்பட வேண்டாம், நிம்மதியாக இருக்கலாம், +2 வரைக்கும் கவலையில்லை என்று என்னென்னமோ சமாதானம்

குறுஞ்செய்தி

"வணக்கம் தோழர்". "வணக்கம், எப்படி இருக்கீங்க‌". "டீ சாப்பிடலாமா" "சரி தோழர். இந்த சோம்நாத் சொன்னதை பார்த்தீகளா" செல்போனில் எவரோ அழைக்க, பார்த்துவிட்டு கட் செய்தேன். "என்னது தோழர், அவரது கட்சியை விட்டு தூக்கிட்டோம்ல, பின்ன என்னவாம்" "அட ஏன் தோழர், அவர் சொல்றாரு, கட்சியோட இந்த தோல்விக்கு பிரகாஷ் காரட்தான் காரணமாம்" "என்னங்க, இது. ஏன் இப்படியெல்லாம் உளறிகொட்டுகிறார்" இம்முறையும் செல்போனில் எவரோ அழைக்க, பார்த்துவிட்டு கட் செய்தேன். "இதுகூடவா தெரியாது, கம்யூனிஸ்ட் கட்சியில் கூட்டு தலைமைதானே முடிவு செய்வது, தனி நபர் எப்படி பொறுப்பாக முடியும்." "அப்படி சொல்லுங்க தோழர், அந்த ஆள் எப்படி இத்தனை வருஷமா கட்சியில் இருந்தார், எப்படி கட்சி இப்படிபட்ட ஆளையெல்லாம் வைச்சுக்கிட்டுது" மீண்டும் செல்போனில் எவரோ அழைக்க, பார்த்துவிட்டு கட் செய்தேன். "யார் தோழர், என்ன முக்கியமோ கட் பண்றீங்க" "முக்கியம் கிக்கியம்லாம் இல்ல தோழர், எங்க வூட்டம்மாதான். வேறு வேலை இல்ல, ஊருக்கு போனாலும் நாளைக்கு மூணு நாலு தடவை போன

கேரளா எழுப்பிய கேள்விகள்

இப்போதுதான் முதல் தடவையாய் என் குடும்பம், அண்ணனுடையது, அப்பா அம்மா என எல்லாரும் கேரள மாநிலம் குருவாயூருக்கு திருமணம் நிமித்தமாய் சென்றிருந்தோம். திருமணத்திற்கு இரன்டு நாள் முன்பே நாங்கள் அங்கிருந்தோம். திருமணம் சாக்காய் வைத்துக்கொண்டு கடவுளின் சொந்த நிலமான கேரளத்தில் சில பகுதிகளையாவது காணலாம் என்பதே எங்கள் திட்டம். திட்டத்தின்படியே முதல் நாள் குருவாயூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான 51 யானைகள் ஒன்றாக வைக்கப்பட்டிருக்கும் புன்னத்தூர் யானைகோட்டம் சென்றோம். அப்பப்பா, அது நிச்சயமாய் பிரம்மாண்டம். முதலாவது, விலங்குகள் இருக்கின்ற இடத்தில் ஒரு வீச்சம் இருக்குமே அங்கு இல்லை. குழந்தைகள் போல் ஒவ்வொரு யானையும் பாகனோடு குளிப்பது, தின்பது என்று அட, அட. காண வேண்டும் இலட்சம் கண்கள், சீதாதேவி தன் காலுக்கு நிகரோ பெண்கள் என்று கர்நாடக கீர்த்தனை ஒன்று உண்டு. இலட்சம் கண்கள் தேவைபடாவிட்டாலும், 51ஆவது நிச்சயம் வேண்டும். உள்ளே பிரவேசிக்கும்போதே ஒரு குட்டி யானை தலையாட்டி ஆட்டி எங்களை வரவேற்றது. மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பி அம்மாவின் ஆசைக்கிணங