மனித குல நாகரிக வளர்ச்சியில் நாம் நெடுந்தூரம் பயணித்துவிட்டோம் என்று நினைக்கும் போதெல்லாம் இது நிகழ்ந்துவிடுகிறது. மனித இனத்தின் பண்பாட்டு கலாச்சார வளர்ச்சியில் இது போன்ற நிகழ்வுகள் நம்மை பின்னுக்கு இழுக்கிறது. 30 வருட பெருமைமிகு வளர்ச்சி என்பதை குலைப்பதற்காக மேற்கு வங்கத்தில் மனித வடிவில் விலங்குகளினும் கீழானவர்கள் நடத்தும் வெறியாட்டம் ஜூன் 10ல்தான் தொடங்கியது. மேற்கு வங்க "லால்கர்" பகுதியில் அம்மாநில முதல்வர் தோழர் புத்ததேவ் மீது கடந்த ஆண்டு மாவோயிஸ்டுகளால் நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதல் தோல்வியில் முடிந்தது. அப்போது அம்மாநிலத்தின் வீரமங்கை மம்தா பானர்ஜி அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை, மார்க்சிஸ்ட் கட்சி பொய் சொல்கிறது என்று ஒரு முழு பரங்கிக்காயை சோற்றுக்குள் மறைக்க முயன்றார். இதுபோன்ற பல உளறல்களுக்கும், விசித்திரமான செய்கைகளுக்கும் அவரது பெயர் பிரசித்தி பெற்றது. இப்போது அந்த பொய் பிகாஷ் என்ற மாவோயிஸ் ட் தலைவனின் விஷ நாக் கி ல் வழிந்து வெளிறி வி ட் டது. சென்ற திங்கட்கிழமை (15।06.09) அன்று இரவு 9 மணி அளவில் ndtv யில் தான் அந்தக் காட்சி முதன் முதலில் காண்பிக்கப்பட்டது....