முதலிலேயே சொல்லிடறேன் ஆமா, இது புத்தக விமர்சனம் அல்ல. இது மட்டுமல்ல இதற்கு முன் நான் படித்த புத்தகங்கள் குறித்த பதிவும் இனி வருபவையும் அப்படியே. ஒரு புத்தகத்தை படிச்சா எனக்கு என்ன பதிய தோன்றுமோ, அதையே பதிவிடுகிறேன். (அப்பாடா..!). ரொம்ப ரொம்ப தயங்கித்தான் புத்தக கண்காட்சியில் வாங்கினேன். அஞ்ஞாடிக்கு விருதெல்லாம் கொடுத்தது தெரிந்த பிறகுமே எனக்கு தயக்கந்தான். ஏனென்று தெரியவில்லை. இருந்தாலும் என்னவோ தோணி புத்தகம் எடுத்தேன். ஒரு புத்தக கண்காட்சியில் வாங்கியவுடன் அப்புத்தகத்தை படிப்பதெல்லாம் உடனே சாத்தியப்படுவதில்லை. சில நேரங்களில் அபூர்வமாக உடனே படிப்பதும் உண்டு. அது புத்தகத்தின் அளவினை பொறுத்தது. முதல் 10 பக்கங்களை படித்து முடிப்பதற்குள் ரொம்ப சிரமாகிவிட்டது. இப்படியே இன்னும், 25 பக்கங்கள் போனால் அவ்வளவுதான். 180 பக்கமே உள்ள இந்த நாவல் மட்டுமல்ல, இனி பூமணி அவர்களுக்கு டாட்டா காட்டிவிடலாம் என்று கூட எண்ணந்தான். சென்னையை ஒட்டிய குட்டி நகரமான காஞ்சிபுரத்தில் பிறந்து வளர்ந்து இதோ இனி வரும் காலமும் கூட புதுவையிலே என்றான எனக்கு அதாவது முழுக்க முழுக்க வட தமிழகத்துகாரனுக்கு தென் திசை தமி...