குழந்தை இலக்கியம் குறித்து கருத்து சொல்லவெல்லாம் நான் இல்லை . இருந்தாலும் கடினமாக வார்த்தைகளை , தொடர் சங்கிலிகளாக வாக்கியங்களை அமைத்தல் என்பதை SMS காலத்தில் குழந்தைகள் பெரிதும் விரும்புவதில்லை என்பது என் கணிப்பு . இவையெல்லாம் தாண்டி வாசிக்க வைக்க வேண்டுமென்றால் , ஒன்று அவை சித்திரக்கதையாக இருக்க வேண்டும் அல்லது விஷ்ணுபுரம் சரவணின் வாத்து ராஜா போல் மிகவும் விறுவிறுப்பாக இருக்க வேண்டும் . என் வீட்டில் அப்படித்தான் , இப்படியே எங்கும் என நான் சொல்லவில்லை . என் அனுமானம் படியே Dear Mrs. Naidu இருக்கிறது . 12-13 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் எளிதாக படிக்கக் கூடிய புத்தகம்தான் . பெங்களூர் மாநகரில் ஒரு ” காக்கா முட்டை ” குழந்தை . பெண் குழந்தை . 12 வயதான சரோஜினி . அவள் தன் பள்ளியில் கொடுக்கப்பட்ட பிராஜெக்ட்களில் ஒன்றாக ஒரு பிரபலத்திற்கு கடிதம் எழுதுகிறாள் . அது ஆன்னி மிஸ்ஸால் கொடுக்கப்பட்டது . சுற்றுச்சுவர் , கேட் போன்றவை இல்லாத வழக்கமான அம்பேத்கர் கார்ப்பரேஷன் ஸ்கூலில் பிராஜெக்ட் கொடுப்பது என்றால...