இந்தப் பதிவு தாமதமாகி போனதற்கு மன்னிக்கவும். இனி தொடரவும். ......... ஜானுஸ் கோர்சாக்கின் பிறப்பு வளர்ப்பினை குறித்த வரலாற்றினை நான் சொல்லப் போவதில்லை. அவர் வாழ்க்கையை வடிவமைத்ததை மட்டுமே சொல்லப் போகிறேன். அதுதான் தேவையானது என்றே நான் மிகவும் நம்புவதால். ஐக்கிய நாடுகள் சபை 1979 ஆம் வருடத்தினை "உலக குழந்தைகள் வருடம்" என்று சொன்ன அதே நேரத்தில் " இது ஜானுஸ் கோர்சாக்கின் வருடம்" என்றும் கூறும் அளவிற்கு அவரது வாழ்க்கை இருந்தது. "நான் என்னை யாரும் அன்பு செய்யவோ, ஆதரிக்கவோ ஆசைப்படவில்லை, மாறாக நான் பலரையும் நேசிக்க அன்பு செலுத்தவே ஆசைப்படுகிறேன். எனக்கு எந்த உதவியும் யாரும் செய்யவேண்டியதில்லை. ஆனால் நான் இந்த பரந்துபட்ட உலகில் பலருக்கும் உதவுவதை கடமையாக நம்புகிறேன்" இவ்வரிகளின் மூலம்தான் நமக்கு கோர்சாக் அறிமுகமாகிறார். 1878ல் போலந்து நாட்டில் ஹென்ரிக் கோல்ட்ஸ்மித் என்ற மனிதனாக பிறக்கிறார் நம் கோர்சாக். 18 வயதில் தன் தந்தையை இழந்து கஷ்டப்படுகிற சமயத்திலும், படிப்போடு இரவு பொழுதுகளில் கதை, கவிதை, பாடல்கள் படைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இவரது 20வது வயதில் ...